உள்ளடக்கத்துக்குச் செல்

தக்கீசு ஆறு

ஆள்கூறுகள்: 14°15′27″N 36°33′37″E / 14.25750°N 36.56028°E / 14.25750; 36.56028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
14°15′27″N 36°33′37″E / 14.25750°N 36.56028°E / 14.25750; 36.56028

தக்கீசு ஆறு (Tekezé River) எத்தியோப்பியாவின் முதன்மையான ஆறுகளில் ஒன்று. இது செயிட் (Setit) என்ற பெயரில் மேற்கு எத்தியோப்பியாவிலும் எரித்திரியாவிலும் கிழக்கு சூடானிலும் அழைக்கப்படுகிறது. இது 608 கிமீ நீளம் உடையது.[1] எத்தியோப்பியா - எரித்திரியாவின் மேற்கு கோடி எல்லையாக இது விளங்குகிறது. ஆப்பிரிக்காவின் ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக இது பாய்கிறது.

எத்தியோப்பியாவின் வட மாகாணமானமான திக்கரே மாகாணத்தில் உள்ள உயரமான மலைகளில் உற்பத்தியாகும் இவ்வாறு முதலில் மேற்காக பயணித்து பின் வடக்கு நோக்கி பயணித்து பின் மேற்கு நோக்கி பயணிக்கிறது அப்போதே எத்தியோப்பாவுக்கும் எரித்திரியாவுக்கும் ஆனா எல்லையாக மாறுகிறது. பின் மேலும் மேற்கு நோக்கி பயணித்து சூடானில் அட்பரா ஆற்றுடன் கலக்கிறது. அட்பரா ஆறே நைல் ஆற்றுடன் கலக்கும் இறுதி துணையாறு ஆகும். சிலர் இதை அட்பரா ஆற்றின் மேல் பகுதி என்றும் கூறுவர். சூடானில் அல் குவாடரிவ் நகருக்கு சில கிமீகள் வடக்கே அட்பரா ஆற்றுடன் கலக்கிறது [2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Major Rivers of Ethiopia
  2. http://www.geographic.org/geographic_names/name.php?uni=-23534&fid=5860&c=sudan
  3. https://www.britannica.com/place/Tekeze-River
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கீசு_ஆறு&oldid=3497504" இலிருந்து மீள்விக்கப்பட்டது