உற்பத்திச் சாதனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியலிலும், சமூகவியலிலும் உற்பத்திச் சாதனங்கள் (Means of production) என்பன, பொருளாதார மதிப்பை உருவாக்குவதற்குப் பயன்படும் மனிதரல்லாத, நிதியல்லாத, பௌதீக உள்ளீடுகள் ஆகும். இவை பொருட்களின் உற்பத்தியில் பயன்படும் மூலப் பொருட்கள், வசதிகள், இயந்திரங்கள், கருவிகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.[1][2] செந்நெறிப் பொருளியலில் "உற்பத்திச் சாதனங்கள்" என்பது உற்பத்திக் காரணிகளில் இருந்து நிதி மூலதனத்தையும், மானிட மூலதனத்தையும் கழிக்கும் போது பெறப்படுகின்றது.

சமூக உற்பத்திச் சாதனங்கள் என்பன, தொழிலாளர்கள் தனித்தனியாக வேலை செய்வது அல்லாமல், இயக்குவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படும் மூலதனப் பொருட்களும் சொத்துக்களும் ஆகும்.[3] சமூக உற்பத்திச் சாதனங்களின் உடைமையும், ஒழுங்கமைப்பும் பொருளாதார முறைமைகளை வகைப்படுத்துவதிலும், வரைவிலக்கணப்படுத்துவதிலும் முக்கியமான காரணிகளாக உள்ளன. உற்பத்திச் சாதனங்களை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம், ஒன்று தொழிற் கருவிகள் (கருவிகள், தொழிற்சாலைகள், உட்கட்டுமானம் முதலியன), மற்றது தொழிற் பொருட்கள் (இயற்கை வளங்கள், மூலப்பொருட்கள் முதலியன). மக்கள், உற்பத்திப் பொருளை உருவாக்குவதற்காக தொழிற் கருவிகளைப் பயன்படுத்தி தொழிற் பொருட்கள் மீது வேலை செய்கின்றனர். இன்னொரு வகையில், உற்பத்திச் சாதனங்களில் உழைப்பைச் செலுத்துவதன் மூலம் உற்பத்திப் பொருட்கள் உருவாகின்றன.[4]

வேளாண்மைச் சமூகம் ஒன்றில், உற்பத்திச் சாதனங்களில் நிலமும், மண்வெட்டியும் அடங்கும். தொழிற் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் சமூக உற்பத்திச் சாதனங்களாக இருப்பதுடன், அதில் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் போன்றவை அடங்குகின்றன. அறிவுப் பொருளாதாரத்தில், கணினிகளும், வலையமைப்புக்களும் உற்பத்திச் சாதனங்களாகின்றன. விரிந்த நோக்கில், உற்பத்திச் சாதனங்கள் விநியோகச் சாதனங்களையும் உள்ளடக்குகின்றன. களஞ்சியங்கள், இணையம், தொடர்வண்டிப்பாதை (உட்கட்டுமான மூலதனம்) என்பன இதற்குள் அடங்கும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. James M. Henslin (2002). Essentials of Sociology. Taylor & Francis US. பக். 159. https://books.google.com/books?id=852vjh_IwusC&pg=PA159. 
  2. Oxford Dictionaries. "means of production". Oxford Dictionaries. Archived from the original on 8 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017. the facilities and resources for producing goods. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. Karl Kautsky (1983). Selected Political Writings. 978-0333283844. பக். 9. ""Here we encounter a further characteristic of the modern wage proletarian. He works not with individual but with social means of production, means of production so extensive that they can be operated only by a society of workers, not by the individual worker."" 
  4. Michael Evans, Karl Marx, London, England, 1975. Part II, Chap. 2, sect. a; p. 63.
  5. Flower, B. O. The Arena, Volume 37. The Arena Pub. Co, originally from Princeton University. p. 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பத்திச்_சாதனங்கள்&oldid=3512857" இலிருந்து மீள்விக்கப்பட்டது