தெற்குப் பிரதேசம், எத்தியோப்பியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்குப் பிரதேசம்
Southern Nations, Nationalities and Peoples' Region

ደቡብ ብሔሮች ብሔረሰቦችና ሕዝቦች ክልል
பிரதேச மாகாணம்
இடமிருந்து: சமோ ஏரி, ஹமர் மக்கள், அவசா ஏரி, , வெலாயுத மக்கள் மற்றும் கம்பாட்டா மக்களின் நடனம்
தெற்குப் பிரதேசம் Southern Nations, Nationalities and Peoples' Region-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் தெற்குப் பிரதேசம் Southern Nations, Nationalities and Peoples' Region
சின்னம்
எத்தியோப்பியாவின் தெற்கின் பிரதேசத்தின் அமைவிடம்
எத்தியோப்பியாவின் தெற்கின் பிரதேசத்தின் அமைவிடம்
நாடு எதியோப்பியா
தலைநகரம்ஹவாஸ்சா
பரப்பளவு
 • மொத்தம்54,400 km2 (21,000 sq mi)
 [1]
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்9,126,000[2]
 [3]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுET-SN
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.488[4]
low6th of 11

தெற்குப் பிரதேசம் (Southern Nations, Nationalities, and Peoples' Region) (சுருக்கமாக: SNNPR) கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் தெற்கில் அமைந்த பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் ஹவாஸ்சா நகரம் ஆகும். ஹவாஸ்சா நகரம் இப்பிரதேசத்திற்கு வெளியே அமைந்த சிதாமா பிரதேசத்தில் உள்ளது. [5] இப்பிரதேசம் 21 சூன் 1992 அன்று நிறுவப்பட்டது.[6]இப்பிரதேசத்தை நிர்வகிக்க ஆளுநர் தலைமையிலான பிரதேச சட்டமன்றம், நீதிமன்றம் செயல்படுகிறது. இப்பிரதேசத்தின் பெரிய நகரம் அர்பா மிஞ்ச் நகரம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

தெற்குப் பிரதேசத்தின் தெற்கில் கென்யா நாடும், தென் மேற்கில் தெற்கு சூடான் நாடும் வடக்கிலும், கிழக்கிலும் ஒரோமியா பிரதேசம், மேற்கில் தென்மேற்குப் பிரதேசம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

கெம்பட்டா மண்டலத்தின் காம்பாட்ட மக்கள், தெற்கு பிரதேசம்

2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுபின்படி, 105,887 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,110,995 குடியிருப்புகளும் கொண்ட தெற்கு பிரதேசத்தின் மக்கள் தொகை f 14,929,548 ஆகும். அதில் ஆண்கள் 7,425,918 மற்றும் பெண்கள்7,503,630 ஆக உள்ளனர். 89.98% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 141 மக்கள் வாழ்கின்றனர். 2017-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 19,170,007 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1994 1,03,77,028—    
2007 1,49,29,548+43.9%
2017 1,91,70,007+28.4%
source:[7]

சமயங்கள்[தொகு]

சமயம் 1994 கணக்கெடுப்பு 2007 கணக்கெடுப்பு
சீர்திருத்த கிறித்துவர்கள் 34.8% 55.5%
பழைமைவாத கிறித்தவர்கள் 55.6% 52.86%
இசுலாமியர்கள் 16.7% 14.12%
பாரம்பரிய சமயத்தினர் 15.4% 6.6%
ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் 3% 2.4%
பிற சமயத்தினர் 1.5%

இனக்குழுக்கள்[தொகு]

பெரிய இனக்குழுக்கள்
மக்கள் 1994 கணக்கெடுப்பு 2007 கணக்கெடுப்பு[3]
வெலாயுத மக்கள் 12% 10.59%
ஹதியா மக்கள் - 7.98%
குர்ராஜ் மக்கள் 15% 19.54%
கமோ மக்கள் - 7%
கபிச்சோ மக்கள் - 5.44%
சில்ட்தே மக்கள் - 5.37%
அம்மாரா மக்கள் - 4.10%

மொழிகள்[தொகு]

தெற்கு பிரதேசத்தில் பெரும்பான்மையாக சிதாமா மொழி 19.59%, வெலாயுத மொழி 10.48%, ஹதியா மொழி 8%, குராஜ் மொழி 7.13%, காமோ மொழி 6.9%, காபா மொழி 5.36% மற்றும் அம்மாரா மொழியை 4.10% மக்களால் பேசப்படுகிறது.

வேளாண்மை[தொகு]

பெரிய வாழை கம்பாட்ட இனப் பெண்

2004–2005 ஆண்டின் கணக்குப்படி, தெற்குப் பிரதேசத்தில் 100,338 டன்கள் காபிக் கொட்டை உற்பத்தி செய்யப்பட்டது. இது எத்தியோப்பியாவின் மொத்த காபிக் கொட்டை உற்பத்தியில் 44.2% ஆகும். தெற்கு பிரதேசத்தில் மொத்த கால்நடைகள் 7,938,490 ஆகும். இது எத்தியோப்பாவின் மொத்த கால்நடைகளில் 20.5% ஆகும்.[8]பெரிய வாழை தெற்கு பிரதேசத்தின் மிகப்பெரிய வேளாண்மைப் பயிர் ஆகும்.

நிர்வாகம்[தொகு]

தெற்குப் பிரதேசம் நிர்வாக வசதிக்காக மண்டலங்களாகவும், மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[9]

மண்டலம் மற்றும் சிறப்பு மாவட்டங்கள்
வரிசை எண் மண்டலம் தலைமையிடம்
1 காமோ மண்டலம் அர்பா மிஞ்ச்
2 கோபா மண்டலம் சவுலா
3 கெதியோ மண்டலம் தில்லா
4 குராஜ் மண்டலம் வெல்கைட்
5 ஹதியா மண்டலம் ஹோசைனா
6 கெம்பட்டா மண்டலம் துராமே
7 சில்ட்டே மண்டலம் வொராபி
8 தெபுப் ஒமோ மண்டலம் ஜிங்கா
9 வெலாயுதா மண்டலம் சோடோ
10 அலபா மண்டலம் ஹலபா குலிதோ
11 அம்ரோ சிறப்பு மண்டலம் கேலே
12 அல்லே சிறப்பு மண்டலம்
13 பாஸ்கேதோ சிறப்பு மண்டலம் லஸ்கா
14 புர்ஜி சிறப்பு மண்டலம் சோயாமா
15 திரேசே சிறப்பு மண்டலம் கில்தோலே
16 கோன்சோ மண்டலம் காரத்
17 யெம் சிறப்பு மண்டலம் போபா

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்[தொகு]

எத்தியோப்பிய நகரங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2011 National Statistics" (PDF). Central Statistics Agency. 23 September 2015 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 29 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 ஜூன் 2018. https://web.archive.org/web/20180606103106/http://www.csa.gov.et/ehioinfo-internal. பார்த்த நாள்: 4 June 2018. 
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Census2007 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (ஆங்கிலம்). 2018-09-13 அன்று பார்க்கப்பட்டது.
  5. "NEWS: SNNPRS Council approves legal framework which makes Hawassa city accountable to future Sidama Regional State". Addis Standard (ஆங்கிலம்). 2019-10-18. 2021-06-16 அன்று பார்க்கப்பட்டது.
  6. Lyons, Terrence (1996). "Closing the Transition: The May 1995 Elections in Ethiopia". Journal of Modern African Studies 34 (1): 135. doi:10.1017/S0022278X00055233. https://archive.org/details/sim_journal-of-modern-african-studies_1996-03_34_1/page/135. 
  7. Southern Nations, Nationalities, and Peoples' Region population statistics
  8. "CSA 2005 National Statistics" (PDF). Tables D.4–D.7. 18 November 2008 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது.
  9. "Names and codes for January 2000, Ethiopia". World Health Organization. The information in the WHO spreadsheet is built on information received 18 September 2002 from the Ethiopian Ministry of Federal Affairs.

வெளி இணைப்புகள்[தொகு]