செவ்வகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செவ்வகம்

செவ்வகம், என்பது வடிவயியல் கணித (கேத்திரக்கணித) அடிப்படை வடிவங்களில் ஒன்று. எதிர்ப் பக்கங்கள் சம நீளம் கொண்டவை. ஒவ்வொரு கோணமும் செங்கோணமாகும். இதனால் எதிர்ப் பக்கங்கள் இணையானவை. மூலை விட்டங்கள் செங்கோணத்தில் ஒன்றையொன்று சம துண்டங்களாக வெட்டுகின்றன. இது இணைகரத்தின் ஒரு சிறப்பு வடிவமாகும்.

செவ்வகத்தின் பரப்பைக் கணித்தல்[தொகு]

ஒரு செவ்வகத்தின் பரப்பளவு அதன் நீளம் மற்றும் அகலம் ஆகியவற்றைப் பெருக்குவதால் கிடைக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு செவ்வகத்தின் நீளம் 5 மீட்டர் மற்றும் அகலம் 6 மீட்டர் எனில், அதன் பரப்பளவு 5 x 6 = 30 சதுர மீட்டர் ஆகும்.

சுற்றளவு, மூலை விட்டத்தின் நீளம்[தொகு]

AC, BD ஆகிய எதிர் எதிர் முனைகளை இணைக்கும் மூலை விட்டங்கள் கோணல் கோடுகள் இரண்டும் ஈடாக (சமமாக) இருக்கும். AC ஈடு BD. எனவே AC = BD.

ஒரு செவ்வகத்தின் அடுத்தடுத்த பக்கங்களின் நீளங்கள் a, b எனில், அதன் சுற்றளவு 2(a+b) ஆகும். மூலை விட்டத்தின் (கோணல் கோட்டின்) நீளம் √(a2+b2)

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வகம்&oldid=1342291" இருந்து மீள்விக்கப்பட்டது