உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனைத்திருக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Manta|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
ஆனைத்திருக்கை
புதைப்படிவ காலம்:23–0 Ma[1]
Early Miocene to present
மாலைத்தீவுகளின் தரவந்தூவில் மந்தா அல்பிரடி
தாய்லாந்தின் ஹின் டேங்கில் உள்ள மாண்டா பைரோஸ்ட்ரிஸ்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Manta
மாதிரி இனம்
Cephalopterus manta
Bancroft, 1829
Species

Mobula alfredi
Mobula birostris
Mobula hynei

ஆனைத்திருக்கைகள் காணப்படும் பகுதி

ஆனைத் திருக்கை (Manta ray) என்பது மொபுலா பேரினத்தைச் சேர்ந்த பெரிய திருக்கை மீன் ஆகும் (முன்னர் இது மண்டா என்ற பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டு இருந்தது). இந்த திருக்கையில் ஏழு இனங்கள் உள்ளன. அதில் பெரிய இனமான, மா பிரியோட்ரச , 7 m (23 அடி) அகலம் கொண்டது, சிறிய இனமான, மா. ஆல்ப்பிரடி, 5.5 m (18 அடி) அகலம் வரை இருக்கும். இந்த இரண்டு திருக்கைகளும் முக்கோண வடிவ மார்புத் துடுப்புகள், கொம்பு வடிவ தலைத் துடுப்புகள் மற்றும் பெரிய, முன்னோக்கி நீண்ட வாயைக் கொண்டுள்ளன. இவற்றின் உடல் விகித்தை ஒப்பிடும்போது உலகின் மிகப்பெரிய மூளையைக் கொண்டுள்ள மீன்கள் இவையாகும்.

ஆனைத் திருக்கைள் மிதவெப்பமண்டல, அயன அயல் மண்டல, வெப்பமண்டல நீரில் காணப்படுகின்றன. ஆனைதிருக்கையில் உள்ள மா. பிரியோட்ரசு சிற்றினத் திருக்கையானது தனித்தனியாகவோ அல்லது குழுக்களாகவோ திறந்த பெருங்கடல்களில் வலசை போகின்றன. அதே சமயம் மா. ஆல்ப்ரெடி திருக்கை வகையானது கடற்கரையோரமாக வசிப்பதாக உள்ளது. இவை கடல்நீரை வாயில் வடிகட்டி அதிலிருந்து உணவை சேகரிக்கின்றன. இதன்வழியாக இவை அதிக அளவு மிதவை விலங்குகளை உண்கின்றன. இவற்றிற்கான உணவை இவை நீந்தும்போது திறந்த வாயில் சேகரித்து வடிகட்டுகின்றன. இவற்றின் உணவில் பெரும்பாலானவை (73%) மிதவை நுண்ணுயிரி மூலங்களிலிருந்து வந்தவை என்று ஆராய்ச்சி கூறுகிறன்றன. இவற்றின் கர்ப்பம் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடிக்கும் உள்பொரி முட்டைகளை வயிற்றுக்குளேயே பொரித்து பின்னர் குட்டிகளை ஈணுகின்றன. இவை தங்கள் உடலில் உள்ள ஒட்டுண்ணிகளை அகற்றுவதற்காக சுத்தம் செய்யும் மீன்களின் உதவியை நாடுகின்றன. திமிங்கலங்களைப் போலவே, அறியப்படாத காரணங்களுக்காக இவை கடலில் துள்ளித் தாவி குதிக்கின்றன.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் இந்த இரண்டு இனங்களும் அழிவாய்ப்பு இனம் என பட்டியலிடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசுபாடு, மீன்பிடி வலைகளில் சிக்கி இறத்தல், சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இவற்றின் செவுள் வாரிகளுக்காக வேட்டாயாடப்படுதல் ஆகியவை இவற்றை அழியும் நிலைக்கு தள்ளியுள்ளது. இவற்றின் மெதுவான இனப்பெருக்க விகிதம் இந்த அச்சுறுத்தல்களை அதிகப்படுத்துகிறது. வனவிலங்குகளின் புலம்பெயர்ந்த இனங்கள் பற்றிய மாநாட்டின் ஒப்ந்தங்களின் வழியாக இவை பன்னாட்டு கடற்பகுதியில் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இவை கரையை ஒட்டிய பகுதிகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளன. இவை கூடும் பகுதிகள் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக உள்ளன. ஒரு சில நீரியல் காட்சிசாலைகளில் மட்டுமே இவை வளர்க்க போதுமான வசதிகள் உள்ளன.

குறிப்புகள்[தொகு]

  1. "Manta Bancroft 1829 (manta)". Paleobiology Database. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013. Click on "Age range and collections".
  2. Bancroft, Edw. Nath. (1829). "On the Fish known in Jamaica as Sea-Devil". The Zoological Journal 4: 444–457. https://www.biodiversitylibrary.org/page/27485360. 
  3. Marshall, A.; Kashiwagi, T.; Bennett, M.B.; Deakos, M.; Stevens, G.; McGregor, F.; Clark, T.; Ishihara, H. et al. (2011). "Manta alfredi". IUCN Red List of Threatened Species 2011: e.T195459A8969079. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T195459A8969079.en. https://www.iucnredlist.org/species/195459/8969079. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனைத்திருக்கை&oldid=3927464" இலிருந்து மீள்விக்கப்பட்டது