குருதி ஊட்டக்குறை இதய நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குருதியூட்டக்குறை இதய நோய்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு இதயவியல்
ICD-10 I20.-I25.
ICD-9-CM 410-414
நோய்களின் தரவுத்தளம் 8695
ஈமெடிசின் med/1568
Patient UK குருதி ஊட்டக்குறை இதய நோய்
MeSH D017202

குருதியூட்டக்குறை இதய நோய் (Ischaemic heart disease) என்பது இதயத் தசைக்குக் குருதியோட்டம் குறைவாகச் செல்வதால் ஏற்படும் நோய்களின் தொகுப்பாகும். வழமையாக முடியுருநாடி நோயால் (முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு) இது ஏற்படுகின்றது, எனினும் வேறு காரணங்களும் உண்டு. இந்நோய் வயது, புகைப்பிடித்தல், உயர் குருதிக் கொலசுடிரோல், நீரிழிவு, உயர் குருதி அழுத்தம் போன்ற சில காரணிகளால் பெருகுகின்றது; இது பெண்களை விட ஆண்களிலேயே பொதுவாகக் காணப்படுகின்றது, இந்நோய் மரபணு வழியாகவும் கடத்தப்படலாம். ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கு இந்நோய் இருந்தால் பிள்ளைகளும் பாதிக்கப்படும் தீவிளைவு உண்டு.

குருதியூட்டக்குறை இதய நோய் உண்டாவதற்கான மிக முக்கியமான காரணி முடியுரு நாடி கூழ்மத்தடிப்பு ஆகும். இதனால் குறிப்பிட்ட இதயத் தசைப் பகுதிக்கு குருதி விநியோகம் குறைகின்றது. குருதியூட்டக்குறையால் மார்பு நெருக்கு போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. நிலையான மார்பு நெருக்கு மற்றும் நிலையில்லா மார்பு நெருக்கு என்று மார்பு நெருக்கு மேலும் வகுக்கப்படுகின்றது. இவற்றில் அறிகுறிகள் முற்றிலும் அற்ற நிலை தொடங்கி நோய் அறிகுறிகள் தீவிரம் பெறும் நிலை வரை நோய் காணப்படலாம், மேலும் இவை ஒருவரது செயற்பாட்டிலும் தங்கி உள்ளது; சிலருக்கு ஓய்விலேயே நோய் அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் வேறு சிலருக்கு சிறிய வேலைகளின் போது அல்லது பெரிய வேலைகளின் போது மட்டும் ஏற்படலாம்.