அகபல்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகபல்கோ
நகரம் மற்றும் நகராட்சி
அகபல்கோ டி யுவாரெசு
Acapulco de Juárez
அகபல்கோ விரிகாட்சி ஒட்டுப்படிமம். மேல், இடதிலிருந்து வலதாக: அமைதிப் பள்ளியிலிருந்து அகபல்கோ விரிகுடா, பல்மா சோலாவிலுள்ள பாறைச்சிற்பங்கள், நியூசுட்ரா செனோரா டி லா சோலெடாட் பேராலயம், டோலொரெசு ஓல்மெடோ இல்லத்தில் டியேகோ ரிவேரா குறித்த சுவர்ச்சித்திரங்கள், சான் டியேகோ கோட்டை, லா குயெப்ராடா, லா காண்டெசா கடற்கரை, அகபல்கோ டோரடொ மற்றும் அகபல்கோ டியாமான்டே.
அகபல்கோ விரிகாட்சி ஒட்டுப்படிமம். மேல், இடதிலிருந்து வலதாக: அமைதிப் பள்ளியிலிருந்து அகபல்கோ விரிகுடா, பல்மா சோலாவிலுள்ள பாறைச்சிற்பங்கள், நியூசுட்ரா செனோரா டி லா சோலெடாட் பேராலயம், டோலொரெசு ஓல்மெடோ இல்லத்தில் டியேகோ ரிவேரா குறித்த சுவர்ச்சித்திரங்கள், சான் டியேகோ கோட்டை, லா குயெப்ராடா, லா காண்டெசா கடற்கரை, அகபல்கோ டோரடொ மற்றும் அகபல்கோ டியாமான்டே.
அகபல்கோ-இன் சின்னம்
சின்னம்
நாடு மெக்சிக்கோ
மாநிலம்குயெர்ரெரோ
நிறுவப்பட்டது1520s
அரசு
 • நகராட்சித் தலைவர்லூயி வால்டன் (2012–2015)
பரப்பளவு
 • நகராட்சி1,880.60 km2 (726.10 sq mi)
 • நகர்ப்புறம்85 km2 (33 sq mi)
 • Metro3,538.5 km2 (1,366.2 sq mi)
ஏற்றம் (of seat)30 m (100 ft)
மக்கள்தொகை (2012)
 • நகராட்சி6,87,608
 • அடர்த்தி370/km2 (950/sq mi)
 • பெருநகர்10,21,000
இனங்கள்Acapulqueño (a)
Porteño (a)
நேர வலயம்CST (ஒசநே−6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே−5)
அஞ்சல் குறியீடு39300-39937
தொலைபேசி குறியீடு744
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம் (எசுப்பானியம்)

அகபல்கோ டி யுவாரெசு (Acapulco de Juárez, எசுப்பானியம்: [akaˈpulko de ˈxwaɾes]), பொதுவாக அகபல்கோ, மெக்சிக்கோவின் அமைதிப் பெருங்கடலோரத்தில் குயிர்ரெரோ மாநிலத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சியும் முதன்மைத் துறைமுகமும் ஆகும். இந்த நகரம் மெக்சிக்கோ நகரத்திலிருந்து தென்மேற்கே 380 கிலோமீட்டர்கள் (240 mi) தொலைவில் அமைந்துள்ளது. ஆழமான, அரைவட்டமாக அமைந்த விரிகுடாப் பகுதியில் அமைந்துள்ளதால் அகபல்கோ ஓர் இயற்கைத் துறைமுகமாக மெக்சிக்கோவின் துவக்க குடிமைப்படுத்தல் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது.[1] பனாமாவிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் கப்பல்கள் இங்கு வந்து செல்கின்றன.[2] மாநிலத்தின் தலைநகரான சில்பான்சிங்கோவை விட பெரிய நகரமாக அகபல்கோ விளங்குகின்றது. தவிரவும் இது மெக்சிக்கோவின் மிகப்பெரும் கடற்கரையாகவும் சுகவாசத்தலமாகவும் (பால்னியாரியோ) விளங்குகின்றது.[3]

மெக்சிக்கோவின் பழமைவாய்ந்த கடலோர மனமகிழ் இடமாக புகழ்பெற்றுள்ள அகபல்கோ 1950களில் ஹாலிவுட் நட்சத்திரங்களும் பெருந்தனவந்தர்களும் பொழுதுபோக்குமிடமாக இருந்தது.[4][5][6][7] இன்றும் இரவு வாழ்க்கைக்காக புகழ்பெற்றுள்ள அகபல்கோ பல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்தாலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் உள்ளூர் மெக்சிக்கோ நாட்டினரே.[8][9] பொழுதுபோக்குத்தலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது: விரிகுடாவின் வடமுனை "மரபான" பகுதியாக கருதப்படுகின்றது - இங்குதான் இருபதாம் நூற்றாண்டில் புகழ்பெற்றவர்கள் விடுமுறையைக் கழித்தனர். தென் முனையில் தற்கால நவீன சொகுசு உயரடுக்கு தங்குவிடுதிகள் உள்ளன.[10]

"அகபல்கோ" என்ற பெயர் நாகவற் மொழியில் Aca-pōl-co என்பதிலிருந்து பிறந்துள்ளது; இதன் பொருள் "தேவைகள் அழிக்கப்படும் அல்லது கழுவிச் செல்லப்படுமிடம்" என்பதாகும்.[11] 1885இல் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த பெனிடோ யுவாரெசின் நினைவாக "டி யுவாரெசு" என்ற ஒட்டு அலுவல்முறை ஆவணங்களில் சேர்க்கப்பட்டது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Enciclopedia de los Municipios de México Estado de Guerrero Acapulco de Juárez" (in Spanish). Mexico: INAFED. http://www.e-local.gob.mx/work/templates/enciclo/guerrero/municipios/12001a.htm. பார்த்த நாள்: January 10, 2010. 
  2. "History of API Acapulco". Acapulco, Guerrero accessdate=January 10, 2010: Administracion Portuaria Integral. http://www.apiacapulcoport.com/whois_api.html.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://apiacapulcoport.com/whois_api.html. 
  3. "INEGI Census 2005" (in Spanish) இம் மூலத்தில் இருந்து 2010-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5msVc9rGy?url=http://www.inegi.gob.mx/est/contenidos/espanol/sistemas/conteo2005/localidad/iter/. பார்த்த நாள்: 2010-01-10. 
  4. Lee Stacy. Mexico and the United States. New York: Marshall Cavendish Publishing, 2003. p. 954 (p. 16). ISBN 978-07-61-47403-6.
  5. Arleen Alleman. Currents of vengeance : a Darcy Farthing novel. Xlibris Corp Publishing, 2011. p. 292 (p. 118). ISBN 978-14-65-33577-7.
  6. Vacation Magazine |
  7. "History for Acapulco". Niles' Guides இம் மூலத்தில் இருந்து ஜனவரி 13, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100113102315/http://www.nileguide.com/destination/acapulco/overview/history. பார்த்த நாள்: January 10, 2010. 
  8. Juarez, Alfonso (December 30, 2009). "Confían en salvar temporada turística [Trusting in saving the tourist season]" (in Spanish). Reforma (Mexico City): p. 12. 
  9. "Introduction to Acapulco". Frommer's Guides. http://www.frommers.com/destinations/acapulco/0036010001.html. பார்த்த நாள்: January 10, 2010. 
  10. Oliver, Mike; Rita Oliver. "The sunniest Acapulco". MexConnect. http://www.mexconnect.com/articles/705-the-sunniest-acapulco. பார்த்த நாள்: January 10, 2010. 
  11. Robelo, Cecelio A. (1912). Diccionario de Aztequismos. Mexico: Imp. del Museo N. de Arquelogía, Historia y Etnología. பக். 43–44. 

வெளியிணைப்புகள்[தொகு]

  • [1] acapulco mexico
  • [2] Images acapulco mexico
  • [3]

ஒளிதம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகபல்கோ&oldid=3574699" இருந்து மீள்விக்கப்பட்டது