ஒலிம்பியாடு
ஒலிம்பியாட் (Olympiad, கிரேக்கம்: Ὀλυμπιάς, ஒலிம்பியாஸ்) என்பது பண்டைய கிரேக்கர்களின் ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு ஆண்டு காலப்பகுதியாகும்.
பண்டைய ஒலிம்பிக் போட்டிகள் பண்டைய கிரேக்கத்தின்போது துவக்கபட்டு நடத்தப்பட்டாலும், ஒலிம்பியாட் என்ற காலக்கணக்கானது பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான எபோரசால் தொடங்கப்பட்டு, எலனியக் காலம் வரை பயன்படுத்தப்பட்டது . நவீன கி.மு/கி.பி நாள்காட்டி முறைக்கு மாற்றாக, முதல் ஒலிம்பியாட் கி.பி 776 கோடையில் தொடங்கி கி.மு. 772 கோடை வரை நீடித்தது. இரண்டாவது ஒலிம்பியாட் கி.மு. 772 கோடையில் விளையாட்டுகள் தொடங்கியிலிருந்து நான்காண்டுகள் என இருந்தது.
இந்தக் காலக்கணக்கில் ஒரு நிகழ்வை குறிப்பிட கி.மு. 776 ஆம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்து இத்தனையாவது ஒலிம்பியட்டின் இத்தனையாவது ஆண்டில் என்று குறிப்பிடுவர். எடுத்துக்காட்டாக மூன்றாவது ஒலிம்பியட்டின் மூன்றாவது ஆண்டு என்பது போல குறிப்பிடுவர்.[1]
நவீன ஒலிம்பியாட் என்பது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பொதுவாக நடத்தப்படும் ஆண்டின் சனவரி முதல் நாள் தொடங்கி நான்கு ஆண்டு காலத்தைக் குறிக்கிறது. எனவே, முதல் நவீன ஒலிம்பியாட் சனவரி 1, 1896, இரண்டாவது சனவரி 1, 1900 மற்றும் பல (32வது சனவரி 1, 2020 இல் தொடங்கியது: ஒலிம்பிக் சாசனத்தைப் பார்க்கவும்).
குறிப்புகள்
[தொகு]- ↑ வெ. சாமிநாதசர்மா (1955). கிரீஸ் வாழ்ந்த வரலாறு. புதுக்கோட்டை: பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம். pp. 92–93.