உள்ளடக்கத்துக்குச் செல்

பொதியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொதியமலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகத்தியர் மலை (அசம்புமலை)
இந்த மலையில் உள்ள 26 மலைச் சிகரங்களில் உயரமான அகத்தியர்மலை 1,600 மீட்டர்கள் (5,200 அடி)
உயர்ந்த புள்ளி
உயரம்1,868 m (6,129 அடி)
புடைப்பு1,668 m (5,472 அடி)
பட்டியல்கள்
ஆள்கூறு8°39′N 77°13′E / 8.650°N 77.217°E / 8.650; 77.217
பெயரிடுதல்
மொழிபெயர்ப்புமருந்து தயாரிப்பாளர் மலை
பெயரின் மொழிதமிழ்
புவியியல்
அமைவிடம்கேரளம் & தமிழ்நாடு
மூலத் தொடர்மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
அமைப்பியல் வரைபடம்திருவனந்தபுரம் பகுதி வரைபடம்
நிலவியல்
பாறையின் வயதுCenozoic, 100 to 80 mya
மலையின் வகைFault Description
ஏறுதல்
எளிய வழிtrekking via Peppara Wildlife Sanctuary
பொதிகை மலை
உயர்ந்த புள்ளி
உயரம்1,866 m (6,122 அடி)
புடைப்பு1,668 m (5,472 அடி) Edit on Wikidata
பட்டியல்கள்
ஆள்கூறு8°37′00.09″N 77°14′46.50″E / 8.6166917°N 77.2462500°E / 8.6166917; 77.2462500
புவியியல்
அமைவிடம்இந்தியா, திருவனந்தபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
மூலத் தொடர்ஆனை மலை

பொதிகை மலை என்பது. மேற்குத்தொடர்ச்சி மலைகளில் தென்பகுதியில் ஆனைமலைத் தொடாில் அமைந்துள்ளது. இதற்கு அகத்தியர் மலை என்று மற்றொரு பெயரும் உண்டு

புவியமைப்பு

[தொகு]

பொதிகை மலை கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்திலும், ஒருபகுதி தமிழ்நாடு மாநிலம் திருநெல்வேலி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இதன் உயரம் 1,866 மீட்டா்கள் ஆகும். இந்த மலையிலிருந்து தான் தமிழ்நாட்டின் முக்கிய நதியான தாமிரபரணி ஆறு உருவாகிறது.

சங்க காலத்தில் பொதியம் என்றும், பொதியில் என்றும் வழங்கப்பட்ட மலையை இக்காலத்தில் பொதிகைமலை என்றும் கூறுவர்.
சங்ககாலத்தில் வையை என வழங்கப்பட்ட ஆற்றை இக்காலத்தில் வைகை எனவும் வழங்குவது போன்றது இது.
வடக்கில் இமயமலையும், தெற்கில் பொதியமலையும் தமிழர் சென்றுவந்து கண்ட ஓங்கி உயர்ந்த மலைகள். [1]

ஆண்ட அரசர்கள்

[தொகு]
ஆய், திதியன்
சங்க காலத்தில் பொதியமலை நாட்டை ஆய்[2], திதியன்[3] ஆகிய குறுநில மன்னர்கள் ஆண்டுவந்தனர்.
நெடுஞ்செழியன் வெற்றி
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இந்தப் பொதியமலை நாட்டை வென்று தனதாக்கிக்கொண்டான்.[4]
தென்னவன்
தென்னவன் என்னும் பாண்டியன் இதனை ஆண்ட காலமும் உண்டு. இவனது பொதியில் நாட்டில் நீர் கொட்டிய அருவி குற்றாலம்.[5]
கோசர்
கோசர் என்னும் குடிமக்கள் இங்கு வந்து பறையறைந்து அரசனுக்காக வரி தண்டினர்.[6][7]

மலைவளம்

[தொகு]
சந்தனம்
பொதியமலையில் சந்தன மரங்கள் அதிகம். அங்கு மக்கள் நடமாட்டம் இல்லை.[8]
காந்தள்
காந்தள் மலர் மிகுதி.[9]
அன்னம்
ஆய் அரசன் ஆண்ட பொதியமலையில் அன்னப்பறவைகள் விளையாட்டுக் காட்டும்.[10]

பொதுவான ஊர்ச்சாவடி

[தொகு]
பொதியில் என்பது ஊர்மக்களின் பொதுவான இல்லமாகிய ஊர்ச்சாவடியைக் குறிக்கும். இங்கு நடப்பட்டிருந்த கந்தம் என்னும் தூணில் கடவுள் குடிகொண்டிருந்ததாக மக்கள் நம்பினர்.[11]
வயது முதிர்ந்தவர்கள் இங்கு அமர்ந்துகொண்டு வல் என்னும் சூது விளையாடுவர். இந்த விளையாட்டுக்கு நாய் என்னும் கல்லுக்காய் பயன்படுத்தப்படும்.[12][13] இதனை வல்லநாய் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[14]
ஊர்மக்கள் குடிபெயர்ந்துவிட்டால் இந்தப் பொதியில் கறையான் அரித்துப் பாழ்பட்டுக் கிடக்கும்.[15]

கடவுள் பொதியில்

[தொகு]
பொதினியில்
பொதினி எனப்பட்ட பழனியில் இருந்த பொதியிலில் முருகு தெய்வம் குடிகொள்ளும்.[16]
புகார் நகரில் பொதியில்
காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த பொதியில் தூணில் பெண்யானைகளைக் கட்டி ஆண்யானையை ஏறவிடுவர்.[17]

பொதிகைமலை யாத்திரை

[தொகு]
அகத்திய மலை உச்சியில் உள்ள அகத்தியர் சிலை

பொதியமலையில் இருந்துகொண்டு அகத்தியர் தமிழ் வளர்த்ததாகக் கதைகள் கூறுகின்றன. இந்த மலையின் உச்சியில் அகத்தியர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்ல, வாகனங்கள் செல்ல முடியாத அடர் வனத்தின் வழியே, இரண்டு நாள் இரவு, மூன்று நாள் பகல் என்று கடுமையான நடைபயண யாத்திரையை பக்தர்கள் மேற்கொள்கின்றனர். 1995 ஆண்டுக்கு முன்வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், காரையாறு அணை, பாணதீர்த்தம் அருவி, பேயாறு உள்ளிட்ட காட்டாறுகளைக் கடந்து, பொதிகைக்குப் பக்தர்கள் சென்று வந்தனர். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவ்வழியாக பொதிகை மலை செல்வதற்கு, 2002 ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக வனத்துறை தடை விதித்துவிட்டது. இதனால் மலையின் மறுபக்கத்தில் உள்ள திருவனந்தபுரம் வழியாக பொதிகை யாத்திரை செல்ல, கேரள வனத்துறை அனுமதிக்கிறது. இணையம் மூலம் முன்பதிவு செய்பவர்களிடம், உரிய கட்டணம் பெற்றுக்கொண்டு, பயிற்சி பெற்ற காணிகள் துணையுடன் கேரள வனத்துறை பொதிகைக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் சிவராத்திரி வேளையிலும், அதன்பின், மே மாதத்தில் மட்டும் இப்பயணத்தை கேரள வனத்துறை அனுமதிக்கிறது. தாமிரபரணியில் எப்போதும் தண்ணீர் ஓட வேண்டும் என, பொதிகை மலையில் வீற்றிருக்கும் அகத்தியரை வேண்டி, பக்தர்கள் அங்கு சிறப்பு பூசைகள் நடத்துவர்.[18]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று நிலீஇயர் - புறநானூறு 2
  2. கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - குறுந்தொகை 84
  3. பொதியிற்செல்வன் பொலந்தேர்த் திதியன் - அகநானூறு 25
  4. அவை இருந்த பெரும்பொதியில் பேய்மகளிர் ஆடத் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் வென்றான் - மதுரைக்காஞ்சி 161
  5. திருந்திலை நெடுவேள் தென்னவன் பொதியில் அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின் ததும்புசீர் இன்னியம் - அகநானூறு 138
  6. தொன்மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய நான்மொழிக் கோசர் வாய்மொழி போல அலர் பரவிற்று - குறுந்தொகை 15
  7. புனைதேர்க் கோசர் தொன்மூதாலத்து அரும்பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின், வம்ப மோரியர் வந்தனர் அகநானூறு 251
  8. மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில் சந்தனம் போல் அவள் தண்ணியள் - குறுந்தொகை 376
  9. பொதியில் பூத்த காந்தள் போன்ற கை அவளுக்கு - நற்றிணை 379
  10. அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் - புறநானூறு 128
  11. இயங்குநர் செகுக்கும் எய்படு நனந்தலை, பெருங்கை எண்கு இனம் குரும்பி தேரும், புற்றுடைக் கவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கருந்தாள் கந்தத்து, புறா இருந்து பயிரும் - அகநானூறு 307
  12. கலிகெழு கடவுள் கந்தம் கைவிடப் பலிகண் மாறிய பாழ்படு பொதியில் நரைமூதாளர் நாய் இடம் குழித்த வல் விளையாட்டு - புறநானூறு 52
  13. பொதியிலில் இருந்துகொண்டு நரைமூதாளர் வல் என்னும் சூதாட்டம் ஆடுவர் - அகநானூறு 377
  14. தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் லகர-ஈறு
  15. சிதலை வேய்ந்த போர்மடி நல்லில் பொதியில் - அகநானூறு 167
  16. முருகன் குடிகொள்ளும் இடங்களில் ஒன்று பொதியில் - முருகு 226
  17. வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில் பெண்யானையைத் பெருந்தூணில் கட்டிவைத்து யானையைப் புணரவிடுவர் - பட்டினப்பாலை 249
  18. அ. அருள்தாசன் (9 மார்ச் 2017). "தாமிரபரணி உற்பத்தி கேந்திரத்தில் கடும் வறட்சி: பொதிகை மலை யாத்திரைக்கு கேரள அரசு தடை". செய்தி. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொதியம்&oldid=3652941" இலிருந்து மீள்விக்கப்பட்டது