போபவார் முகமை

ஆள்கூறுகள்: 22°55′N 75°15′E / 22.917°N 75.250°E / 22.917; 75.250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Warning: Value not specified for "common_name"
போபவார் முகமை
முகமை

1882–1937
Location of
Location of
மத்திய இந்திய முகமையின் வரைபடத்தின் மேற்கில் போபவார் முகமையின் பகுதிகள்
வரலாறு
 •  பில் முகமை மற்றும் பில் துணை முகமைகளை ஒன்றிணைத்தல் 1882
 •  மால்வா முகமையுடன் இணைத்தல் 1937
பரப்பு
 •  1901 19,902 km2 (7,684 sq mi)
Population
 •  1901 5,47,546 
மக்கள்தொகை அடர்த்தி 27.5 /km2  (71.3 /sq mi)
 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  "Bhopawar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

போபவார் முகமை (Bhopawar Agency) பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இருந்த பில் முகமை மற்றும் பில் துணை முகமைகளை இணைத்து, 1882-ஆம் ஆண்டில் போபவார் முகமை நிறுவப்பட்டது. இம்முகமையின் கீழ் பழைய நிமோர் பகுதிகள் (தற்கால மத்தியப் பிரதேசத்தின் காண்டுவா மாவட்டம், கர்கோன் மாவட்டம் மற்றும் புர்ஹான்பூர் மாவட்டம்) மற்றும் மால்வாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள சுதேச சமஸ்தானங்கள் இருந்தது. 1901-ஆம் ஆண்டில் போபவார் முகமை 7,684 சதுர மைல்கள் (19,900 km2) பரப்பளவும், மக்கள் தொகை 5,47,546 ஆக இருந்தது. இந்த முகமையில் பில் பழங்குடி மகக்ள் அதிகம் இருந்தனர்.

1925-ஆம் ஆண்டில் போபவார் முகமையை மால்வா முகமையுடன் இணைக்கப்பட்டது. 1927-ஆம் ஆண்டில் இம்முகமைக்கு மால்வா-போபவார் முகமை எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் 1934-ஆம் ஆண்டில் இதற்கு மால்வா முகமை எனப்பெயரிட்டப்பட்டது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் மால்வா முகமையில் இருந்த சுதேச சமஸ்தானங்கள் புதிதாக நிறுவப்பட்ட மத்திய பாரதம் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1 நவம்பர் 1956 அன்று போபவார் முகமைப் பகுதிகள் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

போபவார் முகமையின் சுதேச சமஸ்தானங்கள் மற்றும் ஜமீன்களும்[தொகு]

போபவார் முகமை குறித்த செய்தி

வணக்கத்திற்குரிய சுதேச சமஸ்தானங்கள்[தொகு]

  1. தார் சமஸ்தானம்
  2. அலிராஜ்பூர் சமஸ்தானம்
  3. பர்வானி சமஸ்தானம்
  4. ஜாபூவா சமஸ்தானம்

வணக்கமில்லா சமஸ்தானங்கள்[தொகு]

  1. அம்ஜெரா சமஸ்தானம் Amjhera, title Rao
  2. பகத்கர் சமஸ்தானம்
  3. சச்சாதவாத் சமஸ்தானம்
  4. ஜோபாத் சமஸ்தானம்
  5. கத்திவாரா சமஸ்தானம்
  6. மாத்வார் சமஸ்தானம்
  7. மூல்தான் சமஸ்தானம்
  8. ரத்தன்மால் சமஸ்தானம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=போபவார்_முகமை&oldid=3388354" இலிருந்து மீள்விக்கப்பட்டது