புருசா மிருகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புருசா மிருக வாகனம் சைதாப்பேட்டை காரணீசுவரர் கோயில்

புருசா மிருகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் மனித முகமும், சிங்க உடலும் கொண்ட மிருகமாகும். இம்மிருகம் சிவபெருமானின் பெரும் பக்தனாகவும், குபேர வனத்தினை பாதுகாக்கும் செயலை செய்து வருவதாகவும் புராணக் கதைகள் கூறுகின்றன.

சிவாலயங்களில்[தொகு]

சிவாலயங்களில் புருசா மிருக வாகனத்தில் சிவபெருமான் வீதியுலா வருகிறார். மேலும் சிவாலய வழிபாட்டிற்கு பயன்படும் பதினாறு வகையான தீபங்களில் ஒன்றாக புருசா மிருக தீபம் உள்ளது.[1]

திருவாதவூரில் புருசா மிருக தீர்த்தம் அமைந்துள்ளது. பிரம்ம தேவர் வாழும் சத்தியலோகத்தலிருந்து சிவலிங்கத்தினை திருமழபாடியில் புருசா மிருகம் பிரதிஸ்ட்டை செய்து வழிபட்டதாக திருமழப்பாடி சிவன் கோயில் தலவரலாறு குறிப்பிடுகிறது. [2]

திருவாதவூர் ஏரிக்கரையில் ஒரு கம்பத்தின் மேல், புருஷா மிருக சிலை உள்ளது. இதனை ஏரிக்காவல் தெய்வம் என்கின்றனர். மழை பெய்யாத காலங்களில் மழையை வேண்டி ஊர்மக்கள் மழை வேண்டி விழா எடுக்கிறார்கள். இந்த விழாவின் போது தேங்காய்களை தீயிலிட்டு கருக்கி மேளதாளங்களுடன் சென்று புருசா மிருகத்தின் மீது கருக்கப்பட்ட தேங்காய் கரியை பூசுகிறார்கள்.

புதினங்கள்[தொகு]

எழுத்தாளர் காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் குபேரவன காவல் என்ற புதினம் இந்த புருசா மிருகத்தின் தொன்மத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.penmai.com/forums/miscellaneous-spirituality/36750-deepangal-16-16-a.html
  2. http://218.248.16.19/slet/l4100/l4100pd2.jsp?bookid=115&pno=321[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசா_மிருகம்&oldid=3686160" இலிருந்து மீள்விக்கப்பட்டது