கோ (நிரலாக்க மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோ
Golang.png
தோன்றிய ஆண்டு: 2009
உருவாக்குநர்: இராபர்ட்டு கிரீசெமேர்
இராபு பைக்கு
கென் தாம்ப்சன்
வளர்த்தெடுப்பு: கூகுள்
மிக அண்மைய வெளியீடு: பதிப்பு 1.0.2 / 14 சூன் 2012; 11 மாதங்கள் முன்னர் (2012-06-14)
பிறமொழித்தாக்கங்கள்: சி, இலிம்போ, மொடியூலா, நியூற்குவீக்கு, ஒபெரோன், பாசுக்கல், பைதான்
இயக்குதளம்: இலினக்சு, மாக் இயங்குதளம் எக்சு, விரீ பி. எசு. டி., ஓப்பன் பி. எசு. டி., மைக்ரோசாப்டு விண்டோசு, பிளான் 9
இணையத்தளம்: www.golang.org

கோ (Go) என்பது எளிமையான, நம்பகமான, வினைத்திறன் மிக்க மென்பொருட்களை உருவாக்குவதற்கான கூகுளால் வளர்த்தெடுக்கப்பட்ட திறந்த மூல நிரலாக்க மொழி ஆகும்.[1]

இராபர்ட்டு கிரீசெமேர், இராபு பைக்கு, கென் தாம்சன் ஆகியோர் செப்டம்பர் 21, 2007இலேயே கோவுக்கான தொடக்க வடிவமைப்பை உருவாக்கத் தொடங்கினாலும் நவம்பர் 2009இலேயே கோ அலுவல் முறையாக அறிவிக்கப்பட்டது.[2]

பொருளடக்கம்

நோக்கங்கள் [தொகு]

இயங்குநிலை மொழியின் எளிமையுடன் தொகுப்பிக்கும் மொழிகளின் வினைத்திறனையும் வழங்குதலே கோவின் நோக்கமாகும். கோவின் ஏனைய நோக்கங்கள் பின்வருமாறு:-

  • பாதுகாப்பை வழங்குதல் (தட்டச்சுப் பாதுகாப்பும் நினைவகப் பாதுகாப்பும்)
  • தொடர்பாடலுக்கான சிறந்த ஆதரவை வழங்குதல்
  • கூடிய வேகத்தில் தொகுப்பித்தல்[3]

எடுத்துக்காட்டுகள் [தொகு]

உலகே, வணக்கம் [தொகு]

கோவில் உலகே, வணக்கம் செய்நிரல் பின்வருமாறு:-

package main
 
import "fmt"
 
func main() {
        fmt.Println("உலகே, வணக்கம்")
}

[4]

எதிரொலி [தொகு]

கோவில் எதிரொலிக் கட்டளைக்கான செய்நிரல் பின்வருமாறு:-

package main
 
import (
        "os"
        "flag"  // command line option parser
)
 
var omitNewline = flag.Bool("n", false, "don't print final newline")
 
const (
        Space = " "
        Newline = "\n"
)
 
func main() {
        flag.Parse()   // Scans the arg list and sets up flags
        var s string
        for i := 0; i < flag.NArg(); i++ {
                if i > 0 {
                        s += Space
                }
                s += flag.Arg(i)
        }
        if !*omitNewline {
                s += Newline
        }
        os.Stdout.WriteString(s)
}

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கோ_(நிரலாக்க_மொழி)&oldid=1408041" இருந்து மீள்விக்கப்பட்டது