வந்தியத்தேவன்
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர்.
[தொகு] வாணர்கள்
"சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன் பாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து நட்டான் மூவேந்தர் தங்கள் முடி!" "என் கவிகை என் சிவிகை என் கவசம் என்துவசம் என்கரி யீ(து) என்பரி யீது என்பரே - மன்கவன மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசு பெற்ற பாவேந்தரை, வேந்தர் பார்த்து!" "வாணன் புகழுரையா வாயுண்டோ மாகதர்கோன் வாணன் பெயரெழுதா மார்புண்டோ - வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு!"
என்று பாடல்களால் போற்றப்படும் வாணர் குலத்தில் பிறந்தவர் வந்தியத்தேவர்.
[தொகு] கதாபாத்திரங்கள்
வந்தியத்தேவன், கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
மேலும் வேங்கையின் மைந்தன் என்னும் அகிலனின் புதினத்திலும், நந்திபுரத்து நாயகி என்னும் விக்கிரமனின் புதினத்திலும் வந்தியத்தேவனின் கதாப்பாத்திரம் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம்.
| கல்கியின் பொன்னியின் செல்வன் |
|---|
| கதை மாந்தர் |
| வந்தியத்தேவன் | அருண்மொழிவர்மன் | குந்தவை | ஆழ்வார்க்கடியான் நம்பி | அநிருத்தப் பிரம்மராயர் | சுந்தர சோழர் | வானதி | நந்தினி | பெரிய பழுவேட்டரையர் | சின்னப் பழுவேட்டரையர் | ஆதித்த கரிகாலன் | செம்பியன் மாதேவி | பூங்குழலி | மந்தாகினி | பார்த்திபேந்திர பல்லவன் | கந்தமாறன் | சேந்தன் அமுதன் | மணிமேகலை
|