அபார் பிரதேசம்
அபார் பிரதேசம்
አፋር ክልል Qafar Rakaakayak | |
---|---|
பிரதேச மாகாணம் | |
எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அபார் பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எத்தியோப்பியா |
தலைநகரம் | செம்மெரா |
அரசு | |
• ஆளுநர் | அவோல் அர்பா |
பரப்பளவு | |
• மொத்தம் | 72,053 km2 (27,820 sq mi) |
[1] | |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 18,12,002[2] |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:ET |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.428[3] low • 11th of 11 |
அபார் பிரதேசம் (Afar Region) எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செம்மெரா நகரம் ஆகும். இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக அபார் பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இதன் தெற்குப் பகுதியில் அவாஸ் ஆறு பாய்கிறது. அபார் பிரதேசம் 72,053 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மேலும் இப்பகுதியில் அவாஸ் தேசியப் பூங்கா, அப்தெரா ஏரி மற்றும் அலே எரிமலை உள்ளது. 2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அபார் பிரதேசத்தின் மக்கள் தொகை 18,12,002 ஆகும்.
அமைவிடம்
[தொகு]அபார் பிரதேசத்தின் வடக்கில் எரித்திரியா நாடும், வடகிழக்கில் திஜிபௌட்டி நாடும், வடமேற்கில் திக்ரே பிரதேசம், தென்மேற்கில் அம்மாரா பிரதேசம், தெற்கில் ஒரோமிய பிரதேசமும், தென்கிழக்கில் திரே தாவா நகரமும் எல்லைகளாக உள்ளது.
நிர்வாக மண்டலங்கள்
[தொகு]- அவ்சி ராசு
- கில்பெர்ட் ராசு
- காபி ராசு
- பாண்டி ராசு
- ஹரி ராசு
- அர்கோப்பா ராசு
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2017-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அபார் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 18,12,002 ஆகும். அதில் 9,91,000 ஆண்கள் மற்றும் 8,21,002 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் இசுலாமியர் 95.2%, எத்தியோப்பிய ஆர்தடாக்ஸ் கிறித்துவர்கள் 3.9% மற்றும் பிறர் 0.08% ஆக உள்ளனர். இப்பிரதேசத்தில் அபார் இன பழங்குடிகள் 90.03% ஆக உள்ளனர். இப்பிரதேசத்தில் அபார் மொழியை 89.96% மக்கள் பேசுகின்றனர். அம்மாரிக் மொழி 6.83%, திக்ரே மொழி 1.06%, அர்கோப்பா மொழி [0.79%, வோலைட்டா மொழி 0.43% மற்றும் ஒரோமா மொழியை 0.4% மக்கள் பேசுகின்றனர்.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
[தொகு]- திக்ரே பிரதேசம்
- அபார் பிரதேசம்
- அம்மாரா பிரதேசம்
- சோமாலிப் பிரதேசம்
- ஒரோமியா பிரதேசம்
- தெற்குப் பிரதேசம்
- தென்மேற்குப் பிரதேசம்
- கம்பேலா பிரதேசம்
- பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
- சிதாமா பிரதேசம்
- அராரி பிரதேசம்
நகரங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- திக்ரே மாகாணம்
- திக்ரே மக்கள் விடுதலை முன்னணி
- தக்கீசு ஆறு
- அக்சும் பேரரசு
- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் - (1974 - 1980)
- எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2020-தற்போது வரை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2011 National Statistics பரணிடப்பட்டது மார்ச்சு 30, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 June 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.