யோகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும். இந்நெறி நட்பு மார்க்கமாக ஒழுக வேண்டியதால் இந்நெறி மூலம் சாரூப முத்தியும் சிவரூபம் பெறும் பாக்கியமும் பெறுவர். இச்சக மார்க்கம் பற்றி திருமந்திரம் பின்வருமாறு கூறுகின்றது.
- யோகச் சமாதியின் உள்ளே அகலிடம்
- யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
- யோகச் சமாதியின் உள்ளே உள சக்தி
- யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.
கிரியைநெறியில் நின்று முத்திபெற்வர்கள் [தொகு]
திருமூலர், பெருமிழைலைக்குறும்பர், சேரமான் பெருமாள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் இந்நெறியில் நின்று முத்திபெற்றோராவர்.