வந்தியத் தேவன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வந்தியத் தேவன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
Ponniyin Selvan Vandhiyathevan.jpg
வந்தியத் தேவன்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
பிற பெயர் வல்லவரையன் வந்தியத் தேவன், வாணர்குல இளவரசன், ஒற்றன்,சேனைத்தலைவர்
குடும்பம் குந்தவை பிராட்டி
மதம் சைவம்
தேசிய இனம் சோழ நாடு

வந்தியத் தேவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற வாணர்குல இளவரசன் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற வந்தியத் தேவனை சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

வந்தியத் தேவனை வீரம் மிகுந்தவனாகவும், முன்யோசனையிற்றி செயலில் இறங்குபவனாகவும், குந்தவை மீதான காதலில் இன்புருபவனாகவும் கதாப்பாத்திரத்தினை கல்கி வடிவமைத்துள்ளார்.

ஆதித்த கரிகாலனின் நண்பர்களில் ஒருவனாக வந்தியத் தேவன் அறிமுகம் ஆகிறார். அவருடைய தங்கையான குந்தவைக்கு ஓலையொன்றினை வந்தித் தேவன் மூலம் கொடுத்தனுப்புகிறார். பல இடர்பாடுகளிடையே குந்தவையைச் சந்தித்து தான் கொண்டுவந்த ஓலையைச் சேர்ப்பிக்கின்றார் வந்தியத் தேவன். அப்போது அவள் மீது காதல் கொள்கிறார். குந்தவைக்கும் வந்தியத் தேவன் மீது நம்பிக்கையும், காதலும் பிறக்கிறது. அத்துடன் ஈழத்தில் போரில் ஈடுபட்டிருக்கும் தன்னுடைய தம்பி அருள்மொழி வர்மனை பழையாறைக்கு உடனே வரச்சொல்லி ஓலையொன்றினை எழுதுகிறார். அதை வந்தியத் தேவனிடம் கொடுத்து இளவரசரான அருள்மொழி வர்மனை அழைத்து வர கூறுகிறார். வந்தியத் தேவன் பூங்குழலி எனும் படகோட்டும் பெண்ணின் உதவியால் ஈழத்தினை அடைகிறான். அங்கு ஆழ்வார்க்கடியான் நம்பியின் உதவியால் இளவரசரை சந்திக்கிறான்.

அந்நேரத்தில் அருள்மொழிவர்மனைச் சிறைபிடித்து அழைத்து செல்ல பழுவேட்டரையர்களின் படை வருகிறது. அதில் வந்தியத் தேவன் சிறைபடுகிறான். அவனை காப்பாற்ற அருள்மொழிவர்மன் செல்கிறார். இருவரும் கடலில் பெரும் புயலில் சிக்கிக் கொள்கிறார்கள். பூங்குழலி அவர்களை மீட்டு கோடிக்கரையில் சேர்க்கின்றாள். இளவரசருக்கு உடல்நிலை சரியில்லாததால், சேந்தன் அமுதனுடன் இணைந்து நாகைப்பட்டத்தினத்தில் உள்ள புத்தமடத்தில் சேர்க்க பூங்கொடி புறப்படுகிறாள். வந்தியத்தேவன் குந்தவையை சந்தித்து தன்பணி முடிவடைந்ததைத் தெரிவிக்க பழையாறைக்குச் செல்கிறான். பழையாற்க்கு செம்பியன் மாதேவியை காண செல்லும் மதுராந்தகத் தேவனை ஏமாற்றி, நிமிர்த்த காரன் போல மாளிகைக்குள் நுழைகிறான். குந்தவை காண முயலும் போது, பினாகபாணி பழுவூர் வீரர்களுடன் வந்து வந்தியத்தேவனை ஒற்றன் என்று கூறி கைது செய்ய பார்க்கிறான். அந்த வேளையில் திருமலையப்பன் வந்தியத் தேவனை நிமிர்த்தகாரன் என்று ஊரார் நம்புபடி செய்து குந்தவையை சந்திக்க வைக்கிறான்.

ஈழத்திற்கு சென்று இளவரசரை சந்தித்து, பின் கப்பலில் ரவிதாசனிடம் மாட்டிக் கொண்டது, தன்னை காப்பாற்ற வந்த இளவரசருடன் கடல் சுழிகாற்றில் மாட்டிக் கொண்டது என்று அனைத்தினையும் குந்தவை தேவியிடம் கூறுகிறான். குந்தவையின் கட்டளைப்படியே, இளவரசரை சூடாமணி விகாரத்தில் சேர்க்க பூங்குழலியும், சேந்தன் அமுதனும் சென்றிருப்பதை தெரிவிக்கிறான். இதற்குள் இளவரசர் இறந்துவிட்டதாக வதந்தி பரவி மக்கள் பழையாறை அரண்மனையில் கூடுகிறார்கள். அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு மீண்டும் நிமிர்த்தகாரன் போல நடிக்கிறான் வந்தியத்தேவன். அதைக் கண்ட பினாகபாணி வந்தியத்தேவனை நந்தியின் ஒற்றன் என்கிறான். அதனால் கோபமடைந்த வந்தியத்தேவன் பினாகபாணியுடன் சண்டையிடுகிறான். அந்நேரத்தில் பழையாறைக்கு வருகைதரும் அநிருத்தர் தன் காவலர்களை விட்டு பினாகபாணியையும், வந்தியத்தேவனையும் சிறைபிடிக்கிறார். பின்பு குந்தவையுடன் பேசி, காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனுக்கு பாதுகாப்பாக இருக்க வந்தியத்தேவனை அனுப்ப திட்டமிடுகிறார். வந்தியத்தேவனுடன் திருமலையப்பனையும் உடன் அனுப்புகிறார்.

வந்தியத்தேவன் திருமலைக்காக காத்திருக்கும்போது, வானதி தேவி பல்லக்கில் செல்வதை காண்கிறார். திருமலை தேவையில்லாத காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுருத்தியமையால் வானதிதேவியை கண்டுகொள்ளாமல் குடந்தை ஜோதிடரிடம் செல்கிறார். அங்கு வந்தியத்தேவனைத் தொடர்ந்து வந்த வானதிதேவி இளவரசர் நாகைப்பட்டத்தில் இருப்பதை வந்தியத்தேவன் மூலம் அறிகிறார். குடந்தை ஜோதிடர் வீட்டிலிருந்து சென்ற வானதியை சில காலாந்தகர்கள் பிடித்துக் கொண்டார்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]