மேலொட்டி

மேலொட்டி (Epiphyte)என்பது ஓர் தாவரத்தின் மேலே தீங்கு ஏற்படாதவாறு வளரும் மற்றொரு தாவரம் ஆகும். மேலொட்டித் தாவரம் தனக்குத்தேவையான நீரையும் போசணைகளையும் வளி, மழை மற்றும் தன்னைச் சுற்றியுள்ள சில சிதைவுகள் ஆகியவற்றில் இருந்து பெற்றுக்கொள்கின்றது. மேலொட்டிகள் ஒட்டுண்ணிகளில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. மேலொட்டிகள் ஒரு போதும் ஓம்புயிர்களுக்கு தீங்கு விளைவிக்காது. அவை தம்மை தாங்குவதற்காகவே ஓம்புயிர்களின் மீது வளருகின்றன. தாவரம் அல்லாத மேலொட்டிகள் மேலொட்டி விலங்கு (Epibiont) எனக் குறிப்பிடப்படுகின்றன.[1] மேலொட்டித் தாவரங்கள் அயன மண்டலங்களில் அல்லது வெப்ப வலயங்களிலேயே வளர்கின்றன.[2] பன்னம், கள்ளி, ஆர்க்கிட் ஆகியன மேலொட்டித் தாவரங்களுக்கான சில உதாரணங்கள் ஆகும்.