கம்பேலா பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
கம்பேலா பிரதேசம்
ጋምቤላ ሕዝቦች ክልል
எத்தியோப்பியாவின் பிரதேச மாகாணம்
கம்பேலா பிரதேசம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கம்பேலா பிரதேசம்
சின்னம்
எத்தியோப்பியாவின் தென்மேற்கில் கம்பேலா பிரதேசத்தின் அமைவிடம்
எத்தியோப்பியாவின் தென்மேற்கில் கம்பேலா பிரதேசத்தின் அமைவிடம்
நாடுஎத்தியோப்பியா
தலைநகரம்கம்பேலா
அரசு
 • ஆளுநர்ஒமோத் ஒஜுலு ஒபாப் (கம்பேலா மக்கள் ஜனநாயக் இயக்கம்)
பரப்பளவு
 • மொத்தம்29,782.82 km2 (11,499.21 sq mi)
 [1]
மக்கள்தொகை (2017)
 • மொத்தம்435,999[2]
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுET-GA
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.566[3]
medium4th of 11

கம்பேலா பிரதேசம் அல்லது கம்பெல்லா பிரதேசம் (Gambela Region or Gambella); அம்காரியம்: ጋምቤላ?), கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இது எத்தியோப்பியாவின் தென்மேற்கில் அமைந்துள்ளது. கம்பேலா பிரதேசம் பாரோ ஆறு மற்றும் அகோபோ ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. 5,061 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த கம்பேலா தேசியப் பூங்கா பகுதியில் கம்பேலா நகரம் உள்ளது.

அமைவிடம்[தொகு]

எத்தியோப்பியா நாட்டின் தென்மேற்கில் அமைந்த கம்பேலா பிரதேசத்தின் வடக்கில் ஒரோமியா பிரதேசம், கிழக்கில் தென்மேற்குப் பிரதேசம், தெற்கிலும்,மேற்கிலும் தெற்கு சூடான் நாடு எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 66,467 குடியிருப்புக கொண்ட கம்பேலா பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 307,096 ஆகும். அதில் ஆண்கள் 159,787 மற்றும் பெண்கள் 147,309 ஆக உள்ளனர். 25.37% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 10 பேர் வீதம் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக நியூர் இன மக்கள் 64.66%, அனுக் பழங்குடி இன மக்கள் 29.6%, மெஷ்ஹென்சர் மக்கள் 5% வாழ்கின்றனர்

சமயம்[தொகு]சமயம் (2007)[4]

  சீர்திருத்த கிறித்தவர்கள் (70.1%)
  பழைமைவாத கிறித்துவர்கள் (16.8%)
  இசுலாமியர்கள் (4.9%)
  மரபுவழி நம்பிக்கையாளர்கள் (3.8%)
  கத்தோலிக்க கிறித்தவர்கள் (3.4%)
  பிறர் (1.1%)

அகதிகள் முகாம்கள்[தொகு]

தெற்கு சூடான் மக்கள் அகதிகளாக ஆகஸ்டு, 2016-ஆம் ஆண்டு முதல் கம்பேலா பிரதேசத்தின் பல முகாம்களில் 2,68,000 வாழ்கின்றனர்.[5]

ஆகஸ்டு 2016-ஆம் ஆண்டில் தெற்கு சூடானிலிருந்து இப்பிரதேசத்திற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை 2,68,000 ஆக இருந்த்து. இதுவே ஆகஸ்டு 2018-ஆம் ஆண்டில் 4,02,000 ஆக உயர்ந்துள்ளது.[6]

பொருளாதாரம்[தொகு]

கம்பாலா பிரதேசத்தில் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாக உள்ளது. 2004-5-ஆம் ஆண்டில் 3,734 டன் காபிக் கொட்டை ஏற்றுமதியாகியுள்ளது.

நிர்வாகம்[தொகு]

கம்பேலா பிரதேசத்தின் தலைமை நிர்வாகி ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர் ஆவார். கம்பேலா பிரதேசம் நிர்வாக வசதிக்காக பல மண்டலங்களாகவும், சிறப்பு மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

  • அனிவா மண்டலம்
  • மஜாங் மண்டலம்
  • நியூர் மண்டலம்
  • இதாங்க் சிறப்பு மண்டலம்

400 மீட்டர் முதல் 550 மீட்டர் உயரத்தில் அமைந்த அனிவா மண்டலத்தில் இப்பிரதேசத்தின் தலைநகரமான கம்பெல்லா நகரம் அமைந்துள்ளது.

எத்தியோப்பிய பிரதேசங்கள்[தொகு]

எத்தியோப்பிய நகரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கம்பேலா_பிரதேசம்&oldid=3547848" இருந்து மீள்விக்கப்பட்டது