உள்ளடக்கத்துக்குச் செல்

அர்ஜூன் தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஜூன் தாஸ்
பிறப்பு5 சனவரி 1992 (1992-01-05) (அகவை 32)
புனே, மகாராஷ்டிரா, இந்தியா
இருப்பிடம்சென்னை
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2012-தற்போதுவரை

அர்ஜுன் தாஸ் (Arjun Das) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர், கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுபவர் ஆவார். இவர் வீறார்ந்த குரலுக்கு பெயர் பெற்றவர்.[1]

2012 இல், பெருமான் என்ற சுயாதீன திரைப்படத்தில் அறிமுகமானார்.[2] இப்படத்தில் அவரது பங்கு குறித்து, டைம்ஸ் ஆப் இந்தியா இவரை நம்பிக்கை தரும் அறிமுக நடிகர் எனக் குறிபிட்டது.[3] அந்தகாரம் படப்பிடிப்பின் பின்னர், அர்ஜுன் தாஸ் ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் நிகழ்ச்சியை வனொலி புரவலராக வழங்கினார்.[4] ஆக்ஸிஜன் திரைப்படத்தில் (2017) கோபிசந்தின் சகோதரராகவும் நடித்துள்ளார் .[5] அர்ஜுன் கைதி திரைப்படத்தில் முக்கிய எதிராளிக் கதாப் பாத்திரத்தில் நடித்தார்.[6] இந்தத் திரைபப்டத்தில் நடித்ததற்காகப் பரவலாக பாராட்டுக்களைப் பெற்றார், மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் .[7][8][9] துருவ நட்சத்திரம் திரைபப்டத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக இவர் குரல் கொடுத்தார்.[10][11] அன்வர் ரஷீத் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.[12]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 பெருமான் சக்தி
2017 ஆக்ஸிஜன் அஜய் தெலுங்கு படம்
2019 கைதி அன்பு
2020 அந்தகாரம் வினோத்
2020 மாஸ்டர் தாஸ்
2020 கும்கி 2Films that have not yet been released அறிவிக்கப்படும் தாமதமாக

2023 அநீதி திருமேனி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "When Kaithi's antagonist Arjun Das stood with his voice". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. October 2019.
  2. "Kumari Muthu to Arjun Das: Five Tamil actors who became popular because of their voices". The Times of India. 17 April 2020.
  3. "Perumaan Movie Review {3/5}: Critic Review of Perumaan by Times of India". The Times of India.
  4. "'Kaithi' Fame Arjun Das Joins The Cast Of 'Thalapathy 64'". 2 December 2019.
  5. Jyothi Krishna (director) (30 November 2017). Oxygen (Motion picture). Event occurs at 1:19:07.
  6. "How Arjun Das has become the new go-to villain of Tamil cinema, from Karthi's Kaithi to Vijay's Thalapathy 64". First Post. December 2019.
  7. "Arjun Das From Dubai to breakout villain in Kaithi". Gulf News. October 2019.
  8. "#Thalapathy64: Arjun Das in; Antony out". The Times of India. 1 December 2019.
  9. "Arjun Das reveals a secret from the 'Master' trailer". The Times of India. 18 May 2020.
  10. "Arjun Das's first film as a lead will be a supernatural thriller - Times of India". The Times of India.
  11. "Arjun Das to face off Vikram in Gautham Menon's 'Dhruv Natchathiram' - Times of India". The Times of India.
  12. "Master and Kaithi actor Arjun Das' next Tamil film with popular Malayalam director - Times of India". The Times of India.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜூன்_தாஸ்&oldid=3797380" இலிருந்து மீள்விக்கப்பட்டது