உள்ளடக்கத்துக்குச் செல்

அரைவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
r அலகு ஆரமுள்ள அரைவட்டம்.

வடிவவியலில், அரைவட்டம்(semicircle) என்பது ஒரு வட்டத்தில் பாதியளவு கொண்ட இருபரிமாண வடிவமாகும். 360° கொண்ட வட்டத்தில் பாதியாக அரைவட்டம் இருப்பதால், அரைவட்டத்தின் வில்லின் அளவு 180° அல்லது அரைத்திருப்பமாக இருக்கும். ஒரு அரைவட்டத்துக்குள் வரையப்பட்ட முக்கோணம் எப்பொழுதும் செங்கோண முக்கோணமாக அமையும்.

பயன்கள்

[தொகு]

அரைவட்டத்தைப் பயன்படுத்தி இரு நீளங்களின் கூட்டுச்சராசரி மற்றும் பெருக்கல் சராசரிகளை கவராயம், நேர்விளிம்பு கொண்டு வரைதல் மூலம் காணலாம்.

a மற்றும் b -ஐ எடுத்துக் கொள்க.

  • a+b விட்டமுள்ள அரைவட்டம் வரைய வேண்டும்.
  • இந்த அரைவட்டத்தின் ஆரம் a+b/2 = a, b -ன் கூட்டுச்சராசரி.
  • அரைவட்டத்தின் விட்டத்தை a : b விகிதத்தில் பிரிக்க வேண்டும்.
  • பின் அக்கோட்டுத்துண்டுகளின் பொதுப்புள்ளியையும் அரைவட்டத்தையும் ஒரு செங்குத்துக் கோட்டுத்துண்டால் இணைக்க வேண்டும்.
  • இந்த செங்குத்துக் கோட்டுத்துண்டின் நீளம் = a , b -ன் பெருக்கல் சராசரி.[1] இதனை பித்தேகோரசு தேற்றம் மூலம் நிறுவலாம்.

இம்முறையை ஒரு செவ்வகத்தின் பரப்பு காணப் பயன்படுத்தலாம். (ஏனென்றால் செவ்வகத்தின் பக்க அளவுகளின் பெருக்கல் சராசரியை, பக்க நீளமாகக் கொண்டு வரையப்படும் சதுரத்தின் பரப்பு செவ்வகத்தின் பரப்பிற்கு சமமாக இருக்கும்) சமபரப்புள்ள செவ்வகம் வரையக்கூடிய எந்தவொரு வடிவிற்கும் அதாவது பலகோணம்(வட்டம் நீங்கலாக) போன்றவற்றுக்கு இது பயன்படும்.

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரைவட்டம்&oldid=3421001" இலிருந்து மீள்விக்கப்பட்டது