உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புளோகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிளாகர்
பிளாகர்.கொம்
வலைத்தள வகைபதிவு வழங்கி
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
உரிமையாளர்கூகிள்
உருவாக்கியவர்பைரா லாப்ஸ்
வணிக நோக்கம்ஆம்
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு, இலவசம்
வெளியீடுஆகத்து 23, 1999[1]
அலெக்சா நிலை7
தற்போதைய நிலைசெயல்படுவது
உரலிபிளாகர் இணையதளம்


பிளாகர் (Blogger) ஓர் வலைப்பதிவு வெளியீட்டு அமைப்பாகும். இதனை முதலில் பைரா லாப்ஸ் என்ற நிறுவனம் 1999ஆம் ஆண்டு உருவாக்கியது. பின்னர் 2003ஆம் ஆண்டில் கூகிள் நிறுவனம் இவ்வமைப்பை வாங்கியது. இங்கு சொந்த வலைத்தளங்கள் இல்லாத வலைப்பதிவர்கள், இவ்வமைப்பில் இணைந்து கொண்டு blogspot.com என்ற துணைபரப்பில் இந்நிறுவன வழங்கியில் இருந்து வெளியிடுகிறார்கள். இந்த சேவையை கூகிள் இலவசமாக வழங்குகிறது.

ஓர் வலைப்பதிவை உருவாக்க வேண்டிய மென்பொருள்கள், சேமிக்க வேண்டிய சேமிப்பகங்கள் மற்றும் இணையத்தில் வெளியிட வேண்டிய வழங்கி மற்றும் ஆள்களபெயர் என அனைத்தையும் பயனர் அறியாவண்ணம் அமைத்துக் கொடுப்பதால், ஓர் வலைப்பதிவருக்கு கணினி/இணைய அறிவு அடிப்படை அளவில் இருப்பின் போதுமானது என்பதே, இதன் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. இச்சேவை இணையத்தில் பல வசதிகளை கொடுத்து வலைப்பதிவுகளை பரவலாக்கியது. 2007 ஆம் ஆண்டு இருமுறையல்லாத கூடுதல் வருகையாளர்களைக் கொண்ட இணைய பரப்புகளை கணக்கெடுத்ததில் பிளாகர் சேவை பதினாறாவதாக வந்துள்ளது.[2]

தனிப்பரப்பு

[தொகு]

பிளாக்கரில் உருவாக்கப்படும் தளங்கள் வலைப்பதிவுகள் என அறியப்படுகின. இவை அனைத்தும் blogspot.com என்ற துணைப்பரப்பில் இடமறியப்படும். பயனரின் விருப்பத்திற்கேற்ப சொந்தமாக ஒரு தனிப்பரப்பு உரிமையாக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வலைப்பதிவை அந்த முகவரிக்கு திருப்பியனுப்புவதன் மூலமாக, வலைப்பதிவு ஒன்றுக்கு வலைத்தளம் போன்ற இடைமுகப்பை வழங்கலாம். உதாரணமாக, xyz.blogspot.com என்ற துணைப்பரப்பை www.xyz.com என்றோ அல்லது .comமிற்கு பதிலாக ".org, .net, .info" போன்ற பிற உயர் நிலைப் பரப்புகளும் பயன்படுத்தலாம். ஒருவர் 100 வலைப்பூக்களை வைத்திருக்கலாம். ஒரு வலைப்பூவை 100 பேர் பயன்படுத்தலாம்.

சமூகத்தாக்கம்

[தொகு]

கூகிளின் இந்த பயன்பாடு இலவசமாக இருப்பதால், சமீப காலமாக இணையத்தில் வலைப்பதிவில் எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இணைய வசதி பெற்றவர் எவரும் எளிதில் வலைப்பதிவு அல்லது வலைப்பூ ஒன்றை துவங்கலாம் என்ற காரணத்தால், முற்காலத்தில் கையெழுத்துப் பத்திரிக்கைக்கு ஒப்பானதாக இது கருதப்படுகிறது. மேலும் வலைப்பதிவுகளில் தாங்கள் செய்திக் குறிப்புகள், துணுக்குகள், தகவல்கள், கல்விசார் தகவல்கள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் கதைகள் முதலியவற்றை பதிவிடலாம்.

தடைகள்

[தொகு]

கட்டற்ற நிலையில் வலைப்பதிவுகளை வழங்கி வருவதால், பிளாகர் சேவை சில காலங்களில் கீழ்வரும் நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தது:

இதனையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. புளோகரின் கதை, பிளாகர்.கொம்
  2. "Top 50 Domains - Ranked by Unique Visitors"” பரணிடப்பட்டது 2008-06-25 at the வந்தவழி இயந்திரம் September, 2007.
  3. "Google’s Gatekeepers". த நியூயார்க் டைம்ஸ். 2008. http://www.nytimes.com/2008/11/30/magazine/30google-t.html?_r=1&partner=rss&emc=rss&pagewanted=all. பார்த்த நாள்: 2008-12-01. "Over the past couple of years, Google and its various applications have been blocked, to different degrees, by 24 countries. Blogger is blocked in Pakistan, for examplesss, and Orkut in Saudi Arabia." 

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாகர்&oldid=3221481" இலிருந்து மீள்விக்கப்பட்டது