சங்க காலப் புலவர்கள்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்கு கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381. அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.
பத்துப்பாட்டு நூல்கள் தொகுப்பில் உள்ள ஒவ்வொன்றும் தனித்தனி நூல். இந்தத் தொகுப்பு முழுமைக்கும் அவற்றுள் ஒன்றான திருமுருகாற்றுப்படை கடவுள் வாழ்த்தைப் போல முதல் நூலாக வைத்துப் பத்து என்று எண்ணப்பட்டுள்ளது. எட்டுத்தொகை நூல்களில் கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நூல் தொகுக்கப்பட்ட காலத்தில் சேர்க்கப்பட்டவை. அவற்றையும் சேர்த்துதான் இந்த 2381. மொத்தம் உள்ள பாடல்களில் ஆசிரியர் பெயர் தெரிந்த 2279 பாடல்களைப் பாடிய புலவர்கள் 473 பேர். இந்தப் புலவர்களின் பெயர்கள் அகர வரிசையில் பின்வருமாறு தொகுத்து தரப்பட்டுள்ளன:
[தொகு] அகர வரிசைப்படி சங்கப் புலவர்கள்
[தொகு] அ
- அகம்பன் மாலாதனார் \ பாடல் 1
- அஞ்சியத்தை மகள் நாகையார் \ பாடல் 1
- அஞ்சில் அஞ்சியார் \ பாடல் 1
- அஞ்சில் ஆந்தையார் \ பாடல் 2
- அடைநெடுங் கல்வியார் \ பாடல் 3
- அணிலாடு முன்றிலார் \ பாடல் 1
- அண்டர் மகன் குறுவழுதியார் \ பாடல் 4
- அதியன் விண்ணத்தனார் \ பாடல் 1
- அந்தி இளங்கீரனார் \ பாடல் 1
- அம்மூவனார் \ பாடல் 127
- அம்மெய்யன் நாகனார் \ பாடல் 1
- அரிசில் கிழார் \ பாடல் 18
- அல்லங் கீரனார் \ பாடல் 1
- அழிசி நச்சாத்தனார் \ பாடல் 1
- அள்ளூர் நன்முல்லையார் \ பாடல் 11
- அறிவுடை நம்பி \ பாடல் 4
[தொகு] ஆ
- ஆசிரியன் பெருங்கண்ணன் \ பாடல் 1
- ஆடுதுறை மாசாத்தனார் \ பாடல் 1
- ஆதிமந்தி \ பாடல் 1
- ஆரிய அரசன் யாழ்ப் பிரம தத்தன் \ பாடல் 1
- ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண் அத்தனார் \ பாடல் 1
- ஆலங்குடி வங்கனார் \ பாடல் 7
- ஆலத்தூர் கிழார் \ பாடல் 7
- ஆலம்பேரி சாத்தனார் \ பாடல் 8
- ஆலியார் \ பாடல் 1
- ஆவூர் கிழார் \ பாடல் 1
- ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் \ பாடல் 1
- ஆவூர்க் காவிதிகள் சாதேவனார் \ பாடல் 2
- ஆவூர் மூலங்கிழார் \ பாடல் 11
[தொகு] இ
- இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் \ சிறுபாண் ஆற்றுப்படை
- இடைக்காடனார் \ பாடல் 10
- இடைக்குன்றூர் கிழார் \ பாடல் 4
- இடையன் சேந்தன் கொற்றனார் \ பாடல் 1
- இடையன் நெடுங்கீரனார் \ பாடல் 1
- இம்மென் கீரனார் \ பாடல் 1
- இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் \ மலைபடுகடாம் (கூத்தர் ஆற்றுப்படை)
- இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் \ பாடல் 1
- இருந்தையூர்க் கொற்றன் புலவன் \ பாடல் 1
- இரும்பிடர்த் தலையார் \ பாடல் 1
- இளங் கீரந்தையார் \ பாடல் 1
- இளங் கீரனார் \ பாடல் 16
- இள நாகனார் \ பாடல் 3
- இளந் திரையன் \ பாடல் 4
- இளந் தேவனார் \ பாடல் 4
- இளம்புல்லூர்க் காவிதி \ பாடல் 1
- இளம்பூதனார் \ பாடல் 1
- இளம்பெருவழுதி \ பாடல் 2
- இளம்போதியார் \ பாடல் 1
- இளவெயினனார் \ பாடல் 1
- இறங்குகுடிக் குன்றநாடன் \ பாடல் 1
- இறையனார் \ பாடல் 1
- இனிசந்த நாகனார் \ பாடல் 1
[தொகு] ஈ
- ஈழத்துப் பூதன்தேவனார் \ பாடல் 7
[தொகு] உ
- உகாய்க்குடி கிழார் \ பாடல் 1
- உக்கிரப் பெருவழுதி \ பாடல் 2
- உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் \ பாடல் 1
- உம்பற்காட்டு இளங்கண்ணனார் \ பாடல் 1
- உருத்திரனார் \ பாடல் 1
- உலோச்சனார் \ பாடல் 35
- உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் \ பாடல் 1
- உழுந்தினைம் புலவர் \ பாடல் 1
- உறையனார் \ பாடல் 1
- உறையூர் இளம்பொன் வாணிகனார் \ பாடல் 1
- உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் \ பாடல் 13
- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் \ பாடல் 1
- உறையூர்ச் சல்லியங் குமரனார் \ பாடல் 1
- உறையூர்ச் சிறுகந்தனார் \ பாடல் 1
- உறையூர்ப் பல்காயனார் \ பாடல் 1
- உறையூர் மருத்துவன் தாமோதரனார் \ பாடல் 5
- உறையூர் முதுகண்ணன் சாத்தனார் \ பாடல் 6
[தொகு] ஊ
- ஊட்டியார் \ பாடல் 2
- ஊண்பித்தை \ பாடல் 1
- ஊன்பொதி பசுங்குடையார் \ பாடல் 4
[தொகு] எ
- எயிற்றியனார் \ பாடல் 1
- எயினந்தையார் \ பாடல் 1
- எருமை வெளியனார் \ பாடல் 3
- எருமை வெளியனார் மகனார் கடலனார் \ பாடல் 1
- எழூஉப்பன்றி நாகன் குமரனார் \ பாடல் 2
[தொகு] ஐ
- ஐயாதிச் சிறு வெண்டேரையார் \ பாடல் 1
- ஐயூர் முடவனார் \ பாடல் 10
- ஐயூர் மூலங்கிழார் \ பாடல் 1
[தொகு] ஒ
- ஒக்கூர் மாசாத்தனார் \ பாடல் 2
- ஒக்கூர் மாசாத்தியார் \ பாடல் 8
- ஒருசிறைப் பெரியனார் \ பாடல் 3
- ஒரூஉத்தனார் \ பாடல் 1
- ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் \ பாடல் 2
[தொகு] ஓ
- ஓதஞானி \ பாடல் 2
- ஓதலாந்தையார் \ பாடல் 103
- ஓரம்போகியார் \ பாடல் 110
- ஓரிற்பிச்சையார் \ பாடல் 1
- ஓரேர் உழவர் \ பாடல் 1
[தொகு] ஔ
- ஔவையார் \ பாடல் 59
[தொகு] க
- கங்குல் வெள்ளத்தார் - பாடல் 1
- கச்சிப்பேட்டு இளந்தச்சனார் - பாடல் 1
- கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் - பாடல் 2
- கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் - பாடல் 2
- கடம்பனூர்ச் சாண்டிலியன் - பாடல் 1
- கடலூர்ப் பல்கண்ணனார் - பாடல் 1
- கடியலூர் உருத்திரங்கண்ணனார் - பாடல் 4
- கடுந்தொடைக் காவினார் - பாடல் 1
- கடுந்தோட் கரவீரன் - பாடல் 1
- கடுவன் இளமள்ளனார் - பாடல் 1
- கடுவன் இளவெயினனார் - பாடல் 3
- கடுவன் மள்ளனார் - பாடல் 4
- கணக்காயன் தத்தனார் - பாடல் 1
- கணியன் பூங்குன்றனார் - பாடல் 2
- கண்ணகனார் - பாடல் 2
- கண்ணகாரன் கொற்றனார் - பாடல் 1
- கண்ணங் கொற்றனார் - பாடல் 1
- கண்ணம் புல்லனார் - பாடல் 2
- கண்ணனார் - பாடல் 2
- கதக் கண்ணனார் - பாடல் 2
- கதப் பிள்ளையார் - பாடல் 5
- கந்தரத்தனார் - பாடல் 8
- கபிலர் - பாடல் 235
- கயத்தூர் கிழார் - பாடல் 1
- கயமனார் - பாடல் 23
- கருங்குழல் ஆதனார் - பாடல் 2
- கரும்பிள்ளைப் பூதனார் - பாடல் 1
- கருவூர் கிழார் - பாடல் 1
- கருவூர்க் கண்ணம்பாளனார் - பாடல் 3
- கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் - பாடல் 3
- கருவூர்க் கலிங்கத்தார் - பாடல் 1
- கருவூர்க் கோசனார் - பாடல் 1
- கருவூர்ச் சேரமான் சாத்தன் - பாடல் 1
- கருவூர் நன்மார்பனார் - பாடல் 1
- கருவூர்ப் பவுத்திரனார் - பாடல் 1
- கருவூர்ப் பூதஞ்சாத்தனார் - பாடல் 1
- கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார் - பாடல் 1
- கல்பொரு சிறுநுரையார் - பாடல் 1
- கல்லாடனார் - பாடல் 14
- கவைமகன் - பாடல் 1
- கழாத்தலையார் - பாடல் 6
- கழார்க் கீரன் எயிற்றியனார் - பாடல் 1
- கழார்க் கீரன் எயிற்றியார் - பாடல் 8
- கழைதின் யானையார் - பாடல் 1
- கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் - பாடல் 1
- கள்ளில் ஆத்திரையனார் - பாடல் 3
[தொகு] கா
- காக்கை பாடினிடியார் நச்செள்ளையார் - பாடல் 12
- காசிபன் கீரன் - பாடல் 1
- காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் - பாடல் 1
- காப்பியஞ் சேந்தனார் - பாடல் 1
- காப்பியாற்றுக் காப்பியனார் - பாடல் 10
- காமஞ்சேர் குளத்தார் - பாடல் 1
- காரி கிழார் - பாடல் 1
- காலெறி கடிகையார் - பாடல் 1
- காவட்டனார் - பாடல் 2
- காவற்பெண்டு - பாடல் 1
- காவல் முல்லைப் பூதனார் - பாடல் 8
- காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் - பாடல் 1
- காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் - பாடல் 10
- காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் - பாடல் 3
- காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் - பாடல் 1
- காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார் - பாடல் 1
[தொகு] கி
- கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார் - பாடல் 1
- கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார் - பாடல் 1
- கிடங்கில் குலபதி நக்கண்ணனார் - பாடல் 1
- கிள்ளிமங்கலங் கிழார் - பாடல் 4
- கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார் - பாடல் 1
[தொகு] கீ
- கீரங்கீரனார் - பாடல் 1
- கீரந்தையார் - பாடல் 1
[தொகு] கு
- குடபுலவியனார் - பாடல் 2
- குடவாயிற் கீரத்தனார் - பாடல் 18
- குட்டுவன் கண்ணனார் - பாடல் 1
- குட்டுவன் கீரனார் - பாடல் 1
- குண்டுகட் பாலியாதனார் - பாடல் 2
- குதிரைத் தறியனார் - பாடல் 1
- குப்பைக் கோழியார் - பாடல் 1
- குமட்டூர்க் கண்ணனார் - பாடல் 10
- குமுழி ஞாழலார் நப்பசலையார் - பாடல் 1
- குழற்றத்தனார் - பாடல் 1
- குளம்பனார் - பாடல் 1
- குளம்பா தாயனார் - பாடல் 1
- குறமகள் இளவெயினி - பாடல் 1
- குறமகள் குறியெயினி - பாடல் 1
- குறியிறையார் - பாடல் 1
- குறுங்கீரனார் - பாடல் 1
- குறுங்குடி மருதனார் - பாடல் 2
- குறுங்கோழியூர் கிழார் - பாடல் 3
- குன்றம் பூதனார் - பாடல் 2
- குன்றியனார் - பாடல் 10
- குன்றூர் கிழார் மகனார் - பாடல் 2
[தொகு] கூ
- கூகைக் கோழியார் - பாடல் 1
- கூடலூர் கிழார் - பாடல் 4
- கூடலூர்ப் பல்கண்ணனார் - பாடல் 1
- கூவன்மைந்தன் - பாடல் 1
- கூற்றங் குமரனார் - பாடல் 1
[தொகு] கே
- கேசவனார் - பாடல் 1
[தொகு] கொ
- கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் - பாடல் 2
- கொட்டம்பலவனார் - பாடல் 1
- கொல்லன் அழிசி - பாடல் 4
- கொல்லிக் கண்ணன் - பாடல் 1
- கொள்ளம்பக்கனார் - பாடல் 1
- கொற்றங் கொற்றனார் - பாடல் 2
[தொகு] கோ
- கோக்குளமுற்றனார் - பாடல் 2
- கோடை பாடிய பெரும்பூதனார் - பாடல் 1
- கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் - பாடல் 1
- கோட்டியூர் நல்லந்தையார் - பாடல் 1
- கோண்மா நெடுங்கோட்டனார் - பாடல் 1
- கோப்பெருஞ்சோழன் - பாடல் 7
- கோவர்த்தனார் - பாடல் 2
- கோவூர் கிழார் - பாடல் 17
- கோவேங்கைப் பெருங்கதவனார் - பாடல் 1
- கோழிக் கொற்றனார் - பாடல் 1
- கோளியூர் கிழார் மகனார் செழியனார் - பாடல் 1
- கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் - பாடல் 6
[தொகு] ச
- சங்கவருணர் என்னும் நாகரியர் - பாடல் 1
- சத்திநாதனார் - பாடல் 1
- சல்லியங்குமரனார் - பாடல் 1
[தொகு] சா
- சாகலாசனார் - பாடல் 2
- சாத்தந்தையார் - பாடல் 5
- சாத்தனார் - பாடல் 1
[தொகு] சி
- சிறுமோலிகனார் - பாடல் 1
- சிறுவெண்டேரையார் - பாடல் 1
- சிறைக்குடி ஆந்தையார் - பாடல் 9
[தொகு] சீ
- சீத்தலைச் சாத்தனார் - பாடல் 10
[தொகு] செ
- செங்கண்ணனார் - பாடல் 2
- செம்பியனார் - பாடல் 1
- செம்புலப்பெயல்நீரார் - பாடல் 1
- செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் - பாடல் 1
- செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன் - பாடல் 1
- செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் - பாடல் 5
- செல்லூர்க் கோசிகன் கண்ணனார் - பாடல் 1
[தொகு] சே
- சேந்தங் கண்ணனார் - பாடல் 2
- சேந்தம் பூதனார் - பாடல் 7
- சேந்தன் கீரனார் - பாடல் 1
- சேரமான் எந்தை - பாடல் 1
- சேரமான் இளங்குட்டுவன் - பாடல் 1
- சேரமான் கணைக்கால் இரும்பொறை - பாடல் 1
- சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - பாடல் 1
[தொகு] சோ
- சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் - பாடல் 2
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் - பாடல் 1
- சோழன் நலங்கிள்ளி - பாடல் 1
- சோழன் நல்லுருத்திரன் - பாடல் 1
[தொகு] த
- தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் - பாடல் 1
- தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 6
- தனிமகனார் - பாடல் 1
[தொகு] தா
- தாமப்பல் கண்ணனார் - பாடல் 1
- தாமோதரனார் - பாடல் 1
- தாயங்கண்ணனார் - பாடல் 11
- தாயங்கண்ணியார் - பாடல் 1
[தொகு] தி
- திப்புத்தோளார் - பாடல் 1
- திருத்தாமனார் - பாடல் 1
[தொகு] தீ
- தீன்மதி நாகனார் - பாடல் 1
[தொகு] து
- தும்பிசேர் கீரனார் - பாடல் 7
- துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார் - பாடல் 1
- துறையூர் ஓடைகிழார் - பாடல் 1
[தொகு] தூ
- தூங்கலோரியார் - பாடல் 3
[தொகு] தே
- தேய்புரிப் பழங்கயிற்றினார் - பாடல் 1
- தேரதரன் - பாடல் 1
- தேவகுலத்தார் - பாடல் 1
- தேவனார் - பாடல் 1
[தொகு] தொ
- தொடித்தலை விழுத்தண்டினார் - பாடல் 1
- தொண்டி ஆமூர்ச் சாத்தனார் - பாடல் 1
- தொல்கபிலர் - பாடல் 6
[தொகு] ந
- நக்கண்ணையார் - பாடல் 6
- நக்கீரர் - பாடல் 37
- நப்பசலையார் - பாடல் 1
- நப்பண்ணனார் - பாடல் 1
- நப்பாலத்தனார் - பாடல் 2
- நம்பி குட்டுவன் - பாடல் 5
- நரிவெரூஉத் தலையார் - பாடல் 4
- நரைமுடி நெட்டையார் - பாடல் 1
- நல்லச்சுதனார் - பாடல் 1
- நல்லந்துவனார் - பாடல் 40
- நல்லழிசியார் - பாடல் 2
- நல்லாவூர் கிழார் - பாடல் 2
- நல்லிறையனார் - பாடல் 1
- நல்லுருத்திரனார் - 17
- நல்லூர்ச் சிறுமேதாவியார் - பாடல் 1
- நல்லெழுநியார் - பாடல் 1
- நல்வழுதியார் - பாடல் 1
- நல்விளக்கனார் - பாடல் 1
- நல்வெள்ளியார் - பாடல் 4
- நல்வேட்டனார் - பாடல் 5
- நற்சேந்தனார் - பாடல் 1
- நற்றங் கொற்றனார் - பாடல் 1
- நற்றமனார் - பாடல் 1
- நன்பலூர்ச் சிறுமேதாவியார் - பாடல் 2
- நன்னாகனார் - பாடல் 5
- நன்னாகையார் - பாடல் 8
[தொகு] நா
- நாகம்போத்தன் - பாடல் 1
- நாமலார் மகன் இளங்கண்ணன் - பாடல் 1
[தொகு] நி
- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் - பாடல் 1
[தொகு] நெ
- நெடுங்கழுத்துப் பரணர் - பாடல் 1
- நெடும்பல்லியத்தனார் - பாடல் 1
- நெடும்பல்லியத்தை - பாடல் 2
- நெடுவெண்ணிலவினார் - பாடல் 1
- நெட்டிமையார் - பாடல் 3
- நெய்தற் கார்க்கியார் - பாடல் 2
- நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் - பாடல் 1
- நெய்தற்றத்தனார் - பாடல் 3
[தொகு] நொ
- நொச்சி நியமங்கிழார் - பாடல் 5
[தொகு] நோ
- நோய்பாடியார் - பாடல் 1
[தொகு] ப
- பக்குடுக்கை நன்கணியார் - பாடல் 1
- படுமரத்து மோசிகீரனார் - பாடல் 3
- படுமரத்து மோசிகொற்றனார் - பாடல் 1
- பதடி வைகலார் - பாடல் 1
- பதுமனார் - பாடல் 1
- பரணர் - பாடல் 85
- பராயனார் - பாடல் 1
- பரூஉமோவாய்ப் பதுமனார் - பாடல் 1
- பறநாட்டுப் பெருங்கொற்றனார் - பாடல் 1
- பனம்பாரனார் - பாடல் 1
[தொகு] பா
- பாடரங்கண்ணனார் - பாடல் 1
- பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன் - பாடல் 1
- பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் - பாடல் 2
- பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் - பாடல் 1
- பாண்டியன் பன்னாடு தந்தான் - பாடல் 1
- பாண்டியன் மாறன் வழுதி - பாடல் 2
- பாரதம் பாடிய பெருந்தேவனார் - பாடல் 5
- பாரிமகளிர் - பாடல் 1
- பார்காப்பான் - பாடல் 1
- பாலைக் கௌதமனார் \ பாடல் 11
- பாலை பாடிய பெருங்கடுங்கோ - பாடல் 68
- பாவைக் கொட்டிலார் - பாடல் 1
[தொகு] பி
- பிசிராந்தையார் - பாடல் 6
- பிரமசாரி - பாடல் 1
- பிரமனார் - பாடல் 1
- பிரான் சாத்தனார் - பாடல் 1
[தொகு] பு
- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் - பாடல் 1
- புல்லாற்றூர் எயிற்றியனார் - பாடல் 1
- புறத்திணை நன்னாகனார்
[தொகு] பூ
- பூங்கணுத்திரையார் | பூங்கண் உத்திரையார் - பாடல் 3
- பூங்கண்ணன் - பாடல் 1
- பூதங்கண்ணனார் - பாடல் 1
- பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு - பாடல் 1
- பூதம்புல்லனார் - பாடல் 1
- பூதனார் - பாடல் 1
- பூதன் தேவனார் - பாடல் 2
[தொகு] பெ
- பெருங்கண்ணனார் - பாடல் 3
- பெருங்குன்றூர் கிழார் - பாடல் 21
- பெருங்கௌசிகனார் - பாடல் 2
- பெருஞ்சாத்தனார் - பாடல் 1
- பெருஞ்சித்திரனார் - பாடல் 10
- பெருந்தலைச்சாத்தனார் - பாடல் 9
- பெருந்தேவனார் - பாடல் 3
- பெருந்தோட் குறுஞ்சாத்தன் - பாடல் 1
- பெரும்பதுமனார் - பாடல் 4
- பெரும்பாக்கன் - பாடல் 1
- பெருவழுதி - பாடல் 2
[தொகு] பே
- பேயனார் - பாடல் 108
- பேய்மகள் இளவெயினி - பாடல் 1
- பேராலவாயர் - பாடல் 6
- பேரிசாத்தனார் - பாடல் 20
- பேரெயின் முறுவலார் - பாடல் 2
[தொகு] பொ
- பொதுக்கயத்துக் கீரந்தை - பாடல் 1
- பொதும்பில் கிழார் - பாடல் 1
- பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் - பாடல் 2
- பொதும்பில் புல்லாளங் கண்ணியார் - பாடல் 1
- பொத்தியார் - பாடல் 5
- பொய்கையார் - பாடல் 3
- பொருந்தில் இளங்கீரனார் - பாடல் 3
- பொன்மணியார் - பாடல் 1
- பொன்முடியார் - பாடல் 3
- பொன்னாகன் - பாடல் 1
[தொகு] போ
- போதனார் - பாடல் 1
- போந்தைப் பசலையார் - பாடல் 1
[தொகு] ம
- மடல் பாடிய மாதங்கீரனார் - பாடல் 2
- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் - பாடல் 13
- மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் - பாடல் 12
- மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் - பாடல் 1
- மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் - பாடல் 1
- மதுரை இளங்கௌசிகனார் - பாடல் 1
- மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் - பாடல் 3
- மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார் - பாடல் 1
- மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் - பாடல் 2
- மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார் - பாடல் 1
- மதுரைக் கணக்காயனார் - பாடல் 5
- மதுரைக் கண்டராதித்தனார் - பாடல் 1
- மதுரைக் கண்ணத்தனார் - பாடல் 2
- மதுரைக் கவுணியன் பூதத்தனார் - பாடல் 1
- மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் - பாடல் 2
- மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் - பாடல் 1
- மதுரைக் காருலவியங் கூத்தனார் - பாடல் 1
- மதுரைக் கூத்தனார் - பாடல் 1
- மதுரைக் கொல்லன் புல்லன் - பாடல் 1
- மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் - பாடல் 2
- மதுரைச் சுள்ளம் போதனார் - பாடல் 1
- மதுரைத் தத்தங்கண்ணனார் - பாடல் 1
- மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார் - பாடல் 1
- மதுரைத் தமிழக் கூத்தனார் - பாடல் 1
- மதுரைப் படைமங்க மன்னியார் - பாடல் 1
- மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் - பாடல் 1
- மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் - பாடல் 1
- மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் - பாடல் 1
- மதுரைப் புல்லங்கண்ணனார் - பாடல் 1
- மதுரைப் பூதன் இளநாகனார் - பாடல் 1
- மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் - பாடல் 1
- மதுரைப் பெருங்கொல்லன் - பாடல் 1
- மதுரைப் பெருமருதனார் - பாடல் 1
- மதுரைப் பெருமருது இளநாகனார் - பாடல் 1
- மதுரைப் போத்தனார் - பாடல் 1
- மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் - பாடல் 2
- மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் - பாடல் 3
- மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் - பாடல் 1
- மதுரை வேளாசன் - பாடல் 1
- மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார் - பாடல் 1
- மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் - பாடல் 1
- மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார் - பாடல் 1
- மருதம் பாடிய இளங்கடுங்கோ - பாடல் 3
- மருதன் இளநாகனார் - பாடல் 79
- மலையனார் - பாடல் 1
- மள்ளனார் - பாடல் 2
[தொகு] மா
- மாங்குடிமருதனார் - பாடல் 13
- மாடலூர் கிழார் - பாடல் 1
- மாதீர்த்தன் - பாடல் 1
- மாமிலாடன் - பாடல் 1
- மாமூலனார் - பாடல் 20
- மாயேண்டன் - பாடல் 1
- மார்க்கண்டேயனார் - பாடல் 1
- மாலைமாறன் - பாடல் 1
- மாவளத்தன் - பாடல் 1
- மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் - பாடல் 1
- மாறோக்கத்து நப்பசலையார் - பாடல் 8
- மாற்பித்தியார் - பாடல் 2
[தொகு] மி
- மிளைக் கந்தன் - பாடல் 1
- மிளைப் பெருங்கந்தன் - பாடல் 3
- மிளைவேள் தித்தன் - பாடல் 1
[தொகு] மீ
- மீனெறி தூண்டிலார் - பாடல் 1
[தொகு] மு
- முக்கல் ஆசான் நல்வெள்ளையார் - பாடல் 1
- முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் - பாடல் 1
- முடத்தாமக்கண்ணியார் - பொருநராற்றுப்படை
- முடத்திருமாறன் - பாடல் 2
- முதுகூத்தனார் -பாடல் 9
- முதுவெங்கண்ணனார் - பாடல் 1
- முப்பேர் நாகனார் - பாடல் 1
- முரஞ்சியூர் முடிநாகராயர் - பாடல் 1
- முள்ளியூர்ப் பூதியார் - பாடல் 1
[தொகு] மூ
- மூலங்கீரனார் - பாடல் 1
[தொகு] மை
- மையோடக் கோவனார் - பாடல் 1
[தொகு] மோ
- மோசிகண்ணத்தனார் - பாடல் 1
- மோசிகீரனார் - பாடல் 9
- மோசிகொற்றன் - பாடல் 1
- மோசிக்கரையனார் - பாடல் 1
- மோசிசாத்தனார் - பாடல் 1
- மோதாசனார் - பாடல் 1
[தொகு] வ
- வடநெடுந்தத்தனார் - பாடல் 1
- வடமவண்ணக்கன் தாமோதரன் - பாடல் 2
- வடமோதங்கிழார் - பாடல் 2
- வண்ணக்கன் சோருமருங் குமரனார் - பாடல் 1
- வண்ணப்புறக் கந்தரத்தனார் - பாடல் 2
- வருமுலையாரித்தி - பாடல் 1
- வன்பரணர் - பாடல் 7
[தொகு] வா
- வாடாப் பிரமந்தன் - பாடல் 1
- வாயிலான் தேவன் - பாடல் 2
- வாயில் இளங்கண்ணன் - பாடல் 1
- வான்மீகியார் - பாடல் 1
[தொகு] வி
- விட்டகுதிரையார் - பாடல் 1
- விரிச்சியூர் நன்னாகனார் - பாடல் 1
- விரியூர் நக்கனார் - பாடல் 1
- வில்லக விரலினார் - பாடல் 1
- விழிகட் பேதைப் பெருங்கண்ணனார் - பாடல் 1
- விற்றூற்று மூதெயினனார் - பாடல் 4
- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் - பாடல் 1
- வினைத்தொழில் சோகீரனார் - பாடல் 1
[தொகு] வீ
- வீரை வெளியனார் - பாடல் 1
- வீரை வெளியன் தித்தனார் - பாடல் 1
[தொகு] வெ
- வெண்கண்ணனார் - பாடல் 2
- வெண்கொற்றன் - பாடல் 1
- வெண்ணிக் குயத்தியார் - பாடல் 1
- வெண்பூதன் - பாடல் 1
- வெண்பூதியார் - பாடல் 3
- வெண்மணிப் பூதி - பாடல் 1
- வெள்ளாடியனார் - பாடல் 1
- வெள்ளியந்தின்னனார் - பாடல் 1
- வெள்ளிவீதியார் - பாடல் 13
- வெள்ளெருக்கிலையார் - பாடல் 2
- வெள்ளைக்குடி நாகனார் - பாடல் 3
- வெள்ளைமாளர் - பாடல் 1
- வெறிபாடிய காமக் கண்ணியார் - பாடல் 2
[தொகு] வே
- வேட்டகண்ணன் - பாடல் 1
- வேம்பற்றூர்க் கண்ணன்கூத்தன் - பாடல் 1
- வேம்பற்றூர்க் குமரனார் - பாடல் 2
[தொகு] சங்கம் மருவிய காலப் புலவர்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோம். கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே இந்தப் பட்டியல் இங்குத் தரப்படுகிறது.
[தொகு] மேற்கோள்கள்
- அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.
- INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE (1970) (சங்கநூல் சொல்லடைவு)