நமிதா கபூர் (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நமிதா
இயற் பெயர் நமிதா முக்கேஷ் வன்கவாலா[1]
பிறப்பு மே 10 , 1980.
வேறு பெயர் பைரவி
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2002 - தற்சமயம்

நமிதா (பிறப்பு. மே 10, 1981), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடா, தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார். பெரிதும் கவர்ச்சியாக நடித்துப் புகழ்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் தொலைக்காட்சி நிகழ்நிலை நடனப்போட்டி மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கு பெற்றுள்ளார்.

நமிதா (Namitha) 1981 ஆம் வருடம் மே 10 ஆம் தேதி குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்தார். அவரின் முழுப்பெயர் நமிதா கபூர். நமிதா 2001 ஆம் ஆண்டு மிஸ்.இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பெற்றவர் செலினா ஜெயிட்லி , மூன்றாம் இடம் பெற்றவர் திரிஷா. 'சொந்தம்' என்ற தெலுங்கு படத்தில் அவர் முதன்முதலாக நடித்தார். தமிழில் முதல் படம் 'எங்கள் அண்ணா'. எரிக் மேனிங் இயக்கிய 'மாயா' என்ற ஆங்கிலப் படத்திலும் நமிதா நடித்துள்ளார். நமிதாவிற்கு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் விளையாட பிடிக்கும். அவர் சிறிது காலம் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளார். வெள்ளை ரோஜா அவரின் விருப்பமான மலர் ஆகும்.

நமிதா நடித்துள்ள படங்கள்[தொகு]

  • 1. சொந்தம் - (தெலுங்கு) -2002
  • 2. ஜெமினி - (தெலுங்கு) - 2002
  • 3. ஒக்க ராஜு ஒக்க ராணி - (தெலுங்கு) - 2003
  • 4. எங்கள் அண்ணா - (தமிழ்) - 2004
  • 5. ஒக்க ராதா இதாரு கிருஷ்னுல பெல்லி - (தெலுங்கு) - 2004
  • 6. அய்த்தே எண்டி - (தெலுங்கு) - 2005
  • 7. ஏய் - (தமிழ்) 2005
  • 8. சாணக்யா - (தமிழ்) - 2005
  • 9. பம்பரக் கண்ணாலே - (தமிழ்) - 2005
  • 10. நாயக்குடு - (தெலுங்கு) - 2005
  • 11. ஆணை - (தமிழ்) - 2005
  • 12. இங்கிலீஷ்காரன் - (தமிழ்) - 2005
  • 13. கோவை பிரதர்ஸ் - (தமிழ்) - 2006
  • 14. பச்சைக் குதிரை - (தமிழ்) - 2006
  • 15. தகப்பன்சாமி - (தமிழ்) - 2006
  • 16. நீ வேணுண்டா செல்லம் - (தமிழ்) - 2006
  • 17. நீலகண்டா - (கன்னடம்) - 2006
  • 18. வியாபாரி - (தமிழ்) - 2007
  • 19. நான் அவன் இல்லை - (தமிழ்) - 2007
  • 20. அழகிய தமிழ் மகன் - (தமிழ்) - 2007
  • 21. பில்லா 2007 - (தமிழ்) - 2007
  • 22. சண்ட - (தமிழ்) - 2008
  • 23. பாண்டி - (தமிழ்) - 2008
  • 24. இந்திரா - (கன்னடம்) - 2008
  • 25. பெருமாள் - (தமிழ்) - 2009
  • 26. தீ - (தமிழ்) - 2009
  • 27. 1977 - (தமிழ்) - 2009
  • 28. பில்லா - (தெலுங்கு) - 2009
  • 29. இந்திரவிழா - (தமிழ்)
  • 30. ஜகன்மோகினி - (தமிழ்)
  • 31. பிளாக் ஸ்டாலோன் - (மலையாளம்)
  • 32. தேசதுரோகி - (தமிழ்)(தெலுங்கு)
  • 33. மாயா - (ஆங்கிலம்)
  • 34. கெட்டவன் - (தமிழ்) - தயாரிப்பில்

நமிதா நடித்துள்ள தமிழ் திரைப்படங்கள்[தொகு]

  • எங்கள் அண்ணா (2004)
  • ஏய் (2005)
  • சாணக்கியா (2005)
  • பம்பரக்கண்ணாலே (2007)
  • ஆணை (2005)
  • இங்கிலீஷ்காரன் (2005)
  • கோவை பிரதர்ஸ் (2006)
  • பச்சக் குதிர (2006)
  • தகப்பன்சாமி (2006)
  • நீ வேணுன்டா செல்லம் (2006)
  • வியாபாரி (2007)
  • நான் அவன் இல்லை (2007)
  • அழகிய தமிழ் மகன் - (2007)
  • பில்லா - (2007)

மனிதநேய நடவடிக்கைகள்[தொகு]

நமிதா பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான ஆதரவாளராக இருக்கிறார். ஜூன் 2012 இல், அவர் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த நடிகர் பரத் உடன் கூட்டுச்சேர்ந்தார்.[2]

ஆதாரம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நமிதா_கபூர்_(நடிகை)&oldid=1687740" இருந்து மீள்விக்கப்பட்டது