பதினெண் மேற்கணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கியம்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண் மேற்கணக்கு
எட்டுத்தொகை
ஐங்குறுநூறு அகநானூறு
புறநானூறு கலித்தொகை
குறுந்தொகை நற்றிணை
பரிபாடல் பதிற்றுப்பத்து
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி
முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை
பதினெண் கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம் சங்ககால நிலத்திணைகள்
சங்க காலப் புலவர்கள் சங்ககாலப் பெண் புலவர்கள்
சங்க கால ஊர்கள் சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள் சங்க காலக் கூட்டாளிகள்
edit

தமிழகத்தில் சங்ககாலம் எனப்படும் கி.மு 300 கி.பி 2000 கால எல்லையிற் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன.பல நூல்களின் தொகுப்பை தொகை நூல்கள்.

பிற்காலத்திலே தொகைநூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும் கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர்.குறைந்த அடிகளுடைய நூல்களுக்கு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக்கொண்டவை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டது. தவிர அவை எழுதிய காலவரிசையினைக் கொண்டும் இவ்வாறு பிரிக்கப்பட்டதாக கருத இடமுண்டு. மேற்கணக்கு நூல்கள் மூன்றடி முதல் ஆயிரம் அடிவரை எழுதப்படும் ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா மற்றும் பரிபாடல் ஆகிய வகைகளில் எழுதப்பட்டவை. மாறாக கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.

பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதை இங்கு கருத்தில் நிறுத்த வேண்டும்.

பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத்தரத்தையும் பெருமையையும் காண இப்பாடல் தொகுதிகள் துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும் புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் தெரியவரும்.

பொருளடக்கம்

[தொகு] எட்டுத்தொகை நூல்கள்

நூல் இயற்றியவர்
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை 192 பெயர்கள் கிடைக்கப்பெற்றன
குறுந்தொகை 205 புலவர்கள்
ஐங்குறுநூறு கபிலர்
பதிற்றுப்பத்து பலர்
பரிபாடல் 13 புலவர்கள்
கலித்தொகை நல்லாண்டுவனார்
அகநானூறு பலர்
புறநானூறு பலர்

[தொகு] பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை நக்கீரர்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை நற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை நக்கீரர்
குறிஞ்சிப் பாட்டு கபிலர்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
மதுரைக் காஞ்சி மாங்குடி மருதனார்
பட்டினப் பாலை கடியலுர் உருத்திரங் கண்ணனார்
மலைபடுகடாம் பெருங்குன்றப் பெருங்காசிகனார்

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பதினெண்_மேற்கணக்கு&oldid=645657" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்