கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இருபாட்டுக்களும் பத்துப்பாட்டு எனும் பத்து பாட்டுக்களின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவது பாடலையும் குறுந்தொகையில் 352ஆவது பாடலையும் இயற்றியவராவார். தொல்காப்பிய மரபியல் 629ஆம் சூத்திரவுரையில் இவர் அந்தணர் என்று சொல்லப்படுகிறார்.

கடியலூர்[தொகு]

தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் என்னும் ஊருக்கு மற்றொரு பெயர் திருக்கடிகை. இந்தக் கடிகையைக் கடியலூர் எனக் கொள்வது பொருத்தமாக உள்ளது.

  • காஞ்சியில் இருந்த தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படுத்தும் பெரும்பாணாற்றுப்படை பாலை நில வழியை முதலில் காட்டுகிறது.
  • சோழன் கரிகாற் பெருவளத்தானிடம் ஆற்றுப்படுத்தும் நூலின் பெயர் பட்டினப்பாலை.
  • இப் புலவரது பிற இரண்டு பாடல்களும் பாலைத்திணை.

எனவே பாலை நிலத்தில் உருத்து இருக்கும் உருத்திரத்தைப் பாடிய புலவர் என்று காட்டக் கண்ணனாருக்கு உருத்திரம் என்னும் அடைமொழி தரப்பட்டுள்ளது.

அகநானூறு 167
குறுந்தொகை 352