அம்மாரா பிரதேசம்

அம்மாரா பிரதேசம்
አማራ ክልል | |
---|---|
மாநிலம் | |
![]() சிமியன் மலைகள் | |
![]() எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அம்மாரா பிரதேசத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11°39′39″N 37°57′28″E / 11.6608°N 37.9578°E | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | பாகிர் தார் |
அரசு | |
• ஆளுநர் | யிலிக்கல் கெபெல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 154,708.96 km2 (59,733.46 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3 |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 2,00,18,988[1] |
• தரவரிசை | 2 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | அம்காரியம் |
• பிற மொழிகள் | ஒரோமோ, அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல் |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-AM |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.464[2] low • 9th of 11 |
அம்மாரா பிரதேசம் (Amhara Region), கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்த ஒரு பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் பாகிர் தார் நகரம் ஆகும். இதனருகே திக்ரே பிரதேசம் அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்க அம்மாரா இன பழங்குடி மக்களின் தாயகம் ஆகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் அமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் உள்ள தானா ஏரி, நைல் நதிக்கு நீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் தேசியப் பூங்கா அமைந்துள்ளது.
1,54,709 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அம்மார பிரதேசத்தின் மக்கள் தொகை 2,00,18,988 ஆக உள்ளது. இப்பிரதேசத்தில் அம்காரியம் உள்ளிட்ட அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல், ஒரோமோ மொழிகள் பேசப்படுகிறது.
அமைவிடம்
[தொகு]எத்தியோப்பியா நாட்டின் மேற்கில் அமைந்த அம்மாரா பிரதேசத்தின் மேற்கிலும்,வடமேற்கிலும் தெற்கு சூடான் நாடும், வடக்கில் திக்ரே பிரதேசமும், கிழக்கில் அபார் பிரதேசமும், தெற்கில் ஒரோமியா பிரதேசமும், தென்மேற்கில் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசமும் அமைந்துள்ளது.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
[தொகு]- திக்ரே பிரதேசம்
- அபார் பிரதேசம்
- சோமாலிப் பிரதேசம்
- ஒரோமியா பிரதேசம்
- தெற்குப் பிரதேசம்
- தென்மேற்குப் பிரதேசம்
- கம்பேலா பிரதேசம்
- பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
- சிதாமா பிரதேசம்
- அராரி பிரதேசம்
நகரங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- திக்ரே மாகாணம்
- திக்ரே மக்கள் விடுதலை முன்னணி
- தக்கீசு ஆறு
- அக்சும் பேரரசு
- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் - (1974 - 1980)
- எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2020-தற்போது வரை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 June 2018. Retrieved 4 June 2018.
- ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Retrieved 13 September 2018.