தாமசு பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேதகு
தாமசு பாக்
9வது பன்னாட்டு
ஒலிம்பிக் குழுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
10 செப்டம்பர் 2013
முன்னவர் ஷாக் ரோகெ
தனிநபர் தகவல்
பிறப்பு 29 திசம்பர் 1953 (1953-12-29) (அகவை 69)
வர்ட்சுபர்கு, மேற்கு செருமனி

தாமசு பாக் (Thomas Bach, வர்ட்சுபர்கில் பிறப்பு: 29 திசம்பர் 1953) செருமானிய வழக்கறிஞரும் முன்னாள் வாள்வீச்சு வீரரும் ஆவார். இவர் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் ஒன்பதாவது மற்றும் தற்போதைய தலைவராக உள்ளார். இடாய்ச்சு ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவின் (DOSB) செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

வாள்வீச்சு விளையாட்டு[தொகு]

தாமசு பாக்
பதக்கத் தகவல்கள்
ஆடவர் வாள்வீச்சு
நாடு  மேற்கு செருமனி
Club FC Tauberbischofsheim
ஒலிம்பிக் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மொண்ட்ரியால் ஆடவர் தகடு, அணி

பாக் டாபெர்பிசோசைம் வாள்வீச்சு சங்கத்தின் (FC Tauberbischofsheim) முன்னாள் விளையாட்டுக்காரர் ஆவார். 1976இல் மொண்ட்ரியாலில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வாள்வீச்சிற்கான அணி விளையாட்டில் செருமானிய அணிக்கு தங்கப் பதக்கம் வென்றளித்தார்.[1][2] அடுத்தாண்டு புவனெசு ஐரிசில் நடந்த வாள்வீச்சு உலகப் போட்டிகளில் உலகச் சாதனையாளராக பட்டம் வென்றார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Olympics Statistics: Thomas Bach". databaseolympics.com. http://www.databaseolympics.com/players/playerpage.htm?ilkid=BACHTHO01. பார்த்த நாள்: 16 April 2011. 
  2. "Thomas Bach Olympic Results". sports-reference.com இம் மூலத்தில் இருந்து 17 மார்ச் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110317161819/http://www.sports-reference.com/olympics/athletes/ba/thomas-bach-1.html. பார்த்த நாள்: 16 April 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
பெல்ஜியம் சாக் ரோகெ
பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர்
2013–நடப்பு
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_பாக்&oldid=3557661" இருந்து மீள்விக்கப்பட்டது