உள்ளடக்கத்துக்குச் செல்

சிதாமா பிரதேசம்

ஆள்கூறுகள்: 6°40′N 38°30′E / 6.667°N 38.500°E / 6.667; 38.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
சிதாமா பிரதேசம்
எத்தியோப்பியாவின் பிரதேச மாகாணம்
சிதாமா பிரதேசம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் சிதாமா பிரதேசம்
சின்னம்
எத்தியோப்பியாவின் வரைபடத்தில் சிதாமா பிரதேசத்தின் அமைவிடம்
எத்தியோப்பியாவின் வரைபடத்தில் சிதாமா பிரதேசத்தின் அமைவிடம்
நாடு எதியோப்பியா
தலைநகரம்அவாஸ்சா
அரசு
 • ஆளுநர்தெஸ்தா லெடாமோ
பரப்பளவு
 • மொத்தம்6,000 km2 (2,000 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்42,00,000
 • அடர்த்தி700/km2 (1,800/sq mi)
ஐஎசுஓ 3166 குறியீடுTBA

சிதாமா பிரதேசம் (Sidama Region) கிழக்கு ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா நாட்டில் அமைந்த 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அவாஸ்சா நகரம் ஆகும். தெற்குப் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கொண்டு 18 சூன் 2020 அன்று இப்புதிய சிதாமா பிரதேசம் நிறுவப்பட்டது.[1] சிதாமா இன மக்களின் பெயரால், இப்பிரதேசத்திற்கு சிதாமா பிரதேசம் எனப்பெயராயிற்று. 2017-ஆம் ஆண்டில் சிதாமா பிரதேசத்தின் மக்கள் தொகை ஏறத்தாழ 3.2 மில்லியன் ஆக உள்ளனர். இப்பிரதேசத்தில் சிதாமா மொழி, குஷிதிக் மொழிகள் பேசப்படுகிறது.[2]

அமைவிடம்[தொகு]

சிதாமா பிரதேசத்தின் மேற்கில் தெற்குப் பிரதேசம், பிற திசைகளில் ஒரோமியா பிரதேசம் சூழ்ந்துள்ளது.

புவியியல்[தொகு]

சிதாமா பிரதேசம் அபயா ஏரிக்கு வடகிழக்கிலும் மற்றும் அவசா ஏரிக்கு தென்கிழக்கிலும் அமைந்துள்ளது. இதன் மேற்கில் பாயும் பைலேட் ஆறு, கிழக்கில் ஒரோமியா பிரதேசத்தை, சிதாமா பிரதேசத்தை பிரிக்கிறது. வடக்கில் பாயும் திக்கூர் நுவா ஆறு பாய்வதால், சிதாமா பிரதேசம் வளமாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2007-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 6,538.17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 592,539 குடியிருப்புகளும் கொண்ட சிதாமா பிரதேசத்தின் மக்கள் தொகை 29,54,136. அதில் ஆண்கள் 14,91,248 மற்றும் பெண்கள் 1,462,888 உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி 451.83 ஆக உள்ளது. 5.51% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.

சிதாமா பிரதேசத்தில் சிதாமா இன மக்கள் 93.01%, ஒரோமொ மக்கள் 2.53% மற்றும் அம்மாரா மக்கள் 1.91%, பிற இன மக்கள் 2.55% வாழ்கின்றனர். சிதாமா மொழி 94.23%, அம்மாரா மொழி 2.14% மற்றும் ஒரோமோ மொழி 2.07% மக்களும் பேசுகின்றனர்.

சிதாமா பிரதேசத்தில் சீர்திருத்த கிறித்தவர்கள் 84.38%, பழமைவாத கிறித்துவர்கள் 3.35%, கத்தோலிக்க கிறித்தவர்கள் 3.01%, இசுலாமியர்கள் 4.62% மற்றும் தொல்குடி சமயத்தினர் 2.27% ஆக உள்ளனர்.[3]

எத்தியோப்பிய பழைமைவாத திருச்சபை, அவாசா நகரம்

மாவட்டங்கள்[தொகு]

 • அலெதா சுக்கோ மாவட்டம்
 • அலெதா வென்டொ மாவட்டம்
 • அர்பெகொனா மாவட்டம்
 • அரோரெசா
 • அவாஸ்சா ஜுரியா
 • பென்சா
 • பொனா ஜுரியா
 • போரிச்சா
 • புர்சா
 • ஷெரெ
 • தலே
 • தாரா
 • கோர்ச்சே
 • அவாஸ்சா
 • ஹுலா
 • லோகோ அபயா
 • மால்கா
 • செபெதினோ
 • வென்சோ
 • வென்தோ கெனெட்

பொருளாதாரம்[தொகு]

சிதாமா பிரதேசத்தின் முதன்மைப் பொருளாதாரம் வேளாண்மை பயிர்கள் ஆகும். இப்பிரதேசத்தில் காபித் தோட்டங்கள் அதிகம் உள்ளது. உலகின் சிறந்த காபிக் கொட்டைகள் இப்பிரதேசத்திலிருந்து ஏற்றுமதியாகிறது.

மீன் சந்தை, அவாசா நகரம்

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்[தொகு]

எத்தியோப்பிய நகரங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Council ratify Ethiopia's new ethnic-Sidama statehood". Borkena.com. Borkena Ethiopian News. 19 June 2020. பார்க்கப்பட்ட நாள் 12 July 2020.
 2. "census 1984". Csa.gov.et. 22 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
 3. Census 2007 Tables: Southern Nations, Nationalities and Peoples' Region பரணிடப்பட்டது 2012-11-13 at the வந்தவழி இயந்திரம், Tables 2.1, 2.4, 2.5, 3.1, 3.2 and 3.4.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதாமா_பிரதேசம்&oldid=3497472" இலிருந்து மீள்விக்கப்பட்டது