சீரற்ற நெஞ்சுத்துடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரற்ற நெஞ்சுத் துடிப்புகள்
கலைஞனின் பார்வையில் மூளைக்கு இரத்தம் செல்லாது மயக்கநிலையில் உள்ள பெண்ணின் படம். சீரற்ற நெஞ்சுத் துடிப்புகளை அடுத்து இவ்வாறு மயக்கமுறலாம்.
சிறப்புஇதயவியல்
ஒத்த நிலைமைகள்இதயத் துடிப்பு மிகைப்பு

சீரற்ற நெஞ்சுத் துடிப்புகள் (Palpitations, படபடப்பு) இயல்புக்கு மாறாக உணரப்படும் இதயத் துடிப்புகள்; இவை நெஞ்சத்தில் ஏற்படும் இதயத் தசை சுருக்க விரிப்புகளை உணரும்விதமாக கடுமையாக, துரிதமாக, சீரற்று இருக்கும்.[1]

உணர்குறிகளாக விரைவான துடிப்புகள், அசாதரண விரைவில் அல்லது சீரற்ற இதயத் துடிப்புகள் காணப்படும்.[1] படபடப்பு ஒரு உணர்ச்சி சார் அறிகுறியாகும். துடிப்பை இழத்தல், நெஞ்சு விரைவாக அடித்துக் கொள்ளுதல், நெஞ்சு அல்லது கழுத்தில் குத்துவது போன்று உணர்தல், மார்பு ஏறி இறங்குவது என நோயாளிகளால் விவரிக்கப்படும்.[1]

படபடப்பு பதகளிப்புடன் தொடர்புள்ளது; படபடப்பு இருப்பதால் இதயத்தில் அமைப்பு சார்ந்த அல்லது செயல்திறன் சார்ந்த குறைபாடு இருக்க வேண்டியதில்லை. இருப்பினும் இது இதய நோய்களுக்கான ஓர் அறிகுறியாக இருக்கலாம். சீரற்ற நெஞ்சுத் துடிப்புகள் இடைவிட்டு நிகழலாம். இதன் இடைவெளி நேரமும் இருப்பு நேரமும் மாறியவாறிருக்கலாம். தொடர்ந்தும் படபடப்பு இருக்கலாம். இதனுடன் தொடர்புடைய அறிகுறிகளாக தலைசுற்றல், மூச்சுத் திணறல், வியர்வை, தலைவலிகள், நெஞ்சு வலி ஆகியன உள்ளன.

இதய நோய்கள், அதிதைராய்டியம், இதயத் தசையை பாதிக்கும் நோய்களான இதயத்தசைப் பெருக்க நோய், குருதியில் ஆக்சிசன் அளவைக் குறைக்கும் ஈழை நோய், எம்விசிமா; முந்தைய இதய அறுவை; சிறுநீரக நோய்கள்; குருதி இழப்பு மற்றும் வலி; உளச்சோர்வு போக்கிகள், இசுடாட்டின்கள், மதுபானம், நிக்காட்டீன், காஃவீன், கோக்கைன், உளஊக்கி மருந்துகள் போன்ற மருந்துகள்; மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் இவற்றின் மின்பகுளி சமநிலைக் குலைவு; டயுரின், ஆர்ஜினின், இரும்பு, விட்டமின் B12 போன்ற நுண்சத்துகளின் குறைவு ஆகியவற்றால் சீரற்ற நெஞ்சுத் துடிப்புகள் ஏற்படலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வகைப்பாடு
வெளி இணைப்புகள்