வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
M1M2M3M4 ஒரு செவ்வகம்.

வடிவவியலில் வட்ட நாற்கரங்களின் ஜப்பானியத் தேற்றப்படி (Japanese theorem for cyclic quadrilaterals), ஒரு வட்ட நாற்கரத்தினுள் அமையும் முக்கோணங்களின் உள்வட்ட மையங்கள் ஒரு செவ்வகத்தை உருவாக்கும்.[1]

ஏதாவதொரு வட்ட நாற்கரத்தை அதன் மூலைவிட்டங்களைக் கொண்டு முக்கோணங்களாகப் பிரித்தால் நான்கு முக்கோணங்கள் கிடைக்கும். அந்நான்கு முக்கோணங்களின் உள்வட்ட மையங்களும் ஒரு செவ்வகத்தை அமைக்கும்.

ABCD ஒரு வட்ட நாற்கரம். M1, M2, M3, M4 நான்கும் முறையே ABD, ABC, BCD, ACD முக்கோணங்களின் உள்வட்ட மையங்களெனில், M1, M2, M3, M4 புள்ளிகளை இணைக்கக் கிடைக்கும் நாற்கரம் ஒரு செவ்வகமாகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "A Set of Beautiful Japanese Geometry Theorems-Lemma 3, Page 14" (PDF). Archived from the original (PDF) on 2016-02-07. பார்க்கப்பட்ட நாள் 2016-03-23.

வெளியிணைப்புக்கள்[தொகு]