உள்ளடக்கத்துக்குச் செல்

பரா பகலவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரா பகலவி
அரச உடையில் பரா பகலவி, 1973
ஈரான் ஷாவின் ராணி
இராணியாக21 திசம்பர் 1959 – 26 அக்டோபர்r 1967
பேரரசியாக
(ஷாபானு)
26 அக்டோபர் 1967[1] – 11 டிசம்பர் 1979
முடிசூட்டுதல்26 அக்டோபர் 1967
பிறப்புபரா திபி
14 அக்டோபர் 1938 (1938-10-14) (அகவை 85)
தெகுரான்,[2] ஈரான் ஏகாதிபத்திய அரசு
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
  • பட்டத்து இளவரசர் ரிசா பகலவி
  • இளவரசி பர்கானாசு
  • இளவரசர் அலி ரிசா
  • இளவரசி லைலா
மரபுபகலவி வம்சம் (திருமணத்தின் மூலம்)
தந்தைசோரப் திபா
தாய்பரீதா கோத்பி
கையொப்பம்பரா பகலவி's signature

பரா பகலவி ( Farah Pahlavi ) ( பிறப்பு 14 அக்டோபர் 1938) பகலவி வம்சத்தின் இரண்டாம் மன்னரும், ஈரான் நாட்டின் கடைசி அரசருமான முகமது ரிசா பகலவியின் மனைவியாவார். மேலும் இவர் 1959 முதல் 1979 வரை ஈரானின் ராணியாகவும் பேரரசியாகவும் இருந்தார். ஒரு செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவர் தனது தந்தையை தனது சிறுவயதிலேயே இழந்தார். பாரிஸில் கட்டிடக்கலை படிக்கும் போது, ஈரானிய தூதரகத்தில் முகமது ரிசாவுடன் அறிமுகமானார். இவர்கள் டிசம்பர் 1959 இல் திருமணம் செய்து கொண்டனர். சாவின் முதல் இரண்டு திருமணங்களிலும் வாரிசுக்கான மகன் பிறக்கவில்லை. பரா பகலவியுடனான திருமணம் மூலம் அடுத்த ஆண்டு அக்டோபரில் பட்டத்து இளவரசர் ரிசா பிறந்ததில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பரா அரசியலில் அனுமதிக்கப்படவில்லை என்றாலும், சுதந்திரமாக இருந்தார். இவர் பல தொண்டு நிறுவனங்களுக்காக பணியாற்றினார். மேலும் ஈரானின் முதல் அமெரிக்க பாணி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார். நாட்டில் அதிகமான பெண்கள் மாணவிகளாக மாற உதவினார். வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து ஈரானிய பழங்கால பொருட்களை திரும்ப வாங்கவும் இவர் உதவினார்.

1978 களில், பொதுவுடைமை, சமூகவுடைமை மற்றும் இசுலாமியவாதத்தால் தூண்டப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைதியின்மை ஈரான் முழுவதும் வரவிருக்கும் புரட்சியின் தெளிவான அறிகுறிகளைக் காட்டியது. ஜனவரி 1979 இல் மரண தண்டனை அச்சுறுத்தலின் கீழ் ராணியும் சுல்தானும் நாட்டை விட்டு வெளியேறினர். பெரும்பாலான நாடுகள் இவர்களுக்கு புகலிடம் அளிக்க தயங்கின. எகிப்தின் அன்வர் சதாத் விதிவிலக்காக இருந்தார். நாடு திரும்பினால் மரணதண்டனையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்ற நிலையில் இருவரும் இருந்தனர். நாடுகடத்தப்பட்ட முகமது ரேசா உடல்நிலை மோசமடைந்து ஜூலை 1980 இல் இறந்தார். விதவையான பரா தனது தொண்டு பணியைத் தொடர்ந்தார். வாசிங்டன், டி. சி. மற்றும் பாரிஸ் இடையே வசிக்கத் தொடங்கினர்.

குழந்தைப் பருவம்

[தொகு]
பாரிஸில் ஈரானிய சாரணர்களுடன் பரா, ( சுமார். 1956 )

பரா திபா என்ற பெயரில் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி தெகுரானில் ஒரு மேல்தட்டு குடும்பத்தில் பிறந்தார். [3] [4] [5] இவர், கேப்டன் சோராப் திபா (1899-1948) மற்றும் அவரது மனைவி பரிதே கோட்பி (1920-2000) ஆகியோரின் ஒரே குழந்தையாவார். இவரது நினைவுக் குறிப்பில், தனது தந்தையின் குடும்பம் ஈரானிய அஜர்பைஜானைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்றும், தனது தாயின் குடும்பம் ஈரானின் காசுப்பியன் கடற்கரையிலுள்ள லகிஜானில் வசிக்கும் கிலாக் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் எழுதினார். [6]

கல்வி

[தொகு]

இளம் பரா திபா தெகுரானில் உள்ள இத்தாலிய பள்ளியில் தனது கல்வியைத் தொடங்கினார். பின்னர் பதினாறு வயது வரை பிரெஞ்சு ஜீன் டி ஆர்க் பள்ளிக்கும், பின்னர் லைசி ராசிக்கும் சென்றார். [7] இவர் தனது இளமை பருவத்தில் ஒரு விளையாட்டு வீரராக இருந்தார். தனது பள்ளியின் கூடைப்பந்து அணியின் தலைவராக இருந்தார். ராசி உயர்நிலைப்பள்ளியில் தனது படிப்பை முடித்தவுடன், இவர் பாரிஸில் இல் கட்டிடக்கலையைப் பயின்றார். [8]

இந்த நேரத்தில் வெளிநாட்டில் படிக்கும் பல ஈரானிய மாணவர்கள் அரசின் உதவியை நம்பியிருந்தனர். எனவே, ஷா, மாநிலத் தலைவராக, வெளிநாடுகளுக்கு அலுவல்ரீதியாகச் செல்லும்போது, அவர் உள்ளூர் ஈரானிய மாணவர்களை அடிக்கடி சந்தித்தார். 1959 இல் பாரிஸில் உள்ள ஈரானியத் தூதரகத்தில் நடந்த அத்தகைய சந்திப்பின் போதுதான் பரா திபா முதன்முதலில் முகமது ரெசா பகலவியை சந்தித்தார்.

1959 ஆம் ஆண்டு கோடையில் தெகுரானுக்குத் திரும்பிய பிறகு, முகமது ரேசா மற்றும் பரா திபா இருவருக்கும் 23 நவம்பர் 1959 அன்று நிச்சயதார்த்தம் நடந்தது.

திருமணம் மற்றும் குடும்பம்

[தொகு]
தனது திருமண நாளில் பரா, 21 டிசம்பர் 1959

பரா திபா 20 டிசம்பர் 1959 அன்று 21 வயதில் முகம்மத் ரிசாவை மணந்தார். ஈரானின் இத்திருமணம் உலகளாவிய ஊடக கவனத்தைப் பெற்றது. [9]

இத்திருமணம் மூலம் முகமத் ரிசாவுக்கு ஏகாதிபத்தியத்தின் ஆண் வாரிசை பெற்றெடுக்க வேண்டியத் தேவை பராவிற்கு இருந்தது. முகமது ரிசா இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், அவரது முந்தைய திருமணங்கள் மூலம் ஒரு மகள் மட்டுமே பிறந்தார். இதனால் அரியணைக்கு ஒரு ஆண் வாரிசைப் பெற்றெடுக்கவேண்டி பராவுக்கு அழுத்தம் கடுமையாக இருந்தது. ஷா தனது அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் போலவே தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதில் முகுந்த ஆர்வத்துடன் இருந்தார். [10] மேலும், முகமது ரிசாவுக்கும் ராணி சோரயாவுக்கும் நடந்த முந்தைய திருமணம் முறிந்து போனதற்கு சோரயாவின் மலட்டுத்தன்மையே காரணம் என்றும் கூறப்பட்டது. [11]

தங்களின் நான்கு குழந்தைகளுடன் பரா மற்றும் முகமது ரிசா , 1973

பின்னர், தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தனர்:

  • ஈரானின் பட்டத்து இளவரசர் ரிசா பகலவி (பிறப்பு 31 அக்டோபர் 1960). இவருக்கும் இவரது மனைவி யாஸ்மினுக்கும் மூன்று மகள்கள் பிறந்தனர்.
    • இளவரசி நூர் பகலவி (பிறப்பு 3 ஏப்ரல் 1992)
    • இளவரசி இமான் பகலவி (பிறப்பு 12 செப்டம்பர் 1993)
    • இளவரசி பரா பகலவி (பிறப்பு 17 ஜனவரி 2004)
  • ஈரானின் இளவரசி பரானாசு பகலவி (பிறப்பு 12 மார்ச் 1963)
  • ஈரானின் இளவரசர் அலி ரிசா பகலவி (28 ஏப்ரல் 1966 - 4 ஜனவரி 2011). இவருக்கும் இவரது மனைவி ராகா திதேவருக்கும் ஒரு மகள் இருந்தாள். [12]
    • இரியானா லீலா பகலவி (பிறப்பு 26 ஜூலை 2011)
  • ஈரானின் இளவரசி லைலா பகலவி (27 மார்ச் 1970 - 10 ஜூன் 2001)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Queen Farah Pahlavi". farahpahlavi.org. பார்க்கப்பட்ட நாள் 27 January 2024.
  2. Afkhami, Gholam Reza (12 January 2009). The Life and Times of the Shah. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520942165.
  3. Afkhami, Gholam Reza (12 January 2009). The life and times of the Shah (1 ed.). University of California Press. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-25328-5.
  4. Shakibi, Zhand. Revolutions and the Collapse of Monarchy: Human Agency and the Making of Revolution in France, Russia, and Iran. I.B. Tauris. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84511-292-9.
  5. Taheri, Amir.
  6. Pahlavi, Farah.
  7. "Empress Farah Pahlavi Official Site - سایت رسمی‌ شهبانو فرح پهلوی". farahpahlavi.org. Archived from the original on 15 July 2012. பார்க்கப்பட்ட நாள் 2 June 2013.
  8. Translation, History and Arts: New Horizons in Asian Interdisciplinary Humanities Research.
  9. Snodgrass, Mary Ellen (17 March 2015). World Clothing and Fashion: An Encyclopedia of History, Culture, and Social Influence (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317451679.
  10. Pahlavi, Farah.
  11. "Queen of Iran Accepts Divorce As Sacrifice", த நியூயார்க் டைம்ஸ், 15 March 1958, p. 4.
  12. "Announcement of Birth". Reza Pahlavi. Archived from the original on 30 September 2011. பார்க்கப்பட்ட நாள் 5 August 2011.

Bibliography

[தொகு]
[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பரா பகலவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரா_பகலவி&oldid=3883595" இலிருந்து மீள்விக்கப்பட்டது