சுந்தர் பிச்சை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சுந்தர் பிச்சை | |
|---|---|
| பிறப்பு | 1967 (அகவை 45–46) |
| பிறப்பிடம் | தமிழ் நாடு, இந்தியா |
| வாழிடம் | கலிபோர்னியா |
| தேசியம் | இந்தியர் |
| இனம் | இந்தியா |
| கல்வி கற்ற இடங்கள் | இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர் , ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், வார்ட்டன் மேலாண்மைப் பள்ளி |
| அறியப்படுவது | கூகிள் குரோம் இயக்குதளம் |
சுந்தர் பிச்சை (பி. 1967) ஒரு அமெரிக்க-வாழ் தமிழ்க் கணிபொறி பொறியாளர் (அறிவியலாளர்) ஆவார். ஐ.ஐ.டி கரக்பூரில் பொறியியல் பயின்ற இவர். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மை பட்டம் பெற்றார். தற்போது கூகிள் நிறுவனத்தின் பண்ட மேலாண்மைத்துறை துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார். 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவராகியுள்ளார்[1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "ஆன்டி ரூபினுக்குப் பிறகு சுந்தர்பிச்சை ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் தலைவராகிறார்.". வயர்டு(Wired). பார்த்த நாள் மார்ச்சு 17, 2013.