அராரி பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
அராரி பிரதேசம்
ሐረሪ ክልል
எத்தியோப்பியாவின் பிரதேசம்
அராரி மக்கள் தேசிய பிரதேச மாகாணம்
அராரி பிரதேசம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அராரி பிரதேசம்
சின்னம்
எத்தியோப்பியாவின் வரைபடத்தில் அராரி பிரதேசம்
எத்தியோப்பியாவின் வரைபடத்தில் அராரி பிரதேசம்
நாடுஎத்தியோப்பியா
தலைநகரம்அரார்
அரசு
 • ஆளுநர்ஆர்டின் பெத்ரி (அராரின் தேசிய லீக்)
பரப்பளவு
 • மொத்தம்334 km2 (129 sq mi)
 [1]
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்246,000[2]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுET-HA
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.588[3]
medium2nd of 11

அராரி பிரதேசம் (Harari Region) கிழக்கு ஆப்பிரிக்கா நாடானா எத்தியோப்பியாவின் வடகிழக்கில் அமைந்த மிகச்சிறிய பிரதேசம் ஆகும். இது எத்தியோப்பியான் 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அரார் நகரம் ஆகும். இப்பிரதேசத்தில் அராரி மொழி மற்றும் ஒரோமியோ மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. ரோமியா பிரதேசத்தால் சூழ்ந்தது அராரி பிரதேசம்.[4]

அமைவிடம்[தொகு]

அராரி பிரதேசம், ரோமியா பிரதேசத்தின் கிழக்கு அரார்கே மண்டலத்தால் சூழ்ந்த சிறு பகுதியாகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]


அராரி பிரதேசத்தின் இனக்குழுக்கள்

  ஒரோமோ இன மக்கள் (56.41%)
  அம்மாரா இன மக்கள் (22.77%)
  அராரி இன மக்கள் (8.65%)
  குராஜ் இன மக்கள் (4.34%)
  சோமாலி இன மக்கள் (3.87%)
  திக்ரே இன மக்கள் (1.53%)
  அர்கோப்பா இன மக்கள் (1.26%)
  ஏனைய (1.17%)

2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 311.25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 46,169 குடியிருப்புகளும் கொண்ட அராரி பிரதேசத்தின் மக்கள் தொகை 1,83,415 ஆகும். அதில் ஆண்கள் 92,316 மற்றும் பெண்கள் 91,099 ஆக உள்ளனர். 54.18% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 589.05 பேர் வீதம் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் ஒரோமோ மக்கள் 56.41%, அம்மாரா இன மக்கள் 22.77%, அராரி இன மக்கள் 8.65%, குராஜ் இன மக்கள் 4.34%, சோமாலி இன மக்கள் 3.87%, திக்ரே இன மக்கள் 1.53% மற்றும் அர்கோப்பா இன மக்கள் 1.26% வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் ஒரோமோ மொழி 56.84%, அம்மாரா மொழி 27.53%, அராரி மொழி [7.33%, சோமாலி மொழி 3.70% மற்றும் குராஜ் மொழி 2.91% பேர் பேசுகின்றனர்.

சமயம்[தொகு]



அராரி பிரதேசத்தில் சமயங்கள் (2007)[5]

  இசுலாமியர்கள் (69%)
  எத்தியோப்பியா பழமைவாத கிறித்துவர்கள் (27.1%)
  சீர்திருத்த கிறித்துவர்கள் (3.4%)
  தொல்குடி சமயத்தினர் (0.1%)
  கத்தோலிக்க கிறித்துவர்கள் (0.3%)
  Other (0.1%)

நிர்வாகம்[தொகு]

எத்தியோப்பியாவ்ன் பிரதேசங்களும், மண்டலங்களும்

அராரி பிரதேசம் 9 மாவட்டங்களையும், 19 நகரங்களையும், 17 ஊரகப் பகுதிகளையும் கொண்டுள்ளது. கொண்டுள்ளது.

  • அமீர்-நூர் மாவட்டம்
  • அபாதிர் மாவட்டம்
  • செங்கோர் மாவட்டம்
  • ஜின் எலா மாவட்டம்
  • அபோக்கர் மாவட்டம்
  • அக்கீம் மாவட்டம்
  • சோபி மாவட்டம்
  • எரெர் மாவட்டம்
  • திரே- தெயாரா மாவட்டம்

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்[தொகு]

எத்தியோப்பிய நகரங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2011 National Statistics பரணிடப்பட்டது 2013-03-30 at the வந்தவழி இயந்திரம்
  2. Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180606103106/http://www.csa.gov.et/ehioinfo-internal. பார்த்த நாள்: 4 June 2018. 
  3. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  4. Ethiopia: Political Turmoil in the City-State of Harar, 19 April 2011
  5. http://catalog.ihsn.org/index.php/catalog/3583/download/50086

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அராரி_பிரதேசம்&oldid=3497462" இலிருந்து மீள்விக்கப்பட்டது