உலகின் அதியுயர் வானளாவிகளின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வானளாவிகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வானளாவிகளின் பட்டியல் (List of Skyscrapers) இங்கே இடப்பட்டுள்ளன. அதாவது வானளாவி எனும் சொற்பதம், மக்கள் வசிப்பதற்கு அல்லது பயன்பாட்டுக்கு உரிய உயரமான கட்டடங்களைக் குறிப்பதாகும். இதுவரை எத்தனை மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவி என அழைக்கலாம் எனும் முறையான வரைவிலக்கணங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் உலகில் அதிகமான உயர்ந்தக் கட்டடங்களை கொண்ட நாடான ஹொங்கொங்கில் 170 மீட்டருக்கு மேற்பட்ட உயரமான கட்டடங்களை வானளாவிகள் என வரையரை செய்யப்பட்டுள்ளன.
சங்காய் நிதி மையக் கட்டடம். உலகின் மூன்றாவது உயரமான வானளாவி ஆகும். மக்கள்_சீனக்_குடியரசு.
நியூ யோர்க், 1931 இருந்து 1972 வரை உலகில் உயரமான வானளாவியாக இருந்தது.
இக்யூ 1, அவுசுதிரேலியா, உலகின் உயரமான வானளாவிகளில் ஒன்று. இது உலகில் உயரமான குடியிருப்பு தொகுதிக் கட்டடமாகும்.
யொகோஹமா லாண்ட்மார்க் கட்டடம், யப்பானில் உயரமானக் கட்டடம்