2024 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Games of the XXXIII Olympiad
2024 கோடை ஒலிம்பிக்சு சின்னம்
நடத்தும் நகரம்பாரிசு, பிரான்சு
குறிக்கோள்விளையாட்டுகளைப் பரவலாகத் திறப்போம்
(பிரெஞ்சு மொழி: Ouvrons grand les Jeux)[1][2]
வீரர்கள்10,500 (ஒதுக்கீடு வரம்பு)[3]
நிகழ்ச்சிகள்329 (32 வகை விளையாட்டுகள்)
துவக்கம்26 சூலை 2024
நிறைவு11 ஆகத்து 2024
அரங்குதுரொக்கதேரோ, செய்ன் ஆறு
(திறப்பு விழா)
பிரான்சு விளையாட்டரங்கு
(நிறைவு விழா)[4]
கோடைக்காலம்
குளிர்காலம்
2024 Summer Paralympics

2024 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள் (2024 Summer Olympics, பிரெஞ்சு மொழி: Jeux olympiques d'été de 2024), அதிகாரபூர்வமாக XXXIII ஒலிம்பியாதுப் போட்டிகள் (Games of the XXXIII Olympiad), பொதுவாக பாரிசு 2024 (Paris 2024), என்பது பிரான்சில் 2024 சூலை 26 முதல் ஆகத்து 11 வரை நடைபெறவுள்ள பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். பிரான்சின் தலைநகர் பாரிசு இப்போட்டிகளை நடத்தும் நகரமாகும், இதைவிட பிரான்சின் 16 ஏனைய நகரங்களிலும், பிரெஞ்சு பொலினீசியாவின் தாகித்தி தீவிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.[5]

2017 செப்டம்பர் 13 அன்று பெரு, லிமா நகரில் நடந்த 131-ஆவது பன்னாட்டு ஒலிம்பிக் குழு (ஐஓசி) அமர்வில் பாரிசுக்கு விளையாட்டுப் போட்டிகள் வழங்கப்பட்டது. பாரிசு, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்கள் மட்டும் போட்டியிட்ட பிறகு, ஐஓசி 2024, 2028 ஆகிய போட்டிகளை ஒரே நேரத்தில் வழங்குவதற்கான செயல்முறைக்கு ஒப்புதல் அளித்தது. முன்பு 1900, 1924 போட்டிகள் நடத்தப்பட்டதால், இலண்டனுக்குப் பிறகு (1908, 1948, 2012) கோடைகால ஒலிம்பிக்கை மூன்று முறை நடத்தும் இரண்டாவது நகரமாக பாரிசு மாறும். பாரிசு 2024, பாரிசின் நூற்றாண்டு விழாவையும் குறிக்கும், அத்துடன் இந்த ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சால் நடத்தப்படும் ஆறாவது (கோடையில் மூன்று, குளிர்காலத்தில் மூன்று) ஆகும். கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தோக்கியோவில் 2020 கோடைகாலப் போட்டிகள் 2021-இற்கு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, கோடைக்கால விளையாட்டுகள் அதன் பாரம்பரிய நான்கு ஆண்டு ஒலிம்பியாடு சுழற்சிக்குத் திரும்பும்.

பாரிசு 2024 இல் முறிப்பு நடனம் அறிமுகமாகிறது.[6] ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமசு பாக் தலைமையில் நடைபெறும் இறுதி ஒலிம்பிக் போட்டிகளாக இருக்கும்.[7] ஒரே எண்ணிக்கையிலான ஆண்களும் பெண்களும் பங்கேற்கும் முதலாவது விளையாட்டுப் போட்டியாக இது இருக்கும். விளையாட்டுகளுக்கு 8.3 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.[8]

போட்டியிடும் நகரங்கள்[தொகு]

சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் 2015 செப்டம்படர் 16ல் போட்டியிடும் ஐந்து நகரங்களின் பட்டியலை அறிவித்தது, இதில் ஹம்பர்க் நகரம் 2015 நவம்பரில் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.[9]

ஐரோப்பா[தொகு]

நகரம் நாடு தேசிய ஒலிம்பிக் குழு குழுவின் இணையதளம் விண்ணப்பத்தின் நிலைமை
புடாபெஸ்ட்  அங்கேரி அங்கேரிய ஒலிம்பிக் குழு (அஒகு) budapest2024.org Cancelled Bids

புடாபெஸ்ட் 1916, 1920, 1936, 1944, 1960 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்திருந்தும் தோற்றுப் போனது.[10][11] சூலை 2015 இல் அங்கேரிய நாடாளுமன்றம் 2024 போட்டிகளை நடத்துவதற்கு ஆதரவாகத் தீர்மானித்தது. 2016 சனவரி 28 இல் புடாபெஸ்ட் நகரசபை அரங்குகளுக்கு ஒப்புதல் அளித்தது.

பாரிசு  பிரான்சு பிரான்சு தேசிய ஒலிம்பிக் குழு paris2024.org Chosen by CNOSF

பாரிசு நகரம் 1900, 1924 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. அத்துடன் 1992, 2008, 2012 போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்து தோற்றிருந்தது.[12][13][14]

உரோம்  இத்தாலி இத்தாலிய தேசிய ஒலிம்பிக் குழு 2024roma.org பரணிடப்பட்டது 2016-05-21 at the வந்தவழி இயந்திரம் Cancelled Bids

உரோம் நகர் 1960 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. 2004 போட்டிகளை நடத்த விண்ணப்பித்து ஏதென்ஸ் நகரிடம் தோற்றது.[15][16]

வட அமெரிக்கா[தொகு]

நகரம் நாடு தேசிய ஒலிம்பிக் குழு குழுவின் இணையதளம் விண்ணப்பத்தின் நிலைமை
லாஸ் ஏஞ்சலஸ்

[17]

 அமெரிக்கா United States Olympic Committee la24.org Chosen by USOC

தேர்வு செய்யப்படாத போட்டியாளர்கள்[தொகு]

ஐரோப்பா[தொகு]

City Country National Olympic Committee Bid Committee Website Application Status
பெர்லின்  செருமனி Deutscher Olympischer Sportbund Cancelled Bids
பெர்லின் நகரில் 1936ம் ஆண்டு கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன,பின்னர் 2024ம் ஆண்டிற்கான போட்டியில் இருந்து விலகி ஹம்பர்க் நகரை செருமானிய ஒலிம்பிக் சம்மேளனம் போட்டிக்கான  தேர்வு செய்தது.[18]
ஹம்பர்க்  செருமனி Deutscher Olympischer Sportbund hamburg2024.de Cancelled Bids

மேற்கோள்கள்[தொகு]

  1. "New Paris 2024 slogan "Games wide open" welcomed by IOC President" (in ஆங்கிலம்). International Paralympic Committee. 25 July 2022. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
  2. "Le nouveau slogan de Paris 2024 "Ouvrons grand les Jeux" accueilli favorablement par le président du CIO" [Paris 2024's new slogan "Let's open up the Games" welcomed by the IOC President] (in பிரெஞ்சு). International Paralympic Committee. 25 July 2022. Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
  3. Iveson, Ali (10 August 2021). "ICC forms Olympic Working Group to prepare bid for Los Angeles 2028 inclusion". Inside the Games. Archived from the original on 10 August 2021. பார்க்கப்பட்ட நாள் 12 August 2021.
  4. "Stade de France". Archived from the original on 18 February 2023. பார்க்கப்பட்ட நாள் 6 August 2022.
  5. Butler, Nick (7 February 2018). "Paris 2024 to start week earlier than planned after IOC approve date change". Inside the Games. Archived from the original on 9 November 2020. பார்க்கப்பட்ட நாள் 7 February 2018.
  6. Keicha, Meshack (19 December 2020). "Kenya To Send Break Dancers To Paris For 2024 Olympic Games". Boxscore (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 April 2023. பார்க்கப்பட்ட நாள் 31 March 2023.
  7. Dunbarap, Graham (10 March 2021). "Thomas Bach re-elected as IOC president until 2025". Associated Press (in ஆங்கிலம்). Archived from the original on 29 July 2022. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.
  8. Nussbaum, Ania (26 July 2022). "Macron's $8.5 Billion Olympics Is Already Facing Soaring Costs". Bloomberg (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 26 July 2022. பார்க்கப்பட்ட நாள் 19 January 2023.
  9. "Five world-class cities in strong competition for Olympic Games 2024 – IOC to contribute USD 1.7 billion to the local organising committee" (Press release).
  10. "A MOB közgyűlése támogatja a budapesti olimpiapályázat szándéknyilatkozatának benyújtását" (in Hungarian). Hungarian Olympic Committee (MOB). 10 June 2015. Archived from the original on 4 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  11. Tenczer Gábor (23 June 2015). "A főváros szavazott: kell az olimpia" (in Hungarian). Index. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  12. "Qui sera élue capitale européenne de la culture ?", Le Figaro. (பிரெஞ்சு)
  13. "Voeux du CNOSF – Pas de candidature française aux JO avant 2024".
  14. "Laporte promet 35 millions d'Euros en attendant les Jo 2024" (பிரெஞ்சு)
  15. "Letta rompe gli indugi: 'Roma può candidarsi alle Olimpiadi 2024'". La Gazzetta dello Sport (in இத்தாலியன்). 8 September 2013. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
  16. "Olimpiadi, la capitale ci riprova Bonino: 'Possibile candidatura per il 2024'". la Repubblica (in இத்தாலியன்). 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)
  17. Los Angeles 2024 exploratory committee website
  18. "Hamburg soll Olympia nach Deutschland holen".