வீரபாண்டியன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வீரபாண்டியன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
முதல் தோற்றம் பொன்னியின் செல்வன்
உருவாக்கியவர் கல்கி
தகவல்
பால் வரலாற்று கதைமாந்தர்
தொழில் பாண்டிய மன்னன்
துணைவர்(கள்) மந்தாகினி தேவி
பிள்ளைகள் மதுராந்தகத் தேவன், நந்தினி தேவி
தேசிய இனம் பாண்டிய நாடு

வீரபாண்டியன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற மந்தாகினியின் கணவனும், நந்தினி, மதுராந்தகனின் தந்தையும் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற வீரபாண்டியனைச் சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

கதாப்பாத்திரத்தின் இயல்பு[தொகு]

வீரபாண்டியன் இலங்கை அரசரோடு சேர்ந்து சுந்தர சோழரின் படைகளை எதிர்த்து போர் புரிந்தான். அதில் தோல்வியுற்று சில காலம் மறைந்திருந்தான். கடலில் நினைவற்று கிடந்த வீரபாண்டினைக் கருத்திருமன் எனும் படகோட்டி காப்பாற்றினான். கருத்திருமனோடு வந்த ஊமைப்பெண்ணான மந்தாகினியுடன் ஈழத் தீவில் தங்கினார்கள். அங்கிருந்த ஒரு மனிதர், மந்தாகினியை அடையாளம் கண்டு, அவளைத் தன் மகளென்று கூறினார். வீரபாண்டியன் இலங்கை மன்னனுக்குக் கருத்திருமனிடம் ஓலை கொடுத்தனுப்பினான். பின்பு ரோஹண நாட்டிற்கு கருத்திருமனும், வீரபாண்டியனும் சென்று அங்கு இலங்கை அரசனுடன் பல இடங்களுக்கு சென்றார்கள். இறுதியாக ஒரு பள்ளத்தாக்கொன்றில் பாண்டிய மன்னர்களின் மணி மகுடமும், இரத்தின ஹாரமும், அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்களும், விலை மதிப்பில்லாத ஆபரணங்களும் இருந்தன.

வீரபாண்டியன், கருத்திருமனிடம் பொற்காசுகளை அளித்து மந்தாகினியைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறினான். இலங்கை அரசனுடன் இணைந்து பெரும் படை திரட்டி மீண்டும் சோழப் பேரரசின் மீது போர் தொடுத்தான். அங்கு வந்த கருத்திருமனிடம் மந்தாகினியை அழைத்துவருமாறு கூறினான். சுந்தர சோழர் படையினைத் தலைமை தாங்கிய ஆதித்த கரிகாலனிடம் தோற்று ஓடி ஒளிந்தான். அவனைத் தேடிவந்த ஆதித்த கரிகாலனிடம் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மீது ஒளிந்து கொண்டு, அசிரீரி போல வீரபாண்டியன் ஒளிந்திருக்கும் இடத்தினைத் தெரிவித்தான். இறுதியாக வீரபாண்டியனின் தலையை வெட்டி ஆதித்த கரிகாலன் வெற்றி கொண்டான்.

நூல்கள்[தொகு]

வீரபாண்டியனைக் கதாபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]