உள்ளடக்கத்துக்குச் செல்

அசரப் பகலவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Ashraf Pahlavi
Pahlavi, c. 1974
பிறப்புZahra Pahlavi[1]
(1919-10-26)26 அக்டோபர் 1919
Tehran, Sublime State of Iran
இறப்பு7 சனவரி 2016(2016-01-07) (அகவை 96)
Monte Carlo, Monaco
புதைத்த இடம்14 January 2016
துணைவர்
 • Ali Ghavam
  (தி. 1937; ம.மு. 1942)
 • Ahmad Shafiq
  (தி. 1944; ம.மு. 1960)
 • Mehdi Bushehri (தி. 1960)
குழந்தைகளின்
பெயர்கள்
பெயர்கள்
ஆங்கில மொழி: Ashraf ol-Molouk
பாரசீக மொழி: اشرف‌الملوک
மரபுPahlavi
தந்தைReza Shah
தாய்Tadj ol-Molouk

அசரப் ஓல்-மலோக் பகலவி ( Ashraf ol-Molouk Pahlavi )[2] ( Ashraf ol-Molouk Pahlavi ) (அக்டோபர் 1919 - 7 ஜனவரி 2016) ஈரானை ஆண்ட ( பெர்சியா ) பகலவி வம்சத்தின் கடைசி ஷா முகமது ரெசா பகலவியுடன் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரி ஆவார். இவர் "தனது சகோதரரை பின்னிருந்து இயக்கும் சக்தியாக" கருதப்பட்டார். மேலும், ஷாவின் முடியாட்சியை வலுப்படுத்துவதற்கு ஆதரவாக பிரதம மந்திரி முகமது மொசாதெக்கை தூக்கியெறிந்த 1953 சதியில் முக்கிய பங்கு வகித்தார். [3] ஈரான் நாட்டின் பிரதம அமைச்சராக இருந்த முகம்மது மொசாதெக் தலைமையிலான அரசை கவிழ்த்து வேறு ஆட்சியை அமைப்பதற்காக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் வைத்த பெயராகும். எண்ணெய் வர்த்தகத்தில் முரண்பாடுகள் காரணமாக தமக்கு இணக்கமாக நடந்துகொள்ளாத போக்கிற்காகவும் மொசெடகின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் இந்த சம்பவத்தை நிகழ்த்தின. [4][5][6] இவர் தனது சகோதரருக்கு அரண்மனை ஆலோசகராக பணியாற்றினார். பெண்களின் உரிமைகளுக்காக வலுவாக் குரல் கொடுப்பவராகவும் இருந்தார். [7] 1979 இல் ஏற்பட்ட ஈரானிய புரட்சியைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட இவர் இவர் பிரான்சு, நியூயார்க்கு, பாரிசு மற்றும் மான்டே கார்லோ ஆகிய நாடுகளுக்குச் சென்று ஈரானிய இசுலாமியக் குடியரசை எதிர்த்து வெளிப்படையாகப் பேசினார். [3]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அசரப் பகலவி 1919 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தெகுரானில் ரேசா ஷா பகலவி மற்றும் அவரது இரண்டாவது மனைவி தாட்ஜ் உல்-மொலுக் ஆகியோருக்கு மகளாக இவரது சகோதரர் முகமது ரேசாவுக்கு ஐந்து மணி நேரம் கழித்து பிறந்தார். [7] இவருக்கு உடன்பிறப்புகள் மற்றும் ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் என பத்து பேர் இருந்தனர். [7]

சமுதாயப் பங்கு

[தொகு]

1930 களின் முற்பகுதியில், பாரம்பரிய முக்காடு அணிவதை நிறுத்திய முதல் குறிப்பிடத்தக்க ஈரானிய பெண்களில் அசரப் பகலவி, இவரது மூத்த சகோதரி சம்சு மற்றும் இவர்களின் தாயார் ஆகியோர் அடங்குவர். [7] இவர் தனது தந்தை ஷாவின் ஆட்சியின் போது ஈரானில் முக்காடை ( ஹிஜாப் ) ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். சமூகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க இந்த் முக்காடு ஒரு பெரிய அடையாள முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. மேலும் அமைதியின்மை ஏற்படாதவாறு ஷா படிப்படியாக சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்: 1933 இல் பெண் ஆசிரியர்களும், 1935 ஆம் ஆண்டில் பள்ளி மாணவிகளும் முக்காடு அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 8 ஜனவரி 1936 அன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் இவரும் இவரது சகோதரி உட்பட இவரது தாயும் கலந்து கொண்டனர். [8] அன்றைய நாளில் ரெசா ஷா, தெகுரான் ஆசிரியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இராணி மற்றும் அவர்களது இரண்டு மகள்களுடன் முக்காடு இல்லாமல் நவீன ஆடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டார்.  இராணி சான்றிதழ்களை வழங்கினார்.  ஈரானிய ராணி ஒருவர் பொது வெளியில் தன்னை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறை. அதன்பிறகு, ஷா தனது மனைவி மற்றும் மகள்களின் படங்களை வெளியிட்டு, ஈரான் முழுவதும் அமலாக்கினார்.

1932 ஆம் ஆண்டில், ஜம்இயத்-இ நெஸ்வான்-இ வதன்காவால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது கிழக்கு மகளிர் மாநாட்டை இவர் தொகுத்து வழங்கினார். [9] அசரப் பகலவி பல்கலைக்கழகத்தில் சேர அனுமதிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக 1937 இல், தனது 18 வயதில், மிர்சா கான் கவாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கவாமின் குடும்பம் இவரது தந்தையுடன் அரசியல் ரீதியாக இணைந்திருந்தது. [7]

அரசியல்

[தொகு]
இளமையில் அசரப் பகலவி

அசரப் பகலவி தனது சகோதரரின் ஆட்சியின் போது ஈரானிலும் உலகிலும் பெண்களின் உரிமைகளுக்கு வலுவான ஆதரவாளராக இருந்தார். 1967 இல், பகலவி ஐக்கிய நாடுகள் சபையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஆகியவற்றில் ஈரானியப் பிரதிநிதியாக பணியாற்றினார். [10] 1975 ஆம் ஆண்டில், இவர் சர்வதேச மகளிர் ஆண்டுடன் பெரிதும் ஈடுபட்டார். மேலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் உரையாற்றினார். [7]

கூடுதலாக, பகலவி மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்கான ஆர்வலராக பணியாற்றினார். இவர் எழுத்தறிவின் சர்வதேசப் பரவலுக்கு ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக ஈரானில், இவரது சகோதரர் முகமது ரேசா ஷா எழுத்தறிவின்மைக்கு எதிரான இயக்கத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். எழுத்தறிவுக்கான சர்வதேச ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1977 கோடையில் பிரெஞ்சு ரிவியராவில் உள்ள இவரது கோடைகால இல்லத்தில் இவரைக் கொல்ல ஒரு முயற்சி நடந்தது. இவரது ரோல்ஸ் ராய்ஸ் வாகனத்தின் பக்கவாட்டில் பதினான்கு தோட்டாக்கள் பாய்ந்தன. இதில் இவரது உதவியாளர் கொல்லப்பட்டார். ஆனால் சரப் பகலவி காயமின்றி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். [11] [2] [12]

1979 புரட்சிக்குப் பிறகு, அசரப் பகலவி தனது சகோதரர் முகமது ரேசாவின் புகலிடம் தேடும் முயற்சிகளை ஆதரிக்குமாறு டேவிட் ராக்பெல்லரிடம் கேட்டார். [13]

புரட்சியின் தொடக்கத்தின் போது தனது மறைந்த சகோதரர் ஷாவிற்கு ஆதரவளிக்கவில்லை என்பதற்காக அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டர் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் கர்ட் வால்ட்ஹெய்ம் ஆகியோரைத் தாக்கி பேசினார்.[12] ஆனாலும் 1994 இல் இவர் முன்னாள் ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். [14]

இறப்பு

[தொகு]

ஆல்சைமர் நோயயால் பாதிக்கப்பட்டிருந்த இளவரசி அசரப் பகலவி 7 ஜனவரி 2016 அன்று மான்டே கார்லோவில் தனது 96வது வயதில் காலமானார் [2] [15]

இவரது இறுதிச் சடங்கு 14 ஜனவரி 2016 அன்று மொனாக்கோவிலுள்ள சிமிட்டியர் டி கல்லறையில்நடைபெற்றது. இதில் பேரரசி பரா பகலவி உட்பட பகலவி குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். [16] தான் இறக்கும் போது, இவர்தான் குடும்பத்தில் வாழும் மூத்த உறுப்பினராக இருந்தார். [7]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Exemption from court fees in lawsuits against the heirs and relatives of the deceased king". Islamic Parliament Research Center of The Islamic Republic of IRAN (in Persian). Archived from the original on 18 November 2021. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. 2.0 2.1 2.2 Liam Stack. "Ashraf Pahlavi, Sister of Iran's Last Shah, Dies at 96". The New York Times. https://www.nytimes.com/2016/01/08/world/middleeast/ashraf-pahlavi-sister-of-irans-last-shah-defender-and-diplomat-dies-at-96.html. பார்த்த நாள்: 8 January 2016. 
 3. 3.0 3.1 "Iranian Princess Ashraf, shah's twin sister, dies at age 96". Yahoo News. பார்க்கப்பட்ட நாள் 5 February 2017.
 4. Parsa, Misagh (1989). Social origins of the Iranian revolution. Rutgers University Press. p. 160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-1411-8. இணையக் கணினி நூலக மைய எண் 760397425.
 5. Samad, Yunas; Sen, Kasturi (2007). Islam in the European Union: Transnationalism, Youth and the War on Terrors. Oxford University Press. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-547251-6.
 6. Steven R. Ward (2009). Immortal: A Military History of Iran and Its Armed Forces. Georgetown University Press. p. 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58901-587-6.
 7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 Brian Murphy. "Ashraf Pahlavi, twin sister of Iran's late shah, dies at 96" (in en-US). The Washington Post. https://www.washingtonpost.com/world/middle_east/ashraf-pahlavi-twin-sister-of-irans-late-shah-dies-at-96/2016/01/08/e5df0e32-b5b7-11e5-9388-466021d971de_story.html. பார்த்த நாள்: 8 January 2016. 
 8. Guity Nashat (2004). "Introduction". Women in Iran from 1800 to the Islamic Republic. Urbana and Chicago, IL: University of Illinois Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-252-02937-0.
 9. Haleh Esfandiari: Reconstructed Lives: Women and Iran's Islamic Revolution
 10. Kathleen Teltsch (22 March 1970). "She may be a Princess, but Shah's Twin is more Interested in Equal Rights". The New York Times. 
 11. "Gunmen Try to Kill Shah's Sister". The Washington Post. https://www.washingtonpost.com/archive/politics/1977/09/14/gunmen-try-to-kill-shahs-sister/a7b4f15d-a720-434b-a86e-a1b0e361d945/. பார்த்த நாள்: 2022-06-11. 
 12. 12.0 12.1 "Princess' book defends shah, attacks Carter". Star News. 23 October 1980. https://news.google.com/newspapers?nid=1454&dat=19800423&id=fMksAAAAIBAJ&sjid=RBMEAAAAIBAJ&pg=6548,5038930&hl=fi=vIFDAAAAIBAJ&sjid=jq4MAAAAIBAJ&pg=5677,74054&dq=shah's+mother+died&hl=en. 
 13. Boyd, Lyn (2000). "A King's exile" (PDF). USC. Archived from the original (PDF) on 22 December 2016. பார்க்கப்பட்ட நாள் 14 February 2013.
 14. Jon Gambrell (14 January 2016). "Princess Ashraf of Iran: The Shah of Iran's twin sister". The Independent. https://www.independent.co.uk/news/obituaries/princess-ashraf-of-iran-the-shah-of-irans-twin-sister-who-was-regarded-as-the-power-behind-the-a6811176.html. 
 15. "Ashraf Pahlavi, twin sister of Iran's last shah, dead at 96". 9 January 2016. https://news.yahoo.com/ashraf-pahlavi-twin-sister-last-iran-shah-dead-073606016.html. 
 16. "Obsèques d'Ashraf Pahlavi: Farah Diba en deuil, adieu discret à la soeur du Shah". Pure People. 19 January 2016. http://www.purepeople.com/article/obseques-d-ashraf-pahlavi-farah-diba-en-deuil-adieu-discret-a-la-soeur-du-shah_a171130/1. 

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
On her personal website, one can find biographical information about the Princess and her family, as well as information concerning her humanitarian efforts.
 • "Princess Ashraf Pahlavi". Foundation for Iranian Studies. Bethesda, MD, USA. Archived from the original on 22 July 2012. பார்க்கப்பட்ட நாள் 9 March 2013.
The Foundation for Iranian Studies is a non-profit institution dedicated to educating the public about Iran. Princess Ashraf served on the Board of Trustees.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசரப்_பகலவி&oldid=3896303" இலிருந்து மீள்விக்கப்பட்டது