உள்ளடக்கத்துக்குச் செல்

அறந்தாங்கி நிஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அறந்தாங்கி நிஷா
தாய்மொழியில் பெயர்நிஷா
பிறப்புஅக்டோபர் 12, 1983
அறந்தாங்கி, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்சின்னத்திரை நயன்தாரா, கருப்பு ரோஜா
பணிநடிகை, நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி ஆளுமை
செயற்பாட்டுக்
காலம்
2015 ஆம் ஆண்டு முதல்
அறியப்படுவது
வாழ்க்கைத்
துணை
ரியாஸ் அலி (m. 2010)[1]
பிள்ளைகள்ஹர்சத் ரியாஸ் (மகன்), சபா ரியாஸ் (மகள்) (2) [2]

அறந்தாங்கி நிஷா (இயற்பெயர்: நிஷா: பிறப்பு 12 அக்டோபர் 1983) [3] இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியை சேர்ந்த திரைப்பட நகைச்சுவை நடிகையும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாவார், பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துள்ள இவர்,, மாரி 2 (2018), ஆண் தேவதை மற்றும் திருச்சிற்றம்பலம் (2022) போன்ற படங்களில் சிறப்பாக தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டியதற்காக பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளார். [4] நகைச்சுவை நடிகையாக, மேடை பேச்சாளாராக, தொகுப்பாளராக என எண்ணூற்றுக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ள இவரை, சின்னத்திரை நயன்தாரா என்று அன்புடன் பொதுமக்களும் சக கலைஞர்களும் அழைத்துவருகிறார்கள் .

கலக்க போவது யாரு (2015), சகலை vs ரகளை (2018), கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் (2018), ராமர் வீடு (2019), திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) (2019) குக் வித் கோமாளி (2019-2020), பிக் பாஸ் (சீசன் 4) (2020), பிக் பாஸ் ஜோடிகள்(சீசன் 1) (2021), நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி (2021), ஸ்டார் கிட்ஸ் (2021), பாரதி கண்ணம்மா (2021), திரு மற்றும் திருமதி சின்னத்திரை (சீசன் 4) (2022) மற்றும் விஜய் சபை (2022) போன்ற பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராக நிஷா, பங்கெடுத்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அறந்தாங்கி நிஷா 1983 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் அறந்தாங்கியில் பிறந்தவர். [5] தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இவர் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். பள்ளி நாட்களில் இருந்தே, நகைச்சுவையாக பேசி மக்களை கவர்ந்துள்ள இவர், குழந்தை பருவத்திலேயே நடிக்க விரும்பியுள்ளார்.

கலைத்துறை

[தொகு]

நிஷா, 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியின் நகைச்சுவை யதார்த்த நிகழ்ச்சியான கலக்க போவது யாருவில் போட்டியாளராக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அறிமுகமாயுள்ளார். அந்த போட்டி நிகழ்ச்சியில் இரண்டாமிடம் பிடித்ததோடு, நடுவர்களிடமும் பார்வையாளர்களிடமும் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். [6] அந்த நிகழ்ச்சிக்கு பின்னர், தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று, [7] 2018 ஆம் ஆண்டில் மாரி 2 திரைப்படத்தில் நடிகர்கள் தனுஷ் மற்றும் சாய் பல்லவியுடன் அட்டு ஆனந்தி என்ற பாத்திரத்தில் சிறப்பாக நகைச்சுவை கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். பின்னர் இரும்புத்திரை (2018), கோலமாவு கோகிலா (2018) மற்றும் சீமராஜா (2018) போன்ற பல்வேறு படங்களில் நடித்ததோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொண்டுள்ளார், 2019 , திரு அண்ட் திருமதி சின்னத்திரை (சீசன் 1) மற்றும் 2020 ஆம் ஆண்டில் குக் வித் கோமாளி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் 2020 ஆம் ஆண்டில் யதார்த்த நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் (சீசன் 4) இல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு எழுபதாவது நாள் வரை போட்டியிட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் ஹாஸ்டல் (2022), திருச்சிற்றம்பலம் (2022) மற்றும் ட்ரிக்கர் (2022) போன்ற படங்களில் நடித்துள்ளார். [8] [9]

தற்போது வசந்தபாலன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோருடன் நடித்து வருகிறார். படத்தில் துணை வேடத்தில் நிஷா நடித்துள்ளார். [10] [11] இப்படம் 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளது.

திரைப்படவியல்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]
முக்கிய குறிப்பு
dagger இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் பங்கு குறிப்புகள்
2018 மாரி 2 அட்டு ஆனந்தி
இரும்புத்திரை ரதியின் நோயாளி
கோலமாவு கோகிலா குருவின் மனைவி
சீமராஜா அவராகவே சிறப்பு தோற்றம்
ஆண் தேவதை அவராகவே
கலகலப்பு 2 கணேஷின் உதவியாளர்
2022 தங்கும் விடுதி "புர்தா" பர்வின் (பேய்)
திருச்சிற்றம்பலம் சுப்புராஜின் மனைவி தனலட்சுமி
தூண்டுதல் ரேவதி
2023 ஜெயிலர் dagger அறிவிக்கப்படும் [12]
பெயரிடப்படாத வசந்தபாலன் இயக்கும் படம் dagger அறிவிக்கப்படும் [13]

தொலைக்காட்சி

[தொகு]
ஆண்டு தலைப்பு பங்கு சேனல் குறிப்புகள்
2015 கலக்கப் போவது யாரு பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி 1வது ரன்னர் அப்
2018 சகள vs ரகள விருந்தினர் [14]
2018 கலக்கப் போவது யாரு சாம்பியன் பங்கேற்பாளர் இறுதிப் போட்டியாளர்
2019 ராமர் வீடு ராமரின் மனைவி [15]
2019 மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை (சீசன் 1) தொகுப்பாளர்
2019-2020 குக்கு வித் கோமாளி தொகுப்பாளர்
2019-2022 மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை தொகுப்பாளர் [16]
2020 பிக் பாஸ் தமிழ் 4 பங்கேற்பாளர் வெளியேற்றப்பட்ட நாள் 70 [17]
2021 பிபி ஜோடிகள் (சீசன் 1) பங்கேற்பாளர் நீக்கப்பட்டது [18]
2021 பிக் பாஸ் கொண்டாட்டம் விருந்தினர்
2021 காமெடி ராஜா கலக்கல் ராணி பங்கேற்பாளர் ராஜு ஜெயமோகனுக்கு ஜோடி



</br> நிகழ்ச்சியை நிறுத்தியது
2021 ஸ்டார் கிட்ஸ் விருந்தினர் சிறப்பு நிகழ்ச்சி [19]
2021 பாரதி கண்ணம்மா வடிவுக்கரசி தமிழ் தொலைக்காட்சி தொடர் [20]
2022 விஜய சபை தேவசேனா சிறப்பு நிகழ்ச்சி
2022 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல்ஹாசன் விருந்தினர் சிறப்பு நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிறந்தநாள் நிகழ்ச்சி
2023 கேபிவை சாம்பியன்ஸ் சீசன் 4 தொகுப்பாளர் [21]

விருதுகள்

[தொகு]
ஆண்டு வகை விருதுகள் குறிப்புகள்
2019 சிறந்த நகைச்சுவை பெண் புனைகதை அல்லாதவர் விஜய் விருதுகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aranthangi Nisha walks down memory lane; shares a glimpse of her wedding video". Times Of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/aranthangi-nisha-walks-down-memory-lane-shares-a-glimpse-of-her-wedding-video/articleshow/75246049.cms. 
  2. "Aranthangi Nisha and Riaz Ali become parents for the second time". Times Of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/aranthangi-nisha-and-riaz-ali-become-parents-for-the-second-time/articleshow/73026200.cms. 
  3. "Kollywood supporting actress Aranthangi Nisha". nettv4u.com. https://nettv4u.com/celebrity/tamil/supporting-actress/aranthangi-nisha. 
  4. "Vijay TV Contestant Turns An Actress!". nettv4u.com. https://nettv4u.com/latest-tamil-celebrity-news/vijay-tv-contestant-turns-an-actress. 
  5. "Nisha came to Chennai in one way and settled down!". time.news. https://time.news/nisha-came-to-chennai-in-one-way-and-settled-down/. 
  6. "VIDEO: ARANTHANGI NISHA GETS EMOTIONAL - "I CRY EVERY TIME I SEE THIS...IF YOU ARE BORN AS A GIRL..."". www.behindwoods.com. https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/kpy-aranthangi-nisha-shares-marriage-video-and-pens-an-emotional-message.html. 
  7. "Pulwama Terror Attack: Aranthangi Nisha pays a visit to the family of deceased CRPF jawan Sivachandran". Times Of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/pulwama-terror-attack-aranthangi-nisha-pays-a-visit-to-the-family-of-deceased-crpf-jawan-sivachandran/articleshow/68065389.cms. 
  8. "In Latest Video, Actor Aranthangi Nisha Takes Fans on Home Tour; They Love it". www.news18.com. https://www.youtube.com/watch?v=VFSCuEvskLI. 
  9. "Exclusive! Aranthangi Nisha reveals facts behind Vadivel Balaji's death". www.indiaglitz.com. https://www.indiaglitz.com/vadivel-balaji-death-details-real-reason-aranthangi-nisha-interview-tamil-news-269433. 
  10. "Vanitha Vijayakumar and Aranthangi Nisha board class director's new movie". https://www.indiaglitz.com/actress-vanitha-vijayakumar-aranthangi-nisha-in-vasantha-balan-new-movie-arjun-doss-dushara-vijayan-tamil-news-292753. பார்த்த நாள்: 29 September 2022. 
  11. "Aranthangi Nisha questions Thirunavukkarasu's mother". https://www.indiaglitz.com/aranthangi-nisha-criticize-pollachi-sex-abuse-pollachi-rapists-thirunavukkarasu-mother-telugu-news-231628. பார்த்த நாள்: 29 September 2022. 
  12. "Breaking! Famous Tamil hero acting in Rajinikanth's 'Jailer' secret revealed". www.indiaglitz.com. https://www.indiaglitz.com/jailer-latest-update-superstar-rajinikanth-nelson-dilipkumar-anirudh-jai-sun-pictures-tamil-news-322908. 
  13. "Aranthangi Nisha and Bava Lakshmanan are part of Vasantabalan's next". Times Of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/aranthangi-nisha-and-bava-lakshmanan-are-part-of-vasantabalans-next/articleshow/85204114.cms. 
  14. "Actresses Chithra, Raksha Holla, Priyanka Deshpande and Aranthangi Nisha to feature in 'Sagala vs Ragala'". Times Of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actresses-chithra-raksha-holla-priyanka-deshpande-and-aranthangi-nisha-to-feature-in-sagala-vs-ragala/articleshow/67207526.cms. 
  15. "Ramar Veedu comedy show on Vijay TV". www.exchange4media.com. https://www.exchange4media.com/industry-briefing-news/ramar-veedu-comedy-show-on-vijay-tv-94331.html. 
  16. "Mr & Mrs.Chinnathirai 4 set for a grand launch on July 2; deets inside". Times Of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/mr-mrs-chinnathirai-4-set-for-a-grand-launch-on-july-2-deets-inside/articleshow/92600049.cms. 
  17. "Bigg Boss Tamil 4: Aranthangi Nisha gets evicted". Times Of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-4-aranthangi-nisha-gets-evicted-from-the-kamal-haasan-hosted-show/articleshow/79711691.cms. 
  18. "என் குழந்தைக்கு தாய்மாமன் இவர்… மகேஷ் நெஞ்சில் சாய்ந்து கண்கலங்கிய நிஷா!". tamil.indianexpress.com. https://tamil.indianexpress.com/entertainment/aranthangi-nisha-emotional-speech-at-vijay-tv-bb-jodigal-final-342284/. 
  19. "VJ Priyanka, Bigg Boss Nisha & Many Other Stars Get Emotional on This Show!". astroulagam.com.my. https://astroulagam.com.my/entertainment/vj-priyanka-bigg-boss-nisha-many-other-stars-get-emotional-show-209178. 
  20. "VJ Priyanka, Bigg Boss Nisha & Many Other Stars Get Emotional on This Show!". astroulagam.com.my. https://astroulagam.com.my/entertainment/vj-priyanka-bigg-boss-nisha-many-other-stars-get-emotional-show-209178. 
  21. "Reality show ‘KPY Champion 4’ set to launch soon; deets inside". Times of India. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/reality-show-kpy-champion-4-set-to-launch-soon-deets-inside/articleshow/97722061.cms. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறந்தாங்கி_நிஷா&oldid=4043562" இலிருந்து மீள்விக்கப்பட்டது