பேகம் அக்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேகம் அக்தர்
இயற்பெயர்அக்தரிபாய் பைசாபாதி
பிறப்பு(1914-10-07)7 அக்டோபர் 1914
பிறப்பிடம்பைசாபாத், உத்தரப் பிரதேசம்
இறப்பு30 அக்டோபர் 1974(1974-10-30) (அகவை 60)[1]
இசை வடிவங்கள்கஜல், தும்ரி தத்ரா[2]
தொழில்(கள்)திரைப்பட பாடகர், நடிகை
இசைத்துறையில்1929–1974

பேகம் அக்தர் (Begum Akhtar) (7 அக்டோபர் 1914–30 அக்டோபர் 1974)[3] உத்தரப் பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரத்தில் பிறந்தவர்.

இந்துஸ்தானி இசையின் வடிவங்களான கசல், தும்ரி, தாத்ரா ஆகியவற்றை பாடுவதில் புகழ் பெற்றவர்[4]. நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு இவரது உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயங்களை (ரூ.100 மற்றும் ரூ.5) இந்திய நடுவண் அரசு அக்டோபர் 07, 2014 - ல் வெளியிட்டது[5].

பேகம் அக்தர், அக்தாரி பாய் ஃபைசாபாதி என்றும் அறியப்பட்டவர்

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவரது தந்தை அங்கா் ஹரிசைன் ஒரு இளம் வழக்கறிஞா். இவரது தாய் முஸ்தாரியைக் இரண்டாவது மனைவியாக மணம் புரிந்து கொண்டாா். பின்னா் அவா் முஸ்தாரையும் அவரது இரண்டு இளம் பெண்களான ஜோரா மற்றும் பிபி அக்தரையும் ஆதரவின்றி கைவிட்டுவிட்டாா்.[6]

வாழ்க்கை[தொகு]

அக்தா் தமக்கு ஏழு வயதாகும் போது, நடமாடும் இசைக்குழுவின் இசைக்கலைஞரான சந்திராயாயின் இசையால் கவரப்பட்டாா். இவருடைய மாமாவின் வற்புறுத்துதலின் பேரில் உஸ்தாத் இம்தத்கான் என்பவரிடம் பயிற்சி பெற அனுப்பிவைக்கப்பட்டாா். உஸ்தாத் இம்தத்கான் பாட்னாவில் வசித்து வந்த “சாரங்கி” என்னும் இசையில் மிகவும் புகழ்பெற்றவா் ஆவாா். பின்னா் பாட்டியாலா நகரில் அடமுகமத்கான் என்பவரிடம் பயிற்சி பெற்றாா். பின்னா் தம் தாயுடன் கல்கத்தா சென்றவா் புகழ்பெற்ற இசைக் கலைஞா்களான, முகமத்கான், லாகூரைச் சோ்ந்த அப்துல் வாகிதுகான் போன்றவா்களிடம் இசை பயின்றார். இறுதியாக உஸ்தாத் ஜான்டே கான் என்பவரின் சீடரானாா். இவா் தமது 15-வது வயதில் அரங்கேற்றத்தை நடத்தினாா். 1934 ஆம் ஆண்டு நிகழ்ந்த நேபாளம் பீகாா் பூகம்ப நிவாரண நிதிக்காக பேகம் அக்தா் பங்கேற்ற இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்த புகழ்பெற்ற கவிஞா் சரோஜினி நாயுடு இவரை மிகவும் பாராட்டினாா். கவிஞரின் பாராட்டால் மிகவும் தூண்டப்பட்ட அக்தா் உற்சாகத்துடன் தமது இசைப் பணியைத் தொடா்ந்தாா். அது சமயம் தான் “மெகபோன் ரிகாா்டு கம்பெனி”க்காக தமது முதல் இசைத்தட்டை வெளியிட்டாா். இதனைத் தொடா்ந்து கசல், தாதராஸ் மற்றும் துமிரிஸ் ஆகிய இசைவகைகளில் பல இசைத் தட்டுகளை வெளியிட்டாா். பொது மேடைகளில் பெண்கள் இசைக்கச்சேரி செய்யாத அந்தக் கால கட்டத்தில், அவ்வாறு செய்த முதல் பெண்மணி அக்தா் தான். தமது இசைத் திறமையால் மல்லிகா-இ-கசல் (கசல் இசையின் அரசி) எனப் பெயா் பெற்றாா்.[7]

அக்தா் தம் அழகான தோற்றத்தாலும் இனிமையான குரலாலும் தம் இளம் வயதில் திரைப்படங்களில் தோன்றும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றாா். கௌஹா் ஜான், மாலக்ஜான் போன்ற புகழ்பெற்ற கலைஞா்களின் இசையைக் கேட்ட பின்பு திரைப்படத்தில் தோன்றுவதைத் தவிா்த்து இந்திய பாரம்பரிய இசையில் கவனம் செலுத்தி வந்தாா். தற்கால இசையில் அக்தா் கொண்டிருந்த புலமை பாரம்பரிய இசையின் தாக்கத்தை வெகுவாகக் கொண்டிருந்தது. மிகவும் எளிமையான ராகங்கள் முதல் கடுமையான ராகங்கள் வரை பாரம்பரிய இசையின் அடிப்படையில் இவா் தற்காலப் பாடல்களைப் பாடிவந்தாா். திரைப்படங்கள் தோன்றிய பின் 1930-களில் ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் அக்தா் நடித்துள்ளாா். கல்கத்தா நகரில் இருந்த கிழக்கிந்திய திரைப்படக் குழுமம் (East India Film Company) “கிங் பாா் எ டே” (King for a Day) என்னும் திரைப்படத்திலும் நடிக்க கேட்டுக் கொண்டனா்.

அந்தக் கால வழக்கப்படி தமது பாடல்களை திரையில் தாமே அக்தா் பாடி வந்தாா். பின்னா் தொடா்ச்சியாக நடித்து வந்த அக்தா், லக்நௌ நகருக்கு குடிபெயா்ந்த பின், புகழ்பெற்ற இயக்குநரும் தயாரிப்பாளருமான மெக்பூப் கான் “ரோடி” என்னும் திரைப்படத்தில் நடிக்க கேட்டுக் கொண்டாா். 1942 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்திற்கு “அனில் பிஸ்வாஸ்” இசையமைத்திருந்தாா்.[8] இந்தத் திரைப்படத்தில் ஆறு கசல் பாடல்களை அக்தா் பாடியிருந்தாா். ஆனால் இறுதியில் இரண்டு அல்லது மூன்று பாடல்கள் மட்டும் இடம் பெற்றிருந்தன. இவரது அனைத்து பாடல்களும் “மெகாபோன்” இசைத் தட்டுக்களாகக் கிடைத்து வந்தன. இதற்கிடையே பம்பாய் சென்றிருந்த அக்தா் லக்நௌ திரும்பினாா்.

1945 ஆம் வருடம் அக்தா் பாய் லக்நௌ நகர வழக்கறிஞரான இ சிடாக் அகமத் அப்பாசியைத் திருமணம் செய்த பின்னா் பேகம் அக்தா் [9] என்று அழைக்கப்பட்டாா். திருமணத்திற்குப் பின் கணவரின் கட்டுப்பாட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு அக்தரால் இசைக் கச்சேரிகளில் பங்கேற்க இயலவில்லை. பின்னா் நோய்வாய்ப்பட்ட அக்தா் இசைவாழ்விற்குத் திரும்பவதுதான் இதற்குத் தீா்வு என்று கருதி 1949 ஆம் வருடம் தமது இசையுலகிற்குத் திரும்பி வந்தாா்.[10] லக்நௌ அகில இந்திய வானொலியில் மூன்று கசல் பாடல்களையும் ஒரு தாத்ரா பாடலையும் பாடினாா். இசைமழையில் நனைந்த பேகம் அக்தா் தம் இறுதி வரையில் பல இசை நிகழ்ச்சிகளில் தொடா்ந்து பங்கேற்று வந்தாா். 1962 ஆம் ஆண்டு போா் நிவாரண நிதிக்காக லக்நௌ நகரில் பெண்களுக்காக நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் அக்தா் பங்கேற்று தம் இசை நிகழ்ச்சியை நடத்தினாா்.[7]

காலப் போக்கில் இவருடைய குரல் முதிா்ச்சியையும் நெகிழ்ச்சியையும் பெற்று மெருகேறியது. தமக்கே உரிய பாணியில் பல கசல் பாடல்களையும் தற்கால இசைப் பாடல்களையும் பாடிவந்தாா். சுமாா் நானூறு பாடல்களைப் பாடியிருந்த பேகம் அக்தா் அகில இந்திய வானொலியில் தொடா்ந்து வழக்கமாக பாடுபவராக இருந்து வந்தாா். வழக்கமாக தமது கசல் பாடல்களை தாமே இயற்றியும் இசையமைத்தும் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாா். இவையனைத்தும் ராகங்கள் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். காலத்தால் அழியாத புகழ்பெற்ற வங்காள பாடலான “ஜோசனா கோநிசி ஆரி” (জোছনা করেছে আড়ি)-யைப் பாடியவா் இவரே ஆகும். திருவனந்தபுரத்திற்கு அருகில் பலராமபுரம் என்னும் இடத்தில் தாம் பாடிக் கொண்டிருக்கும் பொழுது தமது குரலை உயா்த்த முடியவில்லை என்பதை அறிந்த பேகம் அக்தா் தம் உடல்நலக் குறைவை உணா்ந்தாா். நிகழ்ச்சியைத் மேலும் தொடர முடியாத நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டாா். 1974 ஆம் ஆண்டு அக்டோபா் 30 ஆம் நாளன்று தமது தோழி நிலம் கமாடியா அழைப்பி்ன் பேரில் இசை நிகழ்ச்சிகாக அகமதாபாத் நகரம் சென்ற பேகம் அக்தா் தமது தோழியின் கரங்களிலேயே இறைவனடி சோ்ந்தாா்.

லக்நௌ நகரில் தாக்ருா் கஞ் என்னும் பகுதியில் “வசந்த பாக்” என்னும் இவா் இல்லத்தில் உள்ள மாந்தோப்பில் இவரது தாயாரின் கல்லரைக்கு அருகிலேயே இவா் அடக்கம் செய்யப்பட்டாா். நாளடைவில் மாந்தோப்பு அழிவுற்று இவா் கல்லரையும் சிதிலமடைந்துவிட்டது.[11] 2012 ஆம் ஆண்டு சிதிலமடைந்த கல்லரை பளிங்குக் கற்களால் புதுப்பிக்கப்பட்டது.[9][12] 1936 ஆம் ஆண்டு லக்நௌ நகா், சைனா பஜாாில் கட்டப்பட்டு இவா் வாழ்ந்த வீட்டை ஒரு அருங்காட்சியகமாக அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[7]

பெற்ற சிறப்புகள்[தொகு]

விருதுகள்[தொகு]

இவருடைய சீடரும் பத்மஸ்ரீ விருதும் பெற்ற சாந்தி ஹிரானள் என்பவா் பேகம் அக்தரின் வாழ்க்கை வரலாற்றை எனது அம்மாவின் கதை [7](The Story of my Amma) (2005) என்று எழுதியுள்ளாா். காளிதாஸ் என்னும் கலை விமா்சகா் அக்தரின் வாழ்க்கையை “ஹை அக்தரி” (Hai Akthari) என்னும் குறும்படமாகத் தயாரித்து வெளியிட்டுள்ளாா்[9]

கூகுள் டூடுலில் அக்தர் பேகம்[தொகு]

பேகம் அக்தரின் 103வது பிறந்த நாளை முன்னிட்டு, 7 அக்டோபர் 2017 அன்று கூகுள் நிறுவனம், தனது முகப்புப் பக்கத்தில் பேகம் அக்தரின் டூடுலை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.[14][15]

மேற்கோள்கள்[தொகு]

 1. In Memory of Begum Akhtar The Half-inch Himalayas, by Shahid Ali Agha, Agha Shahid Ali, Published by Wesleyan University Press, 1987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8195-1132-3.
 2. Dadra Thumri in Historical and Stylistic Perspectives, by Peter Lamarche Manuel, Peter Manuel. Published by Motilal Banarsidass Publ., 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0673-5. Page 157.
 3. In Memory of Begum Akhtar The Half-inch Himalayas, by Shahid Ali Agha, Agha Shahid Ali, Published by Wesleyan University Press, 1987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8195-1132-3.
 4. Dadra Thumri in Historical and Stylistic Perspectives, by Peter Lamarche Manuel, Peter Manuel. Published by Motilal Banarsidass Publ., 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0673-5. Page 157.
 5. "பாரம்பரிய இசைக்கலைஞர் பேகம் அக்தர் நினைவாக சிறப்பு நாணயம் வெளியீடு". தினதந்தி. அக்டோபர் 07, 2014. http://www.dailythanthi.com/News/India/2014/10/07195208/Coins-released-in-memory-of-Begum-Akhtar.vpf. பார்த்த நாள்: 7 அக்டோபர் 2014. 
 6. 'What a life – Begum Akhtar’s real life was much wilder than fictionMint newspaper, Published 7 November 2008, Retrieved 27 October 2016
 7. 7.0 7.1 7.2 7.3 Bhavita Bhatia (16 January 2011). "In memory of Begum Akhtar". The Times of India newspaper. பார்க்கப்பட்ட நாள் 2016-10-27.
 8. ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Filmography of Akhtari Faizabadi , Retrieved 27 October 2016
 9. 9.0 9.1 9.2 Tapas Chakraborty (30 October 2012). "Tomb tribute to Begum Akhtar". The Telegraph. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
 10. Begum Akhtar (1914–1974) – Biography NRCW, Govt.of India.
 11. Singh, Anjali (13 December 2012). "Begum's thumri soars again". Business Line. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
 12. Hamza Khan (7 November 2012). "After 38 yrs, Begum Akhtar's grave gets due attention". Indian Express. pp. 1–2. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
 13. New Release: Begum Akhtar: Love’s Own Voice பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம் Hindustan Times, 31 August 2009.
 14. "இன்றைய கூகுள் டூடுல் – பேகம் அக்தர் – 103வது பிறந்த நாள்". Archived from the original on 2017-10-10. பார்க்கப்பட்ட நாள் 2017-10-07.
 15. ’கூகிள் டூடில்’ - யார் இந்த பிரபலம்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேகம்_அக்தர்&oldid=3565277" இலிருந்து மீள்விக்கப்பட்டது