துசாரா விச்சயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துசாரா விச்சயன்
Dushara Vijayan
பிறப்புதிண்டுக்கல், தமிழ்நாடு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019–முதல்

துசாரா விச்சயன் (Dushara Vijayan) தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி (2019) என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

தொழில்[தொகு]

சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று துசாரா பொறியியல் படித்தார். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு ஆடை வடிவமைப்பியல் படித்து வடிவழகு மாதிரி, குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்தார். 2019 ஆம் ஆண்டு புதுமுகங்கள் தயாரித்து வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரையின் நாயகியாகி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2022 ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார்.[2]

2021 ஆம் ஆண்டு வெளியான குத்துசண்டை விளையாட்டை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் துசாராவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சென்னைப் பெண்ணாக இவர் திரைப்படத்தில் தோன்றினார். இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து இருபது நிமிட நேர்காணலுக்கு பின்னர் தேர்வு செய்தார். ஆரம்பத்தில் நம்பிக்கையில்லாமல் இருந்த போதிலும், பின்னர் இயக்குனர் இவரை அந்த பாத்திரத்திற்கு தேர்வு செய்தார். படத்திற்குத் தயாராவதற்காக, துசாரா வட சென்னை பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நடத்தை முறைகளில் பயிற்சி பெற்றார். துசாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்று, நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்பு
2019 போதை ஏறி புத்தி மாறி சனனி
2021 சார்பட்டா பரம்பரை மாரியம்மா
2022 அன்புள்ள கில்லி அன்விதா
அநீதி சுப்பலட்சுமி தயாரிப்பில்
நட்சத்திரம் நகர்கிறது தயாரிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. "சார்பட்டா நாயகி துஷாரா". தினமணி. https://www.dinamani.com/galleries/photo-cinema/actress/2021/nov/13/trending-cute-dushara-vijayan-stills-13612--12.html. பார்த்த நாள்: 24 March 2022. 
  2. "Meet Kollywood's Newbie, Dushara Vijayan". femina.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துசாரா_விச்சயன்&oldid=3407162" இலிருந்து மீள்விக்கப்பட்டது