இராஜாதித்தர் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜாதித்தர்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு


இராஜாதித்தர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பராந்தக சோழ மன்னனின் முதல் புதல்வரும், அரிஞ்சய சோழர் மற்றும் கண்டராதித்தரின் சகோதரன் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற இராஜாதித்தரைச் சற்றுப் புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

கதைமாந்தர் இயல்பு[தொகு]

பராந்தக தேவரின் முதல் புதல்வர் இராஜாதித்தர். இவர் தக்கோலம் போரில் பெரும்படையை எதிர்த்து யானைமேல் இருந்து போர் செய்தார். கன்னரதேவனுடைய சைன்யத்தை முறியடித்துவிட்டு, யானை மீதிருந்தபடி உயிர் துறந்து வீர சொர்க்கம் எய்தினார். அவருடைய அம்பு பாய்ந்த உடலை சோழ மாளிகையில் வைத்து சோழப் பெண்கள் அழுதார்கள். அவருடைய வீர வரலாற்றினை மக்கள் நினைவு கூறும் வகையில் சோழ நாடெங்கும், நாடகங்கள் இயற்றப்படுகின்றன. இவரே வீர நாராயண ஏரியைத் திட்டமிட்டு உருவாக்கித் தந்ததாகவும் பொன்னியின் செல்வனின் கல்கி குறிப்பிடுகிறார்.

நூல்கள்[தொகு]

இராஜாதித்தரை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]