உள்ளடக்கத்துக்குச் செல்

வாதக் காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாதக் காய்ச்சல்
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் நுண்ணுயிரி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஇதயவியல்
ஐ.சி.டி.-10I00.-I02.
ஐ.சி.டி.-9390392
நோய்களின் தரவுத்தளம்11487
மெரிசின்பிளசு003940
ஈமெடிசின்med/3435 med/2922 emerg/509 ped/2006
பேசியண்ட் ஐ.இவாதக் காய்ச்சல்
ம.பா.தD012213

வாதக் காய்ச்சல் (Rheumatic fever) என்பது தொண்டையில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக உண்டாகும் ஓர் அழற்சி நோயாகும்.[1] இந்நோய் பொதுவாக இதயம், மூட்டுக்கள், தோல் மற்றும் மனித மூளையைப் பாதிக்க கூடியது.[2]

ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பையோஜீன்ஸ் என்னும் நுண்ணுயிரி (பாக்டீரியா) தொண்டையில் ஏற்படுத்தும் அழற்சியின் பிறகு இரண்டு அல்லது நான்கு வாரங்கள் கழித்து இந்நோய் ஏற்படக்கூடும்.[2] சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் மூன்று சதவீதம் பேருக்கு இவ்விதமான வாதக் காய்ச்சல் வர வாய்ப்புண்டு.[3] இக்கிருமியை அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலம் முயலும்போது, அது உடலின் திசுக்களையே பாதிப்புக்குள்ளாக்குவதால் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்[தொகு]

பெரியஅறிகுறிகள்
 1. வீக்கத்துடன் மூட்டு வலி (பன்மூட்டழற்சி)
 2. இதயத்திசு அழற்சி
 3. தோலுக்கடியில் சிறு கட்டிகள்
 4. தோல் சிவந்து போதல்
 5. கை, கால் நடுக்கம்
சிறிய அறிகுறிகள்
 1. வீக்கமில்லா மூட்டு வலி
 2. காய்ச்சல்
 3. அழற்சி குறியீடுகள்
 4. இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமாதல்
 5. மின் இதயத்துடிப்பு வரைவு (இசிஜி) மாறுபாடு

பாதிப்புகள்[தொகு]

இந்நோய் இதய வால்வுகளை குறிப்பாக ஈரிதழ் வால்வினை நிரந்தர பாதிப்புக்குள்ளாக்குகிறது. வளரும் நாடுகளில் இதன் தீவிரம் மிகுதியாக உள்ளது. இதயத்தில் உள்ள ஈரிதழ், மூவிதழ் மற்றும் மகாதமனியின் வால்வுகளில் சுருக்கம் அல்லது கசிவு ஏற்படலாம்.

சிகிச்சை[தொகு]

வாதக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பெனிசிலின், ஆஸ்பிரின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். வால்வு பாதிப்பு மிகுதியாக இருப்பின் அறுவைச்சிகிச்சைத் தேவைப்படலாம்.

தடுப்பு முறை[தொகு]

தொண்டை அழற்சியால் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வாதக் காய்ச்சல் வராது தடுப்பதற்கு குறித்த காலம் வரை குறைந்த அளவில் பெனிசிலின் ஊசி அல்லது மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.[4]

மேற்கோள்கள்[தொகு]

 1. Lee, KY; Rhim, JW; Kang, JH (March 2012). "Kawasaki disease: laboratory findings and an immunopathogenesis on the premise of a "protein homeostasis system".". Yonsei medical journal 53 (2): 262–75. doi:10.3349/ymj.2012.53.2.262. பப்மெட்:22318812. 
 2. 2.0 2.1 Marijon, E; Mirabel, M; Celermajer, DS; Jouven, X (10 March 2012). "Rheumatic heart disease.". Lancet 379 (9819): 953–64. doi:10.1016/S0140-6736(11)61171-9. பப்மெட்:22405798. 
 3. Ashby, Carol Turkington, Bonnie Lee (2007). The encyclopedia of infectious diseases (3rd ed.). New York: Facts On File. p. 292. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7507-2.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 4. Spinks, A; Glasziou, PP; Del Mar, CB (5 November 2013). "Antibiotics for sore throat.". The Cochrane database of systematic reviews 11: CD000023. doi:10.1002/14651858.CD000023.pub4. பப்மெட்:24190439. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாதக்_காய்ச்சல்&oldid=3627248" இலிருந்து மீள்விக்கப்பட்டது