பதினெண் கீழ்க்கணக்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பதினெண்கீழ்க்கணக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை.
பொருளடக்கம் |
நூல்வகைகள் [தொகு]
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்:
"நாலடி,நான்மணி,நால்நாற்பது,ஐந்திணை,முப் பால்,கடுகம்,கோவை,பழமொழி,மாமூலம், இன்னிலைய காஞ்சியோடு,ஏலாதி என்பவே, கைந்நிலைய வாம்கீழ்க்கணக்கு."
இத்தொகுதியில் அடங்கியுள்ள நூல்களுள் பெரும்பாலானவை நீதி நூல்களாகும். பதினொரு நூல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. ஆறு நூல்கள் அகத்திணை சார்பானவை. ஒன்று புறத்திணை நூல். இந் நூல்கள் அனைத்தும் சிறு பாடல்களால் ஆனவை. கூடிய அளவாக நான்கு அடிகளை மட்டுமே கொண்டவை.
நீதி நூல்கள் [தொகு]
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- ஏலாதி
- முதுமொழிக்காஞ்சி
அகத்திணை நூல்கள் [தொகு]
புறத்திணை நூல் [தொகு]
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அட்டவணை
| வரிசைஎண் | நூல்பெயர் | பாடல் எண்ணிக்கை | பொருள் | ஆசிரியர் |
|---|---|---|---|---|
| 1. | நாலடியார் | 400 | அறம்/நீதி | சமணமுனிவர்கள் |
| 2. | நான்மணிக்கடிகை | 101 | அறம்/நீதி | விளம்பி நாகனார் |
| 3. | இன்னா நாற்பது | 40+1 | அறம்/நீதி | கபிலர் |
| 4. | இனியவை நாற்பது | 40+1 | அறம்/நீதி | பூதஞ்சேந்தனார் |
| 5. | திரிகடுகம் | 100 | அறம்/நீதி | நல்லாதனார் |
| 6. | ஏலாதி | 80 | அறம்/நீதி | கணிமேதாவியார் |
| 7. | முதுமொழிக்காஞ்சி | 10*10 | அறம்/நீதி | கூடலூர்க்கிழார் |
| 8. | திருக்குறள் | 1330 | அறம்/நீதி | திருவள்ளுவர் |
| 9. | ஆசாரக்கோவை | 100+1 | அறம்/நீதி | பெருவாயின் முள்ளியார் |
| 10. | பழமொழி | 400 | அறம்/நீதி | முன்றுரை அரையனார் |
| 11 | சிறுபஞ்சமூலம் | 104 | அறம்/நீதி | காரியாசான் |
| 12. | ஐந்திணை ஐம்பது | 50 | அகம் | பொறையனார் |
| 13. | ஐந்திணை எழுபது | 70 | அகம் | மூவாதியார் |
| 14. | திணைமொழி ஐம்பது | 50 | அகம் | கண்ணஞ் சேந்தனார் |
| 15. | திணைமாலை நூற்றைம்பது | 150 | அகம் | கணிமேதாவியார் |
| 16. | கைந்நிலை | 60 | அகம் | புல்லங்காடனார் |
| 17. | கார்நாற்பது | 40 | அகம் | கண்ணங்கூத்தனார் |
| 18. | களவழி நாற்பது | 40+1 | புறம் | பொய்கையார் |