தாட்ஜ் உல்-மொலுக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாட்ஜ் உல்-மொலுக்
ஈரானின் ராணி மனைவி
Tenure15 டிசம்பர் 1925 – 16 செப்டம்பர் 1941
பிறப்புநிம்தாஜ் அய்ரோம்லோ[1]
(1896-03-17)17 மார்ச்சு 1896
பக்கூ, உருசியப் பேரரசு
(நவீன அசர்பைஜான்)
இறப்பு10 மார்ச்சு 1982(1982-03-10) (அகவை 85)
அகபல்கோ, மெக்சிகோ
துணைவர்
குழந்தைகளின்
பெயர்கள்
இளவரசர் சம்சு பகலவி
முகமது ரெசா ஷா
இளவரசி அசரப் பகலவி
இளவரசி அலி ரெசா பகலவி
மரபுபகலவி (திருமணம் மூலம்)
தந்தைதெய்முர் கான் அய்ரோம்லோ
தாய்மாலேக் ஓஸ்-சுல்தான்[2]

தாட்ஜ் உல்-மொலுக் ( Tadj ol-Molouk ) ( 17 மார்ச் 1896 - 10 மார்ச் 1982) 1925 மற்றும் 1941 க்கும் இடையில் ஈரானில் ஆட்சியிலிருந்த பகலவி வம்சத்தின் நிறுவனர் ரேசா ஷா பகலவியின் இரண்டாவது மனைவியாவார். இவர் ஈரானின் ராணியான பிறகு பாரசீக மொழியில் "மன்னர்களின் கிரீடம்" என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. ஏழாவது நூற்றாண்டில் நடந்த முஸ்லிம் வெற்றிக்குப் பிறகு ஈரானில் பொது அரச பிரதிநிதித்துவத்தில் பங்கேற்ற முதல் ராணியவார். மேலும் இவர் 1936 இல் காஷ்ஃப்-இ ஹிஜாப் இயக்கத்தில் (முக்காடு தடை) முக்கிய பங்கு வகித்தார்.

சுயசரிதை[தொகு]

இவர் துருக்கிய அய்ரம் பழங்குடியினத்தைச் சேர்ந்த பிரிகேடியர் தெய்முர் கான் அய்ரோம்லோ,[3] மற்றும் அவரது மனைவி மாலெக் ஓஸ்-சுல்தானின் மகளாவார்.

1916 இல் , ரேசா கானுடன் இவரது திருமணம் நடந்தது. அந்த நேரத்தில் ரேசா கானின் இராணுவ வாழ்க்கைக்கு இத்திருமணம் பெரிதும் உதவியது. இதன் மூலம் அவர் இராணுவ படிநிலையில் முன்னேற முடிந்தது. இவர்களுக்கு சம்சு, முகமது ரேசா ( ஈரானின் கடைசி ஷா), அசரப் பகலவி மற்றும் அலி ரேசா என நான்கு குழந்தைகள் இருந்தனர் . [4]

இராணியாக[தொகு]

1926 மற்றும் 1941 க்கு இடையில், ராணி தாட்ஜ் ஓல்-மொலூக்.

பிப்ரவரி 23, 1921 இல், தெகுரானில் ஒரு சதியின் மூலம் ரேசா கான் ஆட்சியைப் பிடித்தார். டிசம்பர் 15, 1925 இல், இவரது கணவருக்கு ஷா பட்டம் அறிவிக்கப்பட்டது. இவருக்கு மாலேக் (ராணி) என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

தனிப்பட்ட முறையில், தாட்ஜ் உல்-மொலுக் இந்த கட்டத்தில் ரேசா ஷாவுடன் வாழவில்லை. ஏனெனில் ஷா தனது மற்ற மனைவிகளான துரான் அமீர்சோலைமானி மற்றும் 1923 முதல் எசுமத் தௌத்சாகி ஆகியோருடன் அதிக நேரத்தை செலவிட்டதாக கூறப்படுகிறது. இவரும் தன் சொந்த முயற்சியில் அரசியலில் ஈடுபடவில்லை. இருப்பினும், கணவனின் ஆட்சியின் போது இவருக்கு ராணி பதவி வழங்கப்பட்டது. இது பெண்கள் மீதான ஷாவின் கொள்கையில் முக்கிய பங்கைக் குறிக்கிறது. ஈரானின் முதல் ராணியாக இவர் ஒரு பொதுசமூகத்தில் அதிகாரப்பூர்வ பதவியை வகித்தார்.

சமூகப் பங்களிப்பு[தொகு]

ஈரானில் பெண்களின் பங்கு என்ற புதிய கொள்கையில் பொது பிரதிநிதித்துவ கடமைகளில் பங்கேற்கும் ஒரு ராணியாக இவரது பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் துருக்கியின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது இவரது கணவரின் கொள்கையாக இருந்தது. [5]

1928 ஆம் ஆண்டில், குவோம் பகுதிக்கு புனித யாத்திரை சென்றபோது இராணி பாத்திமா மசுமே ஆலயத்தில் நுழைந்து தொழுகையில் ஈடுபட்டார். அங்கு இவர் முகத்தை முழுவதுமாக மறைக்காத முக்காடு அணிந்திருந்தார். இது பள்ளிவாசலின் மதகுருவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மறுநாள் ராணியை விமர்சித்த மதகுருவை ரேசா ஷா பகிரங்கமாக தண்டித்தார். [6] பெண் ஆசிரியர்களும் மாணவர்களும் முக்காடு அணியாமல் இருக்க அனுமதிக்கும் சீர்திருத்தம், அதே போல் பெண் மாணவர்களை ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதிப்பது போன்ற சீர்திருத்தங்கள் அனைத்தும் சியா மதகுருமார்களால் எதிர்க்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன. [7]

இவர் தனது கணவரின் ஆட்சியின் போது ஈரானில் முக்காடை ( ஹிஜாப் ) ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்தார். சமூகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க இந்த் முக்காடு ஒரு பெரிய அடையாள முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. மேலும் அமைதியின்மை ஏற்படாதவாறு ஷா படிப்படியாக சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார்: 1933 இல் பெண் ஆசிரியர்களும், 1935 ஆம் ஆண்டில் பள்ளி மாணவிகளும் முக்காடு அணிவதிலிருந்து விலக்களிக்கப்பட்டனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 8 ஜனவரி 1936 அன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் இராணி மற்றும் அவரது மகள்களுக்கு முக்கிய பங்கு வழங்கப்பட்டது. [5] அன்றைய நாளில் ரெசா ஷா தெகுரான் ஆசிரியர் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் இராணி மற்றும் அவர்களது இரண்டு மகள்களுடன் முக்காடு இல்லாமல் நவீன ஆடைகளை அணிந்து கொண்டு கலந்து கொண்டார். [5] இராணி சான்றிதழ்களை வழங்கினார். [5] ஈரானிய ராணி ஒருவர் பொது வெளியில் தன்னை வெளிப்படுத்தியது இதுவே முதல் முறை. அதன்பிறகு, ஷா தனது மனைவி மற்றும் மகள்களின் படங்களை வெளியிட்டு, ஈரான் முழுவதும் அமலாக்கினார். [5]

இறப்பு[தொகு]

இவர் தனது 86வது பிறந்தநாளுக்கு ஏழு நாட்களுக்கு முன்பு 10 மார்ச் 1982 அன்று மெக்சிகோவின் அகபல்கோவில் இறந்தார். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tehran museum restoring royal robe of Tajolmoluk Pahlavi".
  2. "Exemption from court fees in lawsuits against the heirs and relatives of the deceased king". Islamic Parliament Research Center of The Islamic Republic of IRAN (in Persian). Archived from the original on 18 November 2021. பார்க்கப்பட்ட நாள் 21 April 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Wives of Reza Shah". Institute for Iranian Contemporary Historical Studies (in பெர்ஷியன்). Archived from the original on 5 February 2022. பார்க்கப்பட்ட நாள் 19 April 2021.
  4. Cyrus Ghani (2001). Iran and the Rise of the Reza Shah: From Qajar Collapse to Pahlavi Power. London: I.B.Tauris. பக். 194. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86064-629-4. https://books.google.com/books?id=VGZItY9kL0AC&pg=PA194. 
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 Guity Nashat (2004). "Introduction". Women in Iran from 1800 to the Islamic Republic. Urbana and Chicago, IL: University of Illinois Press. பக். 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-252-02937-0. https://books.google.com/books?id=tLRgXf_e_CEC&pg=PP16. 
  6. Fazle Chowdhury: Promises of Betrayals: The History That Shaped the Iranian Shia Clerics
  7. Fazle Chowdhury: Promises of Betrayals: The History That Shaped the Iranian Shia Clerics
  8. "Late Shah's mother dies". Gadsden Times. AP (Paris). 16 March 1982. https://news.google.com/newspapers?id=CaYfAAAAIBAJ&sjid=YNYEAAAAIBAJ&pg=5396,2674950&dq=shah's+mother+died&hl=en. 

பிற ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாட்ஜ்_உல்-மொலுக்&oldid=3884609" இலிருந்து மீள்விக்கப்பட்டது