மரம் (மூலப்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மூலப்பொருள் என்ற வகையில் மரம் என்பது வைரமான தாவரங்களின் அடிமரம், கிளைகள் முதலியவற்றிலிருந்து பெறப்படும் பொருளாகும். இது, வைர மரங்களின் தண்டுகளில் காணப்படும் துணைநிலைக் கட்டமைப்புத் திசுக்களான கடினமான, நார்த்தன்மை கொண்ட, தடிப்புற்ற காழ்த் திசுக்களால் ஆனது. உயிரோடிருக்கும் மரமொன்றில், இத் திசுக்கள் நீரையும், ஊட்டப் பொருட்களையும் இலைகளுக்குக் கொண்டு செல்கின்றன. அத்துடன் இவை மரங்கள் பெரிதாக வளர்வதற்குத் தேவையாக பலத்தையும் கொடுக்கின்றன.

மனிதர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே மரத்தைப் பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். முக்கியமாகக் கட்டிடப் பொருளாகவும்; கருவிகள், ஆயுதங்கள், தளவாடங்கள், கலைப் பொருட்கள் போன்றவற்றைச் செய்வதற்கும்; பொதி செய்தல், கடதாசி உற்பத்தி போன்றவற்றுக்கும்; விறகாகவும் மரம் பயன்பட்டு வந்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மரம்_(மூலப்பொருள்)&oldid=1120773" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்