காகிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கடதாசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு கடதாசிக் கட்டு

கடதாசி (பிறச்சொற்கள் தாள், கடுதாசி, ஆங்கிலம் Paper) என்பது, அதன் மேல் எழுதுவதற்கும், அச்சிடுவதற்கும்; பொதி சுற்றுவதற்கும் பயன்படுகின்ற மெல்லிய பொருள் ஆகும். இது மரம், புற்கள், வைக்கோல் முதலியவற்றிலிருந்து பெறப்படும் செலுலோசுக் கூழ் போன்ற ஈரலிப்பான நார்ப் பொருட்களை அழுத்தித் தாள்களாக ஆக்குவதன் மூலம் செய்யப்படுகிறது. அறியப்பட்ட மிக முந்திய வகைக் கடதாசி கிமு 3500 ஆம் ஆண்டளவில் எகிப்தில் பயன்பட்டுள்ளது. இது பப்பிரஸ் தாவரத்தில் இருந்து செய்யப்பட்டது. தற்போது நாம் பயன்படுத்தும் கடதாசி கிபி இரண்டாம் நூற்றாண்டளவில் சீனாவில் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரே சீனாவில் கடதாசி பயன்பட்டிருக்கக் கூடும் என்பதற்கான சில சான்றுகளும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

சீனாவில் கடதாசி பயன்படுத்தியது போலவே, ஒவ்வொரு நாட்டவரும் ஒவ்வொரு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். சீனர்கள் முதலில் சாங் மற்றும் சவு அரசமரபு காலத்தில் எலும்பு மற்றும் மூஙகில் பட்டைகளில் தான் எழுதினர்.சுமெரியர்கள் ஈரமான களிமண் கொண்டு பலகைகள் உருவாக்கி அதில் எழுதி வந்துள்ளனர். எகிப்தியர்கள் பப்பிரைஸ் என்ற நாணல் புல்லில் எழுதினார்கள்.தமிழர்கள் பனைஓலையைப் பக்குவம் செய்து அதில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ளனர். தமிழ் இலக்கியஙகள் யாவும் இவ்வாறு பனைஓலையில் எழுதப்பட்டவையே. பின்னர் பட்டுத் துணிகளில் வண்ணக்குழம்பினைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதி வந்துள்ளனர். என்றும் அழியாத எழுத்துகள் வேண்டும் என்பதற்காக கற்களிலும் எழுத்துகளை கல்வெட்டுகளில் செதுக்கி வைத்தனர். ஐரோப்பியர்கள் ஆட்டின் தோல் அல்லது கன்றின் தோல் இவற்றில் எழுதினார்கள்.

தோற்றம்[தொகு]

சீனாவைச் சேர்ந்த "சாய்லுன்" என்பவர் தான் முதன்முதலில் தாள்களை உருவாக்கினார்.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீனாவில் ஆன் அரசமரபு காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காகிதம் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வேறு நாட்டவரால் அறியப்படவில்லை.கி.பி எட்டாம் நூற்றாண்டில் பட்டு சாலை வழியே காகிதமுறை பரவியது.

பரவல்[தொகு]

கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர்.கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து ஐரோப்பியர் கற்று உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.இவ்வாறு காகிதத்தின் பயன்பாடு மத்திய கிழக்கு பகுதியில் பரவியது. கடதாசியின் பயன்பாடு, சீனாவில் இருந்து இஸ்லாமிய உலகத்தினூடாக ஐரோப்பாவுக்கும்,பாகிஸ்தான்,உஸ்பெகிஸ்தான்(கி.பி.751),பாக்தாத்(கி.பி793))எகிப்து(கி.பி.900), மற்றும் மொராக்கோ(கி.பி.1100) போன்ற நாடுகளுக்கு பரவியது. அங்கே 12 ஆம் நூற்றாண்டில் கடதாசி உற்பத்தி தொடங்கியது.

அமெரிக்காவும் காகிதமும்[தொகு]

அமெரிக்க தொல்பொருள் ஆய்வாளர்கள், கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மாயன்கள் 'அம்டில்' என்னும் பெயரில் காகிதத்தை பயன்படுத்தியதாக கூறுகின்றனர். மரத்தின் பட்டைகளை வேகவைத்தும் நன்றாக அடித்து கூழாக்கியும் அவர்கள் காகிதத்தை பயன்படுத்தி உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், தற்போதைய காகித முறை ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்கவுக்கு வந்தது. முதலில் காகிதம் பயன்படுத்திய அமெரிக்க நகரம் மெக்சிகோ ஆகும். மெக்சிகோ கி.பி.1575 இல் காகிதத்தை பயன்படுத்த தொடங்கியது.

நவீன காகித வரலாறு[தொகு]

பழைய காகிதம் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்தது.எடையும் அதிக அளவில் இருந்தது. எனவே மக்கள் மிகுந்த சிரமபட்டனர். நவீன காகிதம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கபட்டது. நிக்கோலஸ் லூயிஸ் ராபர்ட் என்பவர் 1799 இல் நவீன காகிதத்தை கண்டுபிடித்தார். நவீன காகிதம் மரக்கூழினால் தயாரிக்கபடுகிறது.

மூலப் பொருட்கள்[தொகு]

தொடக்கத்தில் மூங்கில் போன்ற மரஙகளை சிறுசிறு துண்டுகளாக்கி அதனை நன்றாக அரைத்து கூழாக்கினர். இதுவே செல்லுலோஸ் எனப்படும் "காகிதக் கூழ்" ஆகும் இந்த கூழினை நன்கு காய்ச்சி, அதில் உள்ள நீரை வடித்து கனமான தகடு போன்ற பொருளினால் அழுத்தி தாள்களை உருவாக்கினார்கள்.இவ்வாறு தான் காகிதம் உருவானது.

  • ஊசியிலை மரங்கள், மூங்கில், யூகலிப்டஸ், பருத்தி, சணல் கழிவு, கந்தை துணிகள், நார்கள், புற்கள், கரும்புச்சக்கைகள் போன்றவை.
  • தற்காலத்தில் மரத்துண்டுகளுக்குப் பதிலாக இரசாயன முறையில் அமிலஙகளை சேர்த்து வேகவைத்து காகிதக்கூழ் தயாரிக்கின்றனர்.
  • மரக்கூழுடன் ஆலும் என்னும் வேதிப்பொருளை சேர்க்கின்றனர்.எனவே காகிதங்கள் அமிலத்தன்மையை அடைகின்றன.
  • இயந்திரமயமாக்கப்பட்ட கடதாசி உற்பத்தி குறிப்பிடத்தக்க பண்பாட்டு மாற்றங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. எழுதுவதும் அச்சிடுவதும் மிகவும் எளிதயிற்று.

அமிலத்தன்மை உடைய காகிதங்கள் விரைவாக எழுத்துக்களை அழிய செய்கின்றன. எனவே, தற்போது புத்தங்களை அச்சிடும் நிறுவனங்கள் அமிலத்தன்மை உடைய காகிதங்ளை தவிர்க்கின்றனர்.

பல்வேறு பெயர்கள்[தொகு]

எகிப்து நாட்டினர் முதன்முதலில் பப்ரைஸ் தாளில் எழுதியதால் "பேப்பர்" என்று அழைக்கின்றனர்.அரேபியர் "காகத்" என்றனர். தமிழர்கள் காகிதம் எனவும் தாள் எனவும் அழைக்கின்றனர். போர்த்துகீசியர்கள் கடுதாசி என்று அழைக்கின்றனர்.

இது முதன் முறையாகக் கடிதங்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்பவற்றின் மூலம் மலிவான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதுமட்டும் அல்லாமல் செலாவணியாக நாம் பயன்படுத்தும் பணம் உருவாகவும் மூல காரணமாயிற்று.

இந்தியாவில் காகிதம்[தொகு]

அரேபியர்கள் மூலமாக காகிதம் இந்தியாவிற்குள் நுழைந்தது.கி.பி.400 இல் இந்தியாவில் காகிதங்கள் பயன்படுத்தபட்டன. தற்போது இந்திய காகிதம் என்பது மிக உயரியவகை காகிதமாக பயன்படுதபடுகிறது.ஏனெனில், இந்திய காகிதம் இருபத்தி ஐந்து சதவீதம் பருத்தி இலைகளால் ஆனது.இந்திய காகிதம் மிகவும் மெலிதாகவும், நீண்ட நாள் பயன்பாட்டிற்கும் ஏற்ற வகையில் இருக்கும்.இந்த இந்திய காகிதம் பைபில் மற்றும் அகராதி தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.

மறுசுழற்சி முறை[தொகு]

மரங்களை பாதுகாக்க வேண்டி மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் உலகத்தில் தொண்ணுற்று மூன்று சதவிகித காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மறுசுழற்சி செய்யப்படும் ஒரு டன் காகிதங்கள் பதினேழு மரங்களை காப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காகிதத்தின் பயன்கள்[தொகு]

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் விலை உயர்ந்ததாக இருந்த காகிதம் தற்போது கழிவறையில் துடைப்பானாகவும்,வியர்வை துடைப்பானாகவும் பயன்படுகிறது. மேலும், செய்தித்தால் தயாரிக்கவும் பெரும் அளவில் பயன்படுகிறது.

மேற்கோள்[தொகு]

ஐந்தாம் வகுப்பு, தமிழ்ப்பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவன வெளியீடு (சமச்சீர் கல்விக்கு முந்தையது) ஆங்கில விக்கி தளத்தின் மொழிப்பெயர்ப்பு.

"http://ta.wikipedia.org/w/index.php?title=காகிதம்&oldid=1667765" இருந்து மீள்விக்கப்பட்டது