இந்தியா டுடேயின் 60 மகத்தான இந்தியர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியா டுடே இதழில் அட்டைப்படம்

இந்திய நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு 2008 ஆம் ஆண்டின் ஏப்ரல் 23 தேதியிட்ட இந்தியா டுடே இதழ் ஒரு சிறப்பிதழாக வெளிவந்தது. அந்த இதழில் இந்திய நாட்டின் 60 சிறப்புமிக்கவர்களைக் குறித்தக் கட்டுரைகள் வெளிவந்தன.[1] இந்தச் சிறப்பிதழுக்காக இணையம், குறுஞ்செய்தி ஊடகங்கள் வழியே எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பெறப்பட்ட 18928 வாக்குகளில் பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி ஆகியோருக்கு முறையே 37%, 27%%, 13% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தெரிவு செய்திருந்தனர் என்பதும், மகாத்மா காந்தி அறப்போராட்டத்தை முன்னெடுத்தார் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. மேலும், 60 பேரில் பத்து பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.[2]

மேற்கோள்[தொகு]