அத்தி (பேரினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Fig trees
புதைப்படிவ காலம்:Maastrichtian–Present
Sycamore fig, Ficus sycomorus
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
Ficus

இனங்கள்

800 உள்ளன

அத்தி (ficus, /ˈfkəs/[1][2][3]) என்பது மோரேசி குடும்பத்தில் உள்ள கெட்டியான மரங்கள், புதர்கள், கொடிகள், மேலொட்டிகளைக் கொண்ட ஏறத்தாழ 850 இனங்களின் ஒரு பேரினம் ஆகும். இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் இணைந்து அத்தி மரங்கள் அல்லது அத்தி என அழைக்கப்படுகின்றன. இவை பெருமளவாக வெப்பவலயப் பகுதிகளிலும், சிறிய அளவில் மிதவெப்பமான பகுதியிலும் வளர்கிறது.

இக் குடும்பத்தில் பொதுவாக காணப்படும் அத்தி (common fig), அல்லது பைகஸ் காரிக்கா (F.Carica) தென்மேற்கு ஆசியா மற்றும் நடுநிலக் கடல் பகுதிகளில் (ஆப்கானித்தான் முதல் போர்த்துகல் வரை) பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலத்தில் இதில் காணப்படும் பழம் அத்தி (figs) என அழைக்கப்பட்டது. இவற்றில் காணப்படும் பழங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் மற்றும் உணவுப் பொருளிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றின் கனிகள் காட்டு உயிரினங்களுக்கு முக்கிய உணவாகப் பயன்படுகின்றன.

விளக்கம்[தொகு]

அத்தி வெப்ப மண்டல வளர் போினம் ஆகும். இது மரமாகவும், சிறு செடியாகவும், கொடியாகவும் வளரும் இயல்புகள் கொண்டுள்ளது. இது பசுமையாகவும், சில நேரங்களில் இலையுதிர் சிற்றினமாகவும், சில பகுதியில் தனித்த தாவரமாகவும் வளர்கிறது.

மஞ்சரி[தொகு]

இவற்றில் காணப்படும் பூந்துணர் (மலர்க்கொத்து ) சிறப்பு வாய்ந்ததாக காணப்படுகிறது. இத்தாவரத்தை எளிதில் மற்ற தாவரத்தை விட கண்டறிவது கடினம். சில பண்புகளில் எளிதில் கண்டறிந்து விடலாம். இவற்றில் காணப்படும் கனிகள், மஞ்சாி கொத்தாக காணப்படும். இவற்றின் உள்பகுதியில் சிறிய மலர் காணப்படுகிறது. இவற்றிற்குச் சின்கோனியம் என்றழைக்கப்படும் கனி வகை. இக்கனிவகையில் மகரந்த சேர்க்கை நடைபெற உதவி செய்யும். புச்சிகள் உள்ளுக்குள்ளேயே முட்டை இடுகிறது. இது உயிாியலாளர்களுக்கு மிகப்பொிய கவனத்தைம் (ஆச்சாியத்தையும்) ஏற்படுத்துகிறது.

அத்தி தாவரம் எந்த நூற்றாண்டைச் சார்ந்தது என்பதற்கு தொல்லுயிர் படிவம் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தற்காலத்தில் இப்போினம் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு பழமையானது. சுற்றுச் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்தாவரம் மழைக்காடுகளுக்கு மிக முக்கியம் வாய்ந்தது. இதன் கனிகள் பறவைகள், குரங்கு, மரங்கொத்தி, மைனா போன்ற விலங்குகளுக்கு உணவாக பயன்படுகின்றன.

இவற்றின் கட்டை எளிய மற்றும் பால் போன்ற திரவம் வடியும் தன்மை கொண்டவை. இவை எகிப்து நாடுகளில் மிகவும் பரவலாகப் பயன்பட்டது. இந்தியாவில் பைகஸ் பெங்காலியன்ஸ் தாவரம் மூலிகையாகப் பயன்படுகிறது.

கனிகள்[தொகு]

இது கனிகள் மூலம் பரவுகிறது. இதில் காணப்படும் கனிகள் உணவாகவும் மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இதில் பிளவனாய்டு, சர்க்கரை, வைட்டமின் யு மற்றும் ஊ மற்றும் நொதிகள் காணப்படுகின்றன. இதில் உருவாகும் லேட்டக்ஸ் (பால்மம்) கண் எாிச்சலையும் ஒவ்வாமையையும் தருகிறது. இதில் ஏறக்குறைய பத்து வகையான வைட்டமின்கள் காணப்படுகின்றன. அனைத்து வகையான அத்தி தாவரங்களும் அமொிக்காவைப் பிறப்பிடமாக கொண்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ficus – Definition of ficus by Merriam-Webster". merriam-webster.com.
  2. Sunset Western Garden Book, 1995:606–607
  3. "Definition of "ficus" – Collins English Dictionary". collinsdictionary.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்தி_(பேரினம்)&oldid=3913141" இலிருந்து மீள்விக்கப்பட்டது