திருவாதவூர்
தோற்றம்
திருவாதவூர் Thiruvathavur | |
|---|---|
| ஆள்கூறுகள்: 9°57′25″N 78°18′52″E / 9.9569°N 78.3145°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மதுரை மாவட்டம் |
| ஏற்றம் | 168 m (551 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 5,769 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 625110 |
| அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, மேலூர், திருமோகூர், முக்கம்பட்டி, கொட்டகுடி, இடையபட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, இசலானி, ஆமூர், குன்னத்தூர், நாட்டார்மங்கலம், சுண்ணாம்பூர், செங்கோட்டை, பூவந்தி மற்றும் வரிச்சியூர் |
| மாவட்ட ஆட்சித் தலைவர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. |
| மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
| சட்டமன்றத் தொகுதி | மேலூர் (சட்டமன்றத் தொகுதி) |
| மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
| சட்டமன்ற உறுப்பினர் | பெ. பெரியபுள்ளான் |
| இணையதளம் | https://madurai.nic.in |
திருவாதவூர் (ஆங்கிலம்: Thiruvathavur) என்ற ஊர் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின்,[1] மதுரை புறநகர்ப் பகுதியை அடுத்த இருந்தையூரின் ஒரு பகுதியாகும்.
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 168 மீட்டர் உயரத்தில், 9°57′25″N 78°18′52″E / 9.9569°N 78.3145°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருவாதவூர் புறநகர்ப் பகுதி அமையப் பெற்றுள்ளது. இது மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் 20 கி.மீ. தொலைவில் வடக்கே அமைந்துள்ளது.
சிறப்பு
[தொகு]திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊரான இந்த ஊரில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிற திருமறைநாதர் கோயில்[2] அமைந்துள்ளது. இவ்வூரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ஒவாமலை என்ற மலையில் இரண்டு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும், 10 பேர் தங்கும் அளவிலான குகையும் உள்ளன. இவை கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதற்பாகம், பதிப்பு 2005
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "THIRUVATHAVUR Village in MADURAI". www.etamilnadu.org. Retrieved 2023-08-21.
- ↑ "Arulmigu Thirumarainatha Swamy Temple, Thiruvathavur, Madurai - 625110, Madurai District [TM031983].,Sivan,Sivan". hrce.tn.gov.in. Retrieved 2023-08-21.