வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (பிரித்தானிய இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள் (salute state) என்பது 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தாலும், பின்னர் 1858-ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களாலும், பிரித்தானியப் பேரரசின் துணைப்படைத்திட்டத்தை ஏற்று, பிரித்தானியாவின் பாதுகாப்பு பெற்ற சுதேச சமஸ்தானங்களின் மன்னர்களை வரவேற்கும் போது துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கச் செய்து வழங்கப்படும் மரியாதையாகும். [1]இது பிரித்தானியா இராச்சியத்தினர், உள்ளூர் மன்னர்களை வரவேற்கும் போது வழங்கப்படும் ஒரு வகை வணக்கமுறையாகும்.

பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் 119 சமஸ்தானங்களின் மன்னர்கள் மட்டுமே துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை பெற்றனர். சுதேச சமஸ்தான மன்னர்கள் ஆளும் நிலப்பரப்பு, ஆண்டு வருமானம், செலுத்தும் திறை மற்றும் மக்கள் தொகை பொறுத்து, வணக்கத்திற்காக வெடிக்க வைக்கும் துப்பாக்கி குண்டுகளின் எண்ணிக்கை 9 முதல் 21 வரை இருக்கும்.

ஐதராபாத் இராச்சியம், ஜம்மு காஷ்மீர் இராச்சியம், பரோடா அரசு, குவாலியர் அரசு மற்றும் மைசூர் இராச்சியம் மகாராஜாக்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செய்தது.

1947-இல் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், இந்தியாவில் 1971-ஆம் ஆண்டிலும், பாகிஸ்தானில் 1972-ஆம் ஆண்டிலும் சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு துப்பாக்க்கி குண்டுகள் முழங்க வரவேற்கும் முறை ஒழிந்தது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]